ஜூன் 05
புனித சஞ்சோ (-851)
இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள அல்பி என்ற இடத்தில் பிறந்தவர்.
சிறுவயதிலேயே இவரை மூர் என்ற இனத்தவர் கைதுசெய்து, ஸ்பெயின் நாட்டிலுள்ள கோர்தோபா என்ற இடத்தில் அடிமையாக விற்றனர். அப்பொழுது இவரை கோர்தோபாவில் மன்னராக இருந்தவர் விலைக்கு வாங்கித் தன்னுடைய அரண்மனையில் பணியாளராக வைத்துக் கொண்டார்.
அரண்மனையில் பணியாளராகப் பணியாற்றிய தொடங்கிய இவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகவும் பொறுப்புடனும் உண்மையுடனும் செய்து வந்தார். இதனால் இவரை மன்னருக்கு மிகவும் பிடித்துப்போனது.
அங்கேயேதான் இவர் தன்னுடைய கல்வியை கற்றுக் கொண்டு, கிறிஸ்துவைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
இந்த நேரத்தில் மூர் இனத்தவர் இவரை கிறிஸ்துவை மறுதலித்துவிட்டுத் தாங்கள் வழிபட்டு வந்த கடவுளை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர். இவர் அதற்கு மறுத்ததால், அவர்கள் இவருடைய தலையை வெட்டிக் கொன்று போட்டார்கள். இவ்வாறு இவர் ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்.
No comments:
Post a Comment