ஜூலை 1
புனித அர்நூல்ஃப்
இவர் ஜெர்மனியைச் சார்ந்தவர்.
சிறு வயதிலேயே இவர் இறைவன்மீது மிகுந்த பற்றும் ஏழைகளின்மீது கரிசனையும் கொண்டு வாழ்ந்து வந்தார்.
1153 ஆம் ஆண்டு இவர் ஜெர்மனியிலுள்ள மெயின்ஸ் என்ற மறைமாவட்டத்தின் ஆயராக உயர்த்தப்பட்டார்.
இதன் பிறகு இவர் இறைமக்களுக்கு நல்லதோர் ஆயனாக இருந்து, அவர்களை நல்வழியில் வழிநடத்தி வந்தார்.
இந்நிலையில் 1160 ஆம் ஆண்டு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தபொழுது இவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வாறு இவர் ஆண்டவர் இயேசுவுக்காகத் தனது இன்னுயிரைத் தந்து சான்று பகர்ந்தார்
No comments:
Post a Comment