புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 July 2020

புனித பொனவந்தூர் (St. Bonaventure)ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church) July 15

இன்றைய புனிதர் :
(15-07-2020)

புனித பொனவந்தூர் (St. Bonaventure)
ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)
பிறப்பு 
1218 
தஸ்கனி ( Tuscany), இத்தாலி
    
இறப்பு 
1274 
லயனஸ்(Lyons), பிரான்ஸ்

இவரின் திருமுழுக்கு பெயர் ஜான். இவர் 4 வயது இருக்கும்போது கொடிய நோயால் தாக்கப்பட்டார். புனித அசிசியாரிடம் வேண்டிய பிறகு அவரின் நோய் அவரைவிட்டு விலகியது. இதனால் இவர் தன் இளம் வயதிலிருந்தே அசிசியாரிடம் அளவு கடந்த பக்திக்கொண்டிருந்தார். தன் படிப்பை முடித்த பின், தன்னை புனித அசிசி சபையில் அர்ப்பணிக்க விரும்பினார். துறவற சபையில் தன்னை அர்ப்பணித்தபின், இவரின் 36 ஆம் வயதில், சபைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சபையை நன்கு வளர்த்தெடுத்தார். இவர் அச்சபைக்கு ஆற்றியத்தொண்டால், இவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார். 

இவர்தான் மூவேளை செபத்தை முதன்முதலில் தன் சபையில் அறிமுகப்படுத்தினார். இன்று இச்செபம் திருச்சபையிலும் வேரூன்றியுள்ளது. இவர் பலரின் கட்டாயத்தினால் அல்பேனிய நாட்டின் ஆயராகவும், கர்தினாலாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 2 ஆம் லியோன் பொதுச் சங்கத்தில், சில கருத்துக்களை நுணுக்கமாய் ஆராய தயாரித்துக்கொடுத்தார். அப்போதுதான் கிழக்கு, மேற்கத்திய திருச்சபைகளையும் ஒன்று சேர்த்தார். லியோன் பொதுசங்கம் நடக்கும்போது, இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். திருத்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் இறையன்பு, செபம், காட்சி தியானம் இவைகளில் தன் நேரங்களை செலவிட்டார். 

இவர் ஒருநாள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அப்போதுதான் திருத்தந்தை 10 ஆம் கிரகோரியார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதை அறிவிக்க, கர்தினாலின் தொப்பியையும் எடுத்து சென்று, செய்தியை அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் தன் வேலையை முடித்து வரும்வரை அத்தொப்பியை அருகிலிருக்கும் மரக்கிளையில் தொங்கவிட சொன்னார். இதிலிருந்து அவரின் தாழ்ச்சி எத்தமையது என்பது வெளிப்பட்டது. 


செபம்:
என்றும் வாழும் கடவுளே! அசிசியாரை போலவே தன் வாழ்வை வாழ்ந்த புனித பொனவெந்தூரை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஏழை மக்களின்மேல், அளவில்லா அன்பு கொண்டு நோயால் தாக்கப்பட்டவர்களுக்காக தன்னையே அர்ப்பணம் செய்து நோய்களை அன்பின் வழியாக குணமாக்கிய இப்புனிதரை போல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் அன்புகாட்டி வழிநடத்த தேவையான வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (15-07-2020)

St. Bonaventure

He was born in Italy in the year 1221 to Giovanni di Fidenza and Maria Ritella. His baptismal name was John. There is a legend that when John was affected by a dangerous disease as a child, his mother pleaded St. Francis of Assisi to cure him. St. Francis of Assisi on seeing the child John foresaw future greatness for John and said loudly 'O Buona Ventura' meaning O good fortune. Bonaventure is the different form of the words 'O Buona Ventura', St. Francis of Assisi uttered about John. He entered the Franciscan Order in 1243 and studied at the University of Paris and took a degree of Masters, which was equivalent to Doctor’s degree in those days. In Paris he became a close friend of the famous Thomas Aquinas and the holy king Louis. He was elected 7th Minister General of the Franciscan Order. He was also instrumental in procuring the election of Pope Gregory-X. St. Bonaventure was made cardinal-archbishop of Albano by Pope Gregory-X. St. Bonaventure was also present at the Council of Lyon in 1274 and participated in the deliberations. He died suddenly on July 15, 1274 in suspicious circumstances, possibly due to poisoning.

He was canonized by the Franciscan Pope Sixtus-IV on April 14, 1482. Another Franciscan Pope Sixtus-V declared St. Bonaventure Doctor of the Church in the year 1588.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஜூலை 15)

✠ புனிதர் பொனவென்ச்சர் ✠
(St. Bonaventure)

கர்தினால் ஆயர், மறைவல்லுநர்: 
(Cardinal Bishop of Albano, Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 1221
பக்னோரெஜியோ, விடேர்போ பிராந்தியம், லேடியம், திருத்தந்தையர் மாநிலம்
(Bagnoregio, Province of Viterbo, Latium, Papal States)

இறப்பு: ஜூலை 15, 1274 (வயது 52–53)
லியோன், லியோன்னைஸ், ஆர்ல்ஸ் அரசு
(Lyon, Lyonnais, Kingdom of Arles)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 14, 1482
திருத்தந்தை நான்காம் சிக்ஸ்டஸ்
(Pope Sixtus IV)

