இன்றைய புனிதர் :
(05-06-2020)
புனிதர் போனிஃபாஸ்
( St. Boniface )
ஆயர்/ மறைசாட்சி :
பிறப்பு : 675
டெவன், இங்கிலாந்து
இறப்பு : 5 ஜூன் 754 (அகவை 79)
ஃப்ரிஸியா (Frisia)
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்கன் திருச்சபை
லூதரன் திருச்சபை
நினைவுத் திருநாள் : ஜூன் 5
வின்ஃப்ரிட் அல்லது வின்ஃப்ரித் (Winfrid, Wynfrith) என்பது இவரது திருமுழுக்கு பெயர் ஆகும். இவரது ஐந்தாம் வயதில் துறவிகள் சிலர் இவரது குடும்பத்தை சந்திக்க வந்தனர். அப்போது வின்ஃப்ரிட், தாமும் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசைபட்டார். தமது 7ம் வயதில் வீட்டின் அருகிலிருந்த ஒரு துறவற மடத்தில் சேர்ந்து கல்வி கற்றார்.
சிறந்த அறிவாளியும், புனிதருமான துறவி ஒருவர், இவருக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். வின்ஃப்ரிட் (போனிஃபாஸ்) தமது படிப்பை முடித்தபின் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது முதன்முதலாக இலத்தின் இலக்கணத்தை ஆங்கிலேயருக்கெனத் தயாரித்தார்.
பின்னர் தமது 30ம் வயதில் குருவாக திருநிலைப் படுத்தப்பட்டார். அதன் பின் வின்ஃப்ரிட் (போனிஃபாஸ்) ஜெர்மனி நாட்டில் மறைபரப்பு பணிக்கு இறைவன் தம்மை அழைப்பதாக உணர்ந்தார். இதனால் 716 ல் ஜெர்மனி வந்தார். பின்னர் அங்கு மறைபரப்பு பணிக்கான சூழ்நிலை இல்லை என்பதால், மீண்டும் தாயகம் திரும்பினார்.
திருத்தந்தையின் ஆசீரோடு போனால் பயன் உண்டு என்று நினைத்து, உரோமை சென்றார். திருத்தந்தை இவரது பெயரை "போனிஃபாஸ்" என்று மாற்றினார். புதிய பெயருடன் ஜெர்மனியில் உள்ள ஹெஸ் (Hess) என்ற பகுதிக்கு சென்றார். அவர் சென்ற நேரத்தில் கொடிய அரசன் ராட்போர்ட் என்பவன் இறந்தான். அவனை அடுத்து வந்த அரசன் இவரிடம் அதிக அன்பு காட்டினார். இதனால் 3 ஆண்டுகள் பிரிஸ்லாந்தில் கடுமையாக உழைத்து மறைபரப்பு பணியை ஆற்றினார்.
இவரின் புனிதமான பணியை பார்த்த குருக்கள் இவரை ஆயராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். ஆனால் போனிஃபாஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இவர் 722ல் உரோமுக்கு செல்ல இவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அங்கே அவர் ஆயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவருக்கு மறைபரப்பு பணியை ஜெர்மனி முழுவதும் பரப்ப பொறுப்பு வழங்கப்பட்டது. திருத்தந்தை, அரசன் சார்லஸ் மார்ட்டலுக்கு (Charles Martel) கொடுத்தனுப்பிய பரிந்துரைக் கடிதம் இதற்கு மிக உதவியாக இருந்தது.
இதன் அடிப்படையில் ஜெர்மனி முழுவதும் இருந்த மூட நம்பிக்கைகளையும், தவறான கொள்கைகளையும் கூண்டோடு அழிக்க அவருக்கு துணிச்சல் ஏற்பட்டது. ஒருமுறை மக்கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி, அவர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த ஒரு வளர்ந்த மரத்தின் முன் நிற்க வைத்து, அம்மரத்தை ஒரு கோடாரி வைத்து வெட்டினார். அம்மரம் 4 துண்டுகளாக பிரிந்து விழுந்தது. இதனால் கடவுளின் சினம் பேராபத்துடன் வரப்போகிறது என்று அம்மக்கள் கதிகலங்கினர்.
