ஜூலை 17
புனித மார்செலினா (327-397)
இவர் இத்தாலி நாட்டில் உள்ள கால் என்ற இடத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஓர் அரசு அதிகாரி. இவருடைய சகோதரர்தான் புனித அம்புரோஸ்.
354 ஆம் ஆண்டு இவரது குடும்பம் உரோமைக்குக் குடிபெயர்ந்தது. அங்கு சென்ற ஒரு சில ஆண்டுகளிலேயே இவருடைய பெற்றோர் இறந்து போனார்கள். இதனால் இவரே தன் சகோதரன் அம்புரோசையும், சகோதரி ஒருவரையும் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இறைவேண்டலுக்கும் நோன்புக்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்த இவர், தனது எடுத்துக்காட்டான வாழ்வால் தன் சகோதரர், சகோதரிக்கு முன்மாதிரியாக விளங்கினார்.
இவரது முன்மாதிரியான வாழ்வால் தொடப்பட்ட இவரது சகோதரர் அம்புரோஸ் பின்நாளில் அருள்பணியாளராகவும், தொடர்ந்து மிலன் நகரின் ஆயராகவும் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 398 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment