ஜூன் 06
அருளாளர் மரிய கர்லோவ்ஸ்கா (1865-1935)
இவர் போலந்து நாட்டில் பிறந்தவர். இவருடைய குடும்பத்தில் இவர் கடைசிக் குழந்தை; இவரோடு பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர்.
சிறுவயதிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்த இவர், தன்னுடைய உறவினரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சில காலத்திற்குப் பெர்லினில் துணிகளை நெய்து வந்த தன்னுடைய சகோதரியோடு சேர்ந்து பணிசெய்த இவர், அங்கிருந்து தன்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தார்.
அப்பொழுது இவர் பிராங்கே என்றோர் இளம்பெண்ணைச் சந்தித்தார். அவரிடம் இவர் பேசுகின்றபொழுது, அவர் குடும்பத்தால் கைவிடப்பட்டவர் என்பது தெரியவந்தது. உடனே இவர் குடும்பத்தால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், விலைமகளிர் ஆகியோரின் மறுவாழ்விற்காக ஒரு சபையைத் தொடங்குவது நல்லது என்று முடிவு செய்து, அதன்படி Sisters of Divine Shepherd of Divine Providence என்ற சபையைக் தொடங்கினார்.
இதன்பிறகு இவர் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், விலைமகளிர் ஆகியோரின் மறுவாழ்வுக்காகக் கடுமையாக உழைத்தார். இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின்மீது மிகுந்த பற்று கொண்ட இவர், அவரிடம் நம்பிக்கையோடு மன்றாடி வந்தார்.
இப்படி இறைவன்மீது மிகுந்த பற்று கொண்டு, இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த இவர், 1935 ஆம் ஆண்டு தன்னுடைய அறுபதாவது வயதில் இறையடி சேர்ந்தார்.
இவருக்கு 1997ஆம் ஆண்டு ஜூன் திங்கள் ஆறாம் நாள், புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது
No comments:
Post a Comment