எந்த வித ஆபத்தும் இல்லாமற் போகவே, அவர்கள் நம்பிய தெய்வங்கள் பயனற்றவை என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பின் அவர்கள் கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்தனர். அம்மக்களை மனமாற்றியபின் அவர் அங்கிருந்து துரிஞ்சியா பகுதிக்கு மறைபரப்பு பணிக்கு சென்றார். அங்கிருந்த மக்கள் குருக்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தனர்.
இதனால் இங்கிலாந்திலிருந்து ஏராளமான துறவிகளையும், கன்னியர்களையும் அழைத்து வந்தார். 731ல் திருத்தந்தை 2ம் கிரகோரி இறந்தார். அதன்பின் வந்த திருத்தந்தை 3ம் கிரகோரி, போனிஃபாசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி, மறைபரப்பு பணியை திறம்பட தொடர ஊக்கமூட்டினார்.
741ல் மன்னன் சார்லஸ் மார்ட்டலுக்குப் பின், அவரின் மகன்கள் பெப்பின், கார்ல்மென் ஆட்சிக்கு வந்தனர். இவர்களும் போனிஃபாசுக்கு பல சலுகைகளை வழங்கினர். அப்போது இருமுறை ஆயர் பேரவைகளை கூட்டினார். அதன்வழியாக திருச்சபையில் இருந்த பலதரப்பட்ட ஊழல்களை களைந்தார். திருச்சபையில் புதிய இரத்தத்தைப் பாய்ச்சினார். மைன்ஸ்-ஐ (Mainz) தலைநகராகக் கொண்டு, அவர் கர்தினால்களின் அதிகாரங்களுடன் பணியில் ஈடுபட்டார். போனிஃபாசுக்கு மறைபரப்பு பணிக்கு மிக உதவியாய் இருந்த மன்னன் கார்லமென் காலமானார். இதனால் மனமுடைந்த போனிஃபாஸ் துறவுமடம் போக விரும்பி, அங்கு தனிமையை நாடினார். அப்போது அரசன் பெப்பின் இரு நாடுகளையும் ஒன்றிணைத்தான்.
இப்பணி போனிஃபாசுக்கு தன் பணியை எளிதாக ஆற்ற மிகவும் உதவியாயிருந்தது. ஆயர் அப்போது வயது முதிர்ந்தவராக இருந்தார். இதனால் எல்லா விதங்களிலும் தனக்கு உதவியாக இருந்த "லல்" (Lall) என்பவரிடம் தன் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார்.
பின்னர் தன் கையால் முதன்முதலாக திருமுழுக்கு பெற்ற பிரீஸ்லாந்து மக்களிடையே சென்று மறைபரப்பு பணியை தொடர்ந்தார். பிரிஸ்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருள் மங்கிக்கிடந்தது. அம்மக்கள் ஆயரில்லா ஆடுகளை போல இருந்தனர். அப்போது தமது 73ம் வயதில் அம்மக்களை ஒன்றாக கூட்டி கிறிஸ்து உயிர்ப்பு விழாவிற்கு அடுத்த ஞாயிறன்று ஞானஸ்நானம், உறுதிபூசுதல் கொடுக்க "டொக்கு" என்ற இடத்தில் ஏற்பாடு செய்தார். புதிய கிறிஸ்தவர்களின் வருகைக்காக தம் குடிசையில் காத்துக் கொண்டிருக்கும் போது, சில முரடர்களால் தாக்கப்பட்டார். ஆயரின் உடன் பணியாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் "கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுப்போம்" என்று ஆயர் போனிஃபாஸ் கூறும் போதே, முதல் அடி அவர் மேல் விழ, ஆயரின் உயிர் பிரிந்தது. அவரோடு இணைத்து உடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். இன்று இத்தனை நூற்றாண்டுகளாக ஜெர்மனியும், ஃபிரான்சும் ஆழமான விசுவாசமுள்ள நாடுகளாக காட்சியளிக்கின்றன என்றால் அதற்கு அடித்தளமிட்டவர், இரத்தம் சிந்தி உரமிட்டவர் புனித போனிஃபாஸ் என்பதை எவராலும் மறக்க இயலாது.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