நினைவுத் திருவிழா: ஜூலை 15

புனிதர் பொனவென்ச்சர், இத்தாலிய மத்திய கால இறையியலாளரும் (Italian Medieval Franciscan), மெய்யியளாலரும் (Scholastic Theologian) ஆவார். ஃபிரான்சிஸ்கன் சபையின் ஏழாவது தலைவராக (The seventh Minister General of the Order of Friars Minor) பணியாற்றியவர் இவர், அல்பேனோவின் கர்தினல்-ஆயர் (Cardinal Bishop of Albano) ஆவார். கி.பி. 1482ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் தேதியன்று, திருத்தந்தை நான்காம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus IV) இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார். திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus V) கி.பி. 1588ம் ஆண்டு, இவரை திருச்சபையின் மறைவல்லுநர் (Doctor of the Church) என அறிவித்தார். இவரை "தெய்வீக மறைவல்லுநர்" (Seraphic Doctor) எனவும் அழைப்பர்.

“கியோவன்னி டி ஃபிடான்ஸா” (Giovanni di Fidanza) எனும் இயற்பெயர் கொண்ட பொனவென்ச்சரின் பெற்றோரின் பெயரைத் தவிர இவரைப்பற்றிய குழந்தைப் பருவம் பற்றின எந்த தகவல்களும் இல்லை. இவரது தந்தையாரின் பெயரும் “கியோவன்னி டி ஃபிடான்ஸா” (Giovanni di Fidanza) ஆகும். தாயாரின் பெயர் “மரியா ரிடெல்லா” (Maria Ritella) ஆகும். அப்போதைய திருத்தந்தையர் மாநிலத்தின் (Papal States) பிராந்தியமான “ஊம்ப்ரியாவின்” (Umbria) அருகேயுள்ள “பக்னோரெஜியோ” (Bagnoregio) எனும் இடத்தில் பிறந்தவர்.

கி.பி. 1243ம் ஆண்டு, தமது 22ம் வயதில், பொனவென்ச்சர் ஃபிரான்சிஸ்கன் சபையில் (Franciscan Order) சேர்ந்து, “பாரிஸ் பல்கலையில்” (University of Paris) “அலெக்சாண்டர்” (Alexander of Hales) மற்றும் “ஜான்” (John of Rochelle) ஆகிய இரண்டு புகழ் பெற்ற ஆசிரியர்களிடம் கல்வி பயின்றார். பத்தே வருடங்களில் (கி.பி. 1253ம் ஆண்டு) பாரிஸ் நகர ஃபிரான்சிஸ்கன் சபையின் தலைமைப் பொறுப்பேற்றார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் “பீட்டர் லொம்பார்ட்” (Peter Lombard) எழுதிய “வசனங்களின் நான்கு புத்தகங்கள்” (The Four Books of Sentences) என்ற இறையியல் புத்தக விரிவுரையாளராகும் பெருமை நான்கு வருடங்களுக்கு முன்னரே அவருக்கு கிட்டியது.

தமது எதிர்ப்பாளர்களின் நிந்தைகளிலிருந்து சபையை வெற்றிகரமாக பாதுகாத்த பின்னர், சபையின் தலைவராக (Minister General of the Order of Friars Minor) பொனவென்ச்சர் தேர்வு செய்யப்பட்டார். கி.பி. 1265ம் ஆண்டு, நவம்பர் மாதம், 24ம் நாளன்று, “யோர்க் உயர்மறைமாவட்ட பேராயராக” (Archbishop of York) நியமனம் பெற்றார். ஆனால், பேராயராக அருட்பொழிவு செய்யப்படாமலேயே, கி.பி. 1266ம் ஆண்டு, அக்டோபர் மாதம், தமது நியமனத்தை கைவிட்டார்.

திருத்தந்தை “பத்தாம் கிரகோரியின்” (Pope Gregory X) தேர்தல் நடக்க பொனவென்ச்சர் ஒரு கருவியாக இருந்திருக்கிறார். திருத்தந்தை இவருக்கு “அல்பேனோவின் கர்தினால் ஆயர்” (Cardinal Bishop of Albano) எனும் பதவியை பரிசளித்து மகிழ்ந்தார். அத்துடன், கி.பி. 1274ம் ஆண்டு “லியோன்” நகரில் நடக்கவிருந்த இரண்டாம் பெரிய ஆலோசனை மன்றத்தில் (Great Second Council of Lyon) பங்கேற்க அறிவுறுத்தினார். இரண்டாம் பெரிய ஆலோசனை மன்றத்தில் இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், கிரேக்க மற்றும் லத்தீன் திருச்சபைகளின் ஐக்கியத்திற்கு வழிவகுத்தது. 

பொனவென்ச்சர், திடீரென்று சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் மரித்துப் போனார். அவர் ஃபிரான்சிஸ்கன் துறவியரை மிதமான, அறிவார்ந்த வகையில் வழிநடத்தினார். அது, இயேசு சபையினர் வரும்வரை அதற்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றுத் தந்தது. அவரது இறையியல், முற்றிலும் நம்பிக்கை மற்றும் காரணங்களை ஒருங்கிணைக்க ஒரு முயற்சி மூலம் குறிக்கப்பட்டது. விசுவாசத்தில் தொடங்கும் அறிவினை மனித இனத்துக்கு தரும் கிறிஸ்துவே உண்மையான தலைவர் என்று எண்ணினார். அறிவார்ந்த புரிதல் மூலம் உருவாக்கப்பட்டு, கடவுளின் ஐக்கியம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது என்று நம்பினார்.

No comments:

Post a Comment