புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 July 2020

அந்தியோக்கியா புனிதர் மார்கரெட் ✠(St. Margaret of Antioch) July 20

† இன்றைய புனிதர் †
(ஜூலை 20)

✠ அந்தியோக்கியா புனிதர் மார்கரெட் ✠
(St. Margaret of Antioch)
கன்னியர்-மறைசாட்சி/ பேயருவத்தின் வெற்றிவீராங்கனை:
(Virgin-Martyr and Vanquisher of Demons)

பிறப்பு: கி.பி. 289
அந்தியோக்கியா, பிசிடியா
(Antioch, Pisidia)

இறப்பு: கி.பி. 304 (வயது 15)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
மேற்கத்திய மரபுவழி சடங்குகள்
(Western Rite Orthodoxy)
பைஸான்டைன் கிறிஸ்தவம்
(Byzantine Christianity)
காப்டிக் கிறிஸ்தவம்
(Coptic Christianity)

பாதுகாவல்:
கர்ப்பிணி பெண்கள் (Pregnant Women), பிரசவம் (Childbirth), இறக்கும் மக்கள் (Dying People), சிறுநீரக நோய் (Kidney Disease), விவசாயிகள் (Peasants), நாடுகடத்தப்பட்டவர்கள் (Exiles), பொய்க் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (Falsely Accused People); Lowestoft, இங்கிலாந்து (England); குயின்ஸ் கல்லூரி (Queens' College), கேம்பிரிட்ஜ் (Cambridge); செவிலியர் (Nurses); சன்னட் மற்றும் பாரோர்லா (Sannat and Bormla), மால்டா (Malta), லோவஸ்டோஃப்ட் நகரம் (Lowestoft).

மேற்கில், “அந்தியோக்கியா நகர மார்கரெட்” (Margaret of Antioch in the West) என்றும் கிழக்கில், “பெரிய மறைசாட்சி மெரீனா” (Saint Marina the Great Martyr in the East) என்றும் அழைக்கப்படும் புனிதர் மார்கரெட், ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church), ஆங்கிலிக்கன் திருச்சபை (Anglican Church), மேற்கத்திய மரபுவழி சடங்குகள் (Western Rite Orthodoxy), பைஸான்டைன் கிறிஸ்தவம் (Byzantine Christianity), காப்டிக் கிறிஸ்தவம் (Coptic Christianity) ஆகிய திருச்சபைகளால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

கி.பி. 304ம் ஆண்டு, மறைசாட்சியாக மரித்த இவர், ஐயத்திற்கிடமானவர் (Apocryphal) என்று, கி.பி. 494ம் ஆண்டு, திருத்தந்தை “முதலாம் கெலாசியஸால்” (Pope Gelasius I) அறிவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கான பக்தி, மேற்கு நாடுகளில் சித்திரவதைகளுடன் புத்தாக்கம் பெற்றது.

தனது வாழ்க்கையை எழுதியோ அல்லது படிப்பவர்களுக்கோ, அல்லது அவருடைய பரிந்துரையை வேண்டுவோர்க்கோ, மிகுந்த சக்திவாய்ந்த மனோபாவங்களை வாக்குறுதியளித்ததாகவும், பிரயோகிப்பதாகவும் அவர் புகழப்படுகின்றார். இவரது இந்த நம்பகத்தன்மை, இவரது புகழ் பரவிட காரணமானது.

பதினான்கு தூய உதவியாளர்களுள் (Fourteen Holy Helpers) ஒருவரான மார்கரெட், “புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க்கிடம்” (Joan of Arc) பேசிய புனிதர்களுள் ஒருவராகவும் கருதப்படுகின்றார்.
“பொன் புராணம்” (Golden Legend) எனும் புராணங்களில் சொல்லப்படும் கதைகளின்படி, இவர், அந்தியோக்கியா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணாவார். இவரது தந்தை, பாகன் இனத்தைச் சேர்ந்த ஒரு குரு ஆவார். அவரது பெயர், “எடேசியஸ்” (Aedesius) ஆகும். இவர் பிறந்து சிறிது காலத்திலேயே இவரது தாயார் மரித்துப் போனதால், அந்தியோக்கியா நகரிலிருந்து சுமார் எட்டு மைல் தூரத்திலுள்ள ஒரு கிறிஸ்தவப் பெண்ணால் மார்கரெட் பராமரிக்கப்பட்டு வளர்ந்தார்.

கிறிஸ்தவத்தை தழுவியதாலும், தமது கன்னித்தன்மையை கடவுளுக்கு அர்ப்பணித்ததாலும், இவரது தந்தையார் இவரை கைவிட்டார். ஆகவே, இவரது செவிலித்தாய் இவரை ஏற்றுக்கொண்டார். தமது வளர்ப்புத் தாயுடன் நாட்டுப்புறங்களில் ஆடுகளை மேய்த்தபடி வளர்ந்தார். கிழக்கத்திய ரோமானிய மறைமாவட்ட ஆளுநரான “ஓலிப்ரியஸ்” (Olybrius) அவளை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார். ஆனால் கிறிஸ்தவத்தை கைவிட்டுவிடும் கோரிக்கையும் வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால், அவர் பலவிதமாக சித்திரவதை செய்யப்பட்டார். இதில் பல்வேறு அற்புதமான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு டிராகன் வடிவத்தில் சாத்தானால் விழுங்கப்பட்ட சம்பவம் ஒன்றும் இந்த தொடர்புகளில் ஒன்று. தாம் வைத்திருந்த சிறு சிலுவை ஒன்றினால் எரிச்சல் அடைந்த டிராகனின் பிடியிலிருந்து அவர் உயிரோடு தப்பித்தார்.

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) மார்கரெட்டை புனிதர் மெரினா (Saint Marina) என்று அறிந்திருக்கிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) இவரை புனிதராக ஏற்கிறது. “ரோம மறைசாட்சிகள்” (Roman Martyrology) புத்தகத்தில் ஜூலை மாதம் 20ம் நாளாக குறிக்கப்பட்டுள்ளது.

July 20
 
Saint of the day:
Saint Margaret of Antioch (Martha)

Patron Saint of childbirth, pregnant women, dying people, kidney disease, peasants, exiles,
falsely accused people; Lowestoft, England; Queens' College, Cambridge; nurses; Sannat and Bormla, Malta
 
Prayer:
 
The Story of Saint Margaret of Antioch
She was the daughter of a pagan priest at Antioch in Pisidia. Also known as Marina, she was converted to Christianity, whereupon she was driven from home by her father. She became a shepherdess and when she spurned the advances of Olybrius, the prefect, who was infatuated with her beauty, he charged her with being a Christian. He had her tortured and then imprisoned, and while she was in prison she had an encounter with the devil in the form of a dragon. According to the legend, he swallowed her, but the cross she carried in her hand so irritated his throat that he was forced to disgorge her (she is patroness of childbirth). The next day, attempts were made to execute her by fire and then by drowning, but she was miraculously saved and converted thousands of spectators witnessing her ordeal-all of whom were promptly executed. Finally, she was beheaded. That she existed and was martyred are probably true; all else is probably fictitious embroidery and added to her story, which was immensely popular in the Middle Ages, spreading from the East all over Western Europe. She is one of the Fourteen Holy Helpers, and hers was one of the voices heard by Joan of Arc. Her feast day is July 20th.

No comments:

Post a Comment