† இன்றைய புனிதர் †
(ஜூன் 5)
✠ புனிதர் போனிஃபேஸ் ✠
(St. Boniface)
பேராயர்/ ஜெர்மானியர்களின் அப்போஸ்தலர்/ மறைசாட்சி:
(Archbishop of Mainz/ Apostle of the Germans/ Martyr)
பிறப்பு: கி.பி. 675
கிரெடிடன், டெவன்
(Crediton, Devon)
இறப்பு: ஜூன் 5, 754 (வயது 79)
டோக்கும் அருகே, ஃப்ரிஸியா
(Near Dokkum, Frisia)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
முக்கிய திருத்தலம் :
ஃபுல்டா பேராலயம்
(Fulda Cathedral)
நினைவுத் திருநாள்: ஜூன் 5
பாதுகாவல்:
ஃபுல்டா, ஜெர்மானியா, இங்கிலாந்து
(Fulda, Germania, England)
“வின்ஃப்ரிட்” (Winfrid) அல்லது “வின்ஃப்ரித்” (Wynfrith) எனும் திருமுழுக்கு பெயர் கொண்ட புனிதர் போனிஃபேஸ், "ஆங்கிலோ-சாக்ஸன் இங்கிலாந்து" (Anglo-Saxon England) நாட்டின் "வெஸ்செக்ஸ்" (kingdom of Wessex) அரசில் பிறந்து, "ஃபிராங்கிஷ்" (Frankish Empire) பேரரசின் ஜெர்மானிய பிரதேசங்களில் எட்டாவது நூற்றாண்டில் "ஆங்கிலோ-சாக்ஸன் மறைப்பணி" (Anglo-Saxon mission) ஆற்றிய முன்னணி கிறிஸ்தவ துறவி ஆவார்.
ஜெர்மானியர்களின் அப்போஸ்தலர் (Apostle of the Germans) என அறியப்படும் இவர், "ஆங்கிலேய பெனடிக்டைன் துறவி" (English Benedictine monk) ஆவார். தம்மை தேடி வந்த மடாதிபதி பதவியைத் துறந்த இவர், ஜெர்மானிய பழங்குடி மக்களின் கிறிஸ்தவ மன மாற்றத்திற்காக தமது வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்தார்.
கிறிஸ்தவ மரபுவழி மற்றும் திருத்தந்தையின்மீது கொண்ட விசுவாசம் ஆகிய பண்புகளில் இவர் தனித்து நின்றார்.
மதிப்பும் வசதி வாய்ப்புகளும் உள்ள குடும்பத்தில் பிறந்த வின்ஃப்ரிட் தமது தந்தையின் விருப்பங்களுக்கு மாறாக, சிறு வயதிலேயே தமது வாழ்க்கையை துறவறத்திற்கு அர்ப்பணித்தார். அருகாமையிலுள்ள பெனடிக்டைன் துறவியர் மடத்தில் சேர்ந்து இறையியல் கல்வி கற்றார்.
தமது 30 வயதில் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், இலத்தீன் மொழியின் இலக்கண உரை எழுதினர். கி.பி. 716ம் ஆண்டு, இவரது மடாதிபதியான “வின்பெர்த்” (Wynberth of Nursling) என்பவர் மரித்ததால் இவர் அப்பதவியை ஏற்க அழைக்கப்பட்டார். ஆனால் இந்த நிலைப்பாட்டை நிராகரித்த வின்ஃப்ரிட், மறை பணிகளுக்காக “ஃபிரிசியா” (Frisia) மற்றும் “ஜெர்மானியா” (Germania) நாடுகளை நோக்கி விரைந்தார்.
