புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

06 July 2020

புனித மரிய கொரற்றி (St.Maria Goretti)மறைசாட்சி July 6

இன்றைய புனிதர் :
(06-07-2020)

புனித மரிய கொரற்றி (St.Maria Goretti)
மறைசாட்சி

பிறப்பு 
1890
அங்கோனா (Ankona), இத்தாலி
    
இறப்பு 
1902 
புனிதர்பட்டம்: திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்

இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான். 

"இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். "மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். "மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27 ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான். 

இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். இவர் இறந்த 50 ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார். 


செபம்:

இந்நாட்களில் கற்பு என்றால் என்ன என்று அக்கறையின்றி கேட்கும் போதும், திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும் ஆபாசக் காட்சிகளை தெய்வாக்கும் சூழலில், நாங்கள் தூய ஆவியின் ஆலயமாக திகழ்ந்து, எம்மையும் பிறரையும் மதிக்கும் வரம் தாரும் இறைவா.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (06-07-2020)

St. Maria Goretti

St. Maria Goretti was born on October 16, 1890 in Italy. Her father was Luigi Goretti and mother Assunta Carlini. Her full name was Maria Teresa Goretti. Her family became very poor and moved to other places to work for other farmers, for livelihood. Her father died of malaria when Goretti was nine years old. Maria Goretti used to cook, sew and watch her infant sister, when her mother and her brothers and sisters went out to work in the fields. Their family lived in a house named 'La Cascina Antica' in Le Ferriere and that house was also shared by another family consisting of Giovanni Serenella and his 19 year old son Alessando. On July 5, 1902, when Maria Goretti was in the house alone sewing, Alessando entered the house with the intention of raping her. But she did not submit to him and fought against him. Since she was only 11 years, old she could not withstood him but she shouted 'No. It is a sin. God does not want it' but he got angry and stabbed her 11 times. When the injured Maria Goretti tried to reach the door, he stopped her and stabbed her three more times and ran away. Maria’s mother and Alessando’s father came a little later and took her to the hospital at Nettuno. On her death bed she forgave her assassin Alessando and died on July 6, 1902 by clutching a crucifix to her chest. Alessando was arrested and sentenced for 30 years in jail. The local bishop Giovanni Blandini visited Alessando in the jail and Alessando told the bishop about a dream in which Maria Goretti gave him lily flowers but the flowers burned immediately in his hands. Maria Goretti’s family forgave the assassin after his release from jail. Alessando became a lay brother of the Order of Friars Minor Capuchin and prayed every day to Maria Goretti and referred to her as 'my little saint'. Many miracles reportedly happened at the intercession of St. Maria Goretti.

She was beatified on April 27, 1947 by pope Pius-XII and canonized on June 24, 1950 by pope Pius-XII. In both the ceremonies Maria Goretti’s mother Assunta was present. Her assassin Alessando was also present during her canonization ceremony. She is the patron of crime victims, teenage girls and modern youth.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஜூலை 6)

✠ புனிதர் மரியா கொரெட்டி ✠
(St. Maria Goretti)

கன்னியர் மற்றும் மறைசாட்சி:
(Virgin and Martyr)

பிறப்பு: அக்டோபர் 16, 1890
