இன்றைய புனிதர்
2020-06-07
புனித மரிய தெரேசியா டி சோபிரான் (St. Maria Theresia de Soubiran)
சபை நிறுவுனர்
பிறப்பு
1834
காஷ்டல்நாடரி(Castelnaudary)
இறப்பு
7 ஜூன் 1889
முக்திபேறுபட்டம்: 1946, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
இவர் தனது 21 ஆம் வயதிலிருந்து அன்னைமரியிடம் கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை அர்ப்பணித்து துறவற வாழ்வை வாழ்ந்தார். தன்னுடன் 14 இளம் பெண்களையும் சேர்த்து அனைவரும் ஒரே குழுமமாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இக்குழுவை நாளடைவில் பல இளம் பெண்கள் இனங்கண்டு கொண்டு, தங்களையும் அக்குழுவோடு இணைத்தார். இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, மரிய தெரேசியா டி சோபிரான், தன் பிறந்த ஊரிலேயே ஒரு துறவற இல்லம் தொடங்கினார். இவ்வில்லத்தை இயேசு சபையை சார்ந்த அருட்தந்தை மரியா அக்சீலியாடிஸ் (Maria Auxiliatrice) என்பவர் உதவிசெய்து, ஆன்ம குருவாக பணியாற்றி வழிநடத்திவந்தார். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஜெபித்து, அன்னையின் அருளால் "மரியன்னையின் உதவியாளர்கள்"(Mariens von der immer währenden Hilfe) என்று தங்களின் சபைக்கு பெயர் சூட்டினர்.
இச்சபையினர் தேவையில் இருக்கும் மனிதர்களை இனங்கண்டு, ஏழைகளைத் தேடி சென்று உதவி செய்து வந்தனர். இவர்களின் பணி சிறக்கவே 1868 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால், முறையான துறவற சபையாக அங்கீகரிக்கப்பட்டது. இதன்பின் தன் 34 ஆம் வயதில் அச்சபையின் முதல் சபைத்தலைவியாக மரிய தெரேசியா டி சோபிரான் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். அதன்பின் பல அவதூறுகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இதனால் 1873 ஆம் ஆண்டு சபைத்தலைவி பதவியிலிருந்து தானே முன்வந்து விலகினார். அதன்பின் அச்சபையை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அச்சபையிலிருந்து வெளியேறி "இயேசுவின் இறை இரக்கத்தின் கன்னியர்கள்"(Barmherzigen Sisters) என்ற சபையில் சேர்ந்து, தான் இறக்கும்வரை அங்கேயே தன் வாழ்நாட்களை கழித்தார்.
செபம்:
அன்பான தந்தையே! தன்னுடைய சிறுவயதிலேயே அன்னை மரியிடம் தன் வாழ்வை அர்ப்பணமாக்கிய மரியா தெரேசியாவைப்போல, நாங்களும் அன்னையின்மேல் அன்பு கொண்டு, தங்களை எந்நாளும் அர்ப்பணித்து வாழ உமதருளைத் தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஆயர் சபைநிறுவுநர் அந்தோனியுஸ் கியானெல்லி Antonius Gianelli
பிறப்பு: 12 ஏப்ரல் 1789 செரிரோட்டோ Cerreto, இத்தாலி
இறப்பு: 7 ஜூன் 1846, பியாசென்சா Piacenza, இத்தாலி
கோண்டாட் நகர் துறவி யூஸ்டூஸ் Justus von Condat OSB
பிறப்பு: 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, கோண்டாட் Condat, பிரான்சு
நியூமுன்ஸ்டர் நகர் துறவி ரூபர்ட் Robert von Newminster
பிறப்பு: 1105, கார்வன் Garven
No comments:
Post a Comment