முதலில் அவர் “யூட்ரெச்ட்” (Utrecht) நாடு சென்றடைந்தார். அங்கே, கி.பி. 690ம் ஆண்டு முதல் மறைபணியாற்றிய “ஃபிரிசியர்களின் அப்போஸ்தலர்” (Apostle of the Frisians) என்றழைக்கப்படும் “வில்லிபிரார்டை” (Willibrord) சந்தித்தார். ஒரு வருடம் அங்கே தங்கிய வின்ஃப்ரிட், கிராமப்புறங்களில் மறை போதனை பணியாற்றினர். ஆனால், அக்காலத்தில், “சார்ள்ஸ் மார்ட்டேல்” (Charles Martel) மற்றும் “ஃபிரிசியா” அரசனான (King of the Frisians) “ராட்பாட்” (Radbod) ஆகிய அரசர்களிடையே நடந்த போரினால் இவர்களாற்றிய மறைபணி வெற்றியடையவில்லை.
சரியாக ஒரு வருடத்தின் பிறகு பெருநிலப்பகுதிக்கு திரும்பிய வின்ஃப்ரிட், நேராக அங்கிருந்து ரோம் நகர் சென்றார். திருத்தந்தை இரண்டாம் கிரகோரி (Pope Gregory II) இவரது பெயரை "போனிஃபேஸ்" என்று மாற்றினார். ஜெர்மானியாவின் மறைபணிகளுக்கான ஆயராக (Missionary Bishop for Germania) இவரை நியமித்தார். ஜெர்மனியில் உள்ள ஹெஸ் (Hess) என்ற பகுதிக்கு சென்றார். திருச்சபையின் நிறுவனங்களோ, மறைமாவட்டங்களோ இல்லாத பிரதேசத்துக்கு ஆயரானார். அதன்பின்னர் அவர் எப்போதுமே இங்கிலாந்து நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. ஆனால் அவர் தனது வாழ்நாளில் தமது நாட்டு மக்களோடும் உறவினர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
ஜெர்மனி முழுவதும் இருந்த மூட நம்பிக்கைகளையும், தவறான கொள்கைகளையும் கூண்டோடு அழிக்க போனிஃபேஸ் முடிவு செய்தார். ஒருமுறை மக்கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி, அவர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த ஒரு வளர்ந்த ஓக் மரத்தின் முன் நிற்க வைத்து, அம்மரத்தை ஒரு கோடாரி வைத்து வெட்டினார். அம்மரம் 4 துண்டுகளாக பிரிந்து விழுந்தது. இதனால் கடவுளின் சினம் பேராபத்துடன் வரப்போகிறது என்று அம்மக்கள் கதிகலங்கினர்.
எந்த வித ஆபத்தும் இல்லாமற் போகவே, அவர்கள் நம்பிய தெய்வங்கள் பயனற்றவை என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பின் அவர்கள் கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவுக்குள் மனம் மாறினார்கள். அங்கே சிறு தேவாலயத்தைக் கட்டி, அதனை புனிதர் பேதுருவுக்கு (Saint Peter) அர்ப்பணித்தார். இச்சிற்றாலயம், “ஃபிரிட்ஸ்லர்” (Fritzlar) மாநிலத்தில் கிறிஸ்தவ துறவற பணிகளுக்கான ஆரம்பமாக இருந்தது. பாகனிசம் (Paganism) இதனால் இங்கே இவரால் தனி ஒரு மனிதரால் வேரறுக்கப்பட்டது.
“ஃபிராங்கிஷ்” (Frankish) மேயர்களின் ஆதரவு போனிஃபேஸுக்கு அவசியமாக இருந்தது. 723ம் ஆண்டு முதல் போனிஃபேஸ் அரசன் “சார்ள்ஸ் மார்ட்டேலின்” (Charles Martel) பாதுகாப்பில் இருந்தார்.
