ஜூலை 20
புனித வில்ஜிஃபோதிஸ்
படத்தில் பார்ப்பதற்கு ஓர் ஆண் போல் தோன்றும் இவர், உண்மையில் ஒரு பெண்.
இவர் போர்ச்சுக்கல் நாட்டை ஆண்டு வந்த மன்னருடைய மகள்.
சிறு வயதிலேயே கடவுள்மீது மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்து வந்த இவரை இவருடைய தந்தை சிசிலி நாட்டு மன்னருக்கு மணமுடித்துக் கொடுக்க நினைத்தார்.
இதை அறிந்த வில்ஜிஃபோதிஸ் தன் தந்தையிடம், தான் ஏற்கெனவே தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டதாகச் சொல்ல, அவர் இவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.
இதனால் இவர் கடவுளிடம், திருமணத்திலிருந்து தன்னை எப்படியாவது காத்தருளுமாறு வேண்ட, இவருக்கு மீசையும் தாடியும் வளரத் தொடங்கின.
இந்நிலையில் இவரை மணம் முடிப்பதற்காக வந்த சிசிலி மன்னன், இவர் தாடியோடும் மீசையோடும் இருப்பதைப் பார்த்துவிட்டு, வந்த வழியில் திரும்பிச் சென்று விட்டான். இதனால் சீற்றம் கொண்ட இவரது தந்தை இவரைச் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்.
இவர் கணவனால் சித்திரவதைக்கு உள்ளாகும் மனைவிகளின் பாதுகாவலராக இருக்கிறார்.
No comments:
Post a Comment