ஜூலை 15
புனித விளாடிமிர் (956 - 1015)
இவர் இரஷ்ய நாட்டைச் சார்ந்தவர். இவருடைய பாட்டிதான் அரசியான புனித ஆல்கா.
இவர் வளர்ந்து பெரியவரானபோது, இவருடைய தந்தை இவரை நோவ்கோரோத் என்ற பகுதியின் மன்னராக நியமித்தார்; ஆனால், இவருடைய நெருங்கிய உறவினர்கள் இவருக்கு எதிராகக் கலகம் செய்ததால் இவர் அங்கிருந்து தப்பியோட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தக்க காலம் வந்தபோது, இவர் நோவ்கோரோத்தின்மீது படையெடுத்துச் சென்று, அப்பகுதியை மீண்டுமாக ஆட்சி செய்யத் தொடங்கினார். இதற்குப் பின்பு இவர் பல நாடுகள்மீது படையெடுத்துச் சென்றார்; பலரைக் கொன்று போட்டார்.
இப்படி இருக்கும்பொழுது, இவர் கிறிஸ்துவின் போதனையைப் பற்றிக் கேள்விப்பட்டு மனம்மாறி, நல்லதொரு வாழ்க்கை வாழ தொடங்கினார். இதற்குப் பின்பு இவர் இரண்டாம் பேசில் என்பவருடைய மகள் ஆன் என்பவரை மணந்து இரஷ்ய நாட்டின் அரசரானார்.
இவர் இரஷ்ய நாட்டின் மன்னரான பின்பு மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்கினார். நல்ல கல்வியை கொடுத்தார்; பல பள்ளிக்கூடங்களையும் கோயில்களையும் கட்டி எழுப்பினார். மேலும் இரஷ்யாவில் கிறிஸ்தவம் தலைத்தோங்குவதற்கு மறைப்பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.
இப்படிப்பட்டவர் ஒருசில சதிகாரர்களின் சூழ்ச்சியால் 1015 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
இவர் இரஷ்ய நாட்டுக் கிறிஸ்தவர்களின் பாதுகாவலராக இருக்கிறார்.
Saint Vladimir of Kiev's Story
St. Vladimir I, 956-1015, Grandson of St. Olga and illegitimate son of Sviastoslav, grand duke of Kiev, and his mistress, Malushka, he was given Novgorod to rule by his father. Civil war broke out between his half-brothers Yaropolk and Oleg; Yaropolk made himself ruler by defeating and killing Oleg, and when he captured Novgorod, Vladimirwas forced to flee to Scandinavia in 977. Vladimir returned with an army and captured Novgorod and defeated and slew Yaropolk at Rodno in 980; Vladimir was now sole ruler of Russia, notorious for his barbarism and immorality. After his conquest of Kherson in the Crimea in 988, he became impressed by the progrerss of Christianity and approached Eastern Emperor Basil II about marrying the emperor's daughter Ann. He was converted, reformed his life and married Anne. On his return to Kiev, he invited Greek missionaries to Russia, let his people to Christianity, borrowed canonical feacures from the West and built schools and churches. His later years were troubled by rebellions led by the sons of his first marriages, although two sons by Anne, SS Romanus and David became martyrs. In 1014 he was obliged to march against his rebellious son Yaroslav in Novgorod, fell ill on the way and died at Beresyx, Russia. He is patron of the Russian Catholics. Feast day July 15.
No comments:
Post a Comment