கி.பி. 732ம் ஆண்டு, போனிஃபேஸ் இரண்டாம் முறையாக ரோம் பயணித்தார். இம்முறை, திருத்தந்தை மூன்றாம் கிரகோரி (Pope Gregory III) இவரை முழு ஜெர்மானிய பிராந்தியத்துக்கும் பேராயராக நியமித்தார். போனிஃபேஸ் ஆயிரக்கணக்கான மக்களை திருமுழுக்கு அளித்து மனம் மாற்றினார்.
கி.பி. 737–38ம் ஆண்டுகளில், போனிஃபேஸின் மூன்றாவது ரோம் பயணத்தின்போது, இவர் ஜெர்மனிக்கான திருத்தந்தையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இவரது மூன்றாவது ரோம் பயணத்தின் பின்னர், அரசன் சார்ள்ஸ் மார்ட்டேல் (Charles Martel) பவேரியாவில் (Bavaria) “சல்ஸ்பர்க்”, “ரெஜென்ஸ்பர்க்”, ஃப்ரெய்சிங்”, மற்றும் “பஸ்சாவு” (Salzburg, Regensburg, Freising, and Passau) ஆகிய நான்கு மறைமாவட்டங்களை தோற்றுவித்து அவற்றை பேராயர் போனிஃபேஸின் உயர்மரைமாவட்டம் மற்றும் பெருநகரத்தின் கீழே கொடுத்தார்.
பின்னர் தன் கையால் முதன்முதலாக திருமுழுக்கு பெற்ற பிரீஸ்லாந்து மக்களிடையே சென்று மறைபரப்பு பணியை தொடர்ந்தார். பிரிஸ்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருள் மங்கிக்கிடந்தது. அம்மக்கள் ஆயரில்லா ஆடுகளை போல இருந்தனர். அப்போது தமது 73ம் வயதில் அம்மக்களை ஒன்றாக கூட்டி கிறிஸ்து உயிர்ப்பு விழாவிற்கு அடுத்த ஞாயிறன்று ஞானஸ்நானம், உறுதிபூசுதல் கொடுக்க "டொக்கு" என்ற இடத்தில் ஏற்பாடு செய்தார். புதிய கிறிஸ்தவர்களின் வருகைக்காக தம் குடிசையில் காத்துக் கொண்டிருக்கும்போது, சில கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டார். பேராயரின் உடன் பணியாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் "கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுப்போம்" என்று போனிஃபேஸ் கூறும் போதே, முதல் அடி அவர் மேல் விழ, அன்னாரின் உயிர் பிரிந்தது. அவரோடு இணைத்து உடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். இன்று இத்தனை நூற்றாண்டுகளாக ஜெர்மனியும், ஃபிரான்சும் ஆழமான விசுவாசமுள்ள நாடுகளாக காட்சியளிக்கின்றன என்றால் அதற்கு அடித்தளமிட்டவர், இரத்தம் சிந்தி உரமிட்டவர் புனிதர் போனிஃபேஸ் என்பதை எவராலும் மறக்க இயலாது.
† Saint of the Day †
(June 5)
✠ St. Boniface ✠
Archbishop of Mainz/ Apostle of the Germans/ Martyr:
Born: 675 AD
Crediton, Devon
Died: June 5, 754 (Aged 79)
Near Dokkum, Frisia
Venerated in:
Roman Catholic Church
Lutheran Church
Anglican Communion
Eastern Orthodox Church
Major shrine:
Fulda Cathedral, St Boniface Catholic Church, Crediton, UK
Feast: June 5
Patronage:
Fulda; Germany, England (Orthodox Church; Jointly with Ss. Augustine of Canterbury, and Cuthbert of Lindisfarne) and the Netherlands
Saint Boniface, born Winfrid in the Devon town of Crediton, England, was a leading figure in the Anglo-Saxon mission to the Germanic parts of the Frankish Empire during the 8th century. He organized significant foundations of the Catholic Church in Germany and was made archbishop of Mainz by Pope Gregory III. He was martyred in Frisia in 754, along with 52 others, and his remains were returned to Fulda, where they rest in a sarcophagus which became a site of pilgrimage. Boniface's life and death as well as his work became widely known, there is a wealth of material available—a number of vitae, especially the near-contemporary Vita Bonifatii auctore Willibaldi, legal documents, possibly some sermons, and above all his correspondence. He became the patron saint of Germania, known as the "Apostle of the Germans".
Norman F. Cantor notes the three roles Boniface played that made him "one of the truly outstanding creators of first Europe, as the apostle of Germania, the reformer of the Frankish church, and the chief fomenter of the alliance between the papacy and the Carolingian family." Through his efforts to reorganize and regulate the church of the Franks, he helped shape the Latin Church in Europe, and many of the dioceses he proposed to remain today. After his martyrdom, he was quickly hailed as a saint in Fulda and other areas in Germania and in England. He is still venerated strongly today by German Catholics. Boniface is celebrated (and criticized) as a missionary; he is regarded as a unifier of Europe, and he is seen (mainly by Catholics) as a Germanic national figure.
At age 7 he entered the monastery of Adescancastre on the site of present-day Exeter. Seven years later he went to the Abbey of Nhutscelle. Here, under the direction of the holy Abbot Wilbert, his fame for knowledge and preaching grew.
He set aside, however, prospects of the highest dignities in his own country, because he felt the vocation to convert the pagan Anglo-Saxons in Germany. By the order of Pope Gregory II, he dedicated himself to their conversion. He helped Charles Martel in the reform of the Church in France and convened councils to combat simony.
In 719 the monk Winfred took this oath to Pope Gregory II in Rome, when he was made Bishop and given the name of Boniface:
“In the name of the Lord Our God and Savior Jesus Christ. In the sixth year of the reign of Emperor Leo IV and of his son Constantine, I, Boniface, Bishop by the grace of God, promise to thee, Blessed Peter, Prince of the Apostles, and to thy Vicar, the blessed Pope Gregory and his successors, by the indivisible Trinity, Father, Son, and Holy Ghost, and by Thy Sacred Body here present, that I will conserve the purity of the holy Catholic Faith, and I will remain steadfast in the unity of this belief, in which indubitably lies the salvation of all Christians. I will never attack the unity of the Catholic Church, no matter who may seek to persuade me, but will maintain a complete fidelity to it, and a sincere commitment to thee and the interests of thy Church.
“To thee and thy successors the Lord gave the power to bind and unbind. I promise that I will never have communion with bishops who go astray from the ancient practices established by the Holy Fathers, and that, if I can, I will prevent their actions. If I cannot, I will denounce them to the Pope my Lord. If in any way, God forbid, I should act in opposition to this oath, let me assume the guilt before the judgment of God, receiving the chastisements of Ananias and Saphira, who lied to thee.
“I Boniface, humble Bishop, sign by my own hand the formula of this oath and place it over the body of Blessed Peter. As prescribed, I make this oath before God, who is Judge and Witness. I promise to fulfill it well.”
Pope Gregory II wrote this letter to present St. Boniface in his commission to evangelize Germany and reorganize the Church there:
“If anyone, God forbid, either oppose the work of Bishop Boniface or thwart his ministry or that of his successors in the apostolate, by the Divine Judge, let him be anathema and subject to eternal condemnation.”
St. Boniface suffered martyrdom in Frisia in 754. His body rests in the cathedral crypt in Fulda, where he is venerated by all Catholic Germany. He is the patron saint of Germany and the Netherlands.
Comments:
For you to have an idea of the role of this saint in the foundation of the Middle Ages, perhaps it is worthwhile to insert the data of this selection into the larger panorama of the times.
First, St. Boniface was a monk in an epoch when the monastic life was the most dynamic force of the Church. This energy came from the great monasteries of monks who lived a recollected life. The characteristic note of the Benedictine monasteries, unlike today, was to live away from the cities, in places of solitude. Given their prestige, often entire villages or even cities would grow up around those isolated convents.
Therefore, St. Boniface was an active participant in the most important ecclesiastical movement of his time, which brought the Middle Ages to its apogee.
Second, St. Boniface was a missionary. One of the great works of the Middle Ages was the evangelization of the barbarian peoples. At his time, most of Europe beyond the Rhine and Danube Rivers was barbarian, as barbarian as the Indians who still live today in the South American forests. The work of conversion and civilization of those peoples was enormous and had great value. One can measure this value considering the magnificent fruits these peoples gave for Christendom after their conversion. This work, in great part, was the work of monks, and particularly the work of this one monk who was St. Boniface.
Third, the part of Europe constituted by France, Italy, England, and some of Spain was Catholic and constituted the first Christendom. However, that Christendom was putrid. It had inherited the rottenness of the Roman Empire. One of the most pernicious vices of the time was simony, and St. Boniface exerted an important role in combating the plague of simony.
What is simony? It is the selling of ecclesiastical positions and charges. Cardinals would sell dioceses to bishops; bishops would sell positions to priests, etc. St. Boniface convoked regional councils to eradicate simony from France. Here also, he revealed his greatness and valor.
He lived in a great epoch for the Church, because she accomplished momentous works. In most of these works, St. Boniface was present and played a capital role.
Now that you understand the grandeur of this man, let us analyze the beautiful oath he made to Pope Gregory II when he was consecrated Bishop.
That oath is beautiful because it is an act of Faith he made with regard to the Catholic Church and the Roman See. He promised to be always faithful to the Papacy. Then he promised to never have any common ground with bad bishops. Further, he promised to try to prevent those bishops from spreading their bad influence and, if he were unsuccessful, to denounce them to the Pope. That is, he vowed a total war against evil bishops.
Then, after manifesting his fidelity, he called down a chastisement upon himself if he were not faithful: the chastisement of Ananias and Saphira. What kind of punishment was that? The Acts of the Apostles report that Ananias and Saphira were a married couple who had many goods. They presented themselves to St. Peter to be received into the Catholic community, delivering a certain part of their goods, and affirmed: “This is all we have, and we give this to the Church.” St. Peter told them: “You lie to the Holy Ghost because I know that you secretly reserved a part of your goods for yourselves.” And the two were struck dead by God.
St. Boniface mentioned this episode because, in his oath, he was saying to St. Peter, “I have given everything to the Church.” So, his donation was similar to that which Ananias and Saphira pretended to have made. He faced that analogy, indicating that if perchance, he was reserving anything for himself, he would be making a fraud like theirs. In the face of such a possibility, he asked for a similar chastisement.
Then, we have Pope Gregory II’s letter regarding St. Boniface. It is interesting to consider how the Pope used to act in those times. If someone were to do wrong, he would receive a strong reproach from the Pope: “Let eternal condemnation fall upon him.” Today, most people would object: “But this reflects ire and, therefore, a certain imperfection.” I don’t agree. What it reflects is ire against the sin, and against the sinner for his error.
Those were times of coherence, severity, and justice. Someone might say with relief, “Fortunately this does not happen today.” I am not so sure of that. According to the chastisements predicted by Our Lady in Fatima, at a certain moment, the chalice of God’s wrath will be filled, and He will let His sword fall over the world. We should be prepared for this moment, and be prepared to adore the sanctity of God as He punishes. He will chastise because He is Holy and cannot tolerate the empire of evil in which we are living. His hatred for this evil will reveal His sanctity.
We should admire severe formulas like those written by Pope Gregory II and that of St. Boniface asking a terrible chastisement to fall upon him should he fall astray in his mission. They demonstrate the abhorrence that true Popes and Saints have of evil, and by contrast, they show all the goodness that the Catholic Church possesses.
These are the comments that occur to me apropos this selection from the life of St. Boniface.
Let us ask him to give us a dedication similar to his for Holy Mother Church and the Papacy, as well as a sincere admiration for his holy severity.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira
No comments:
Post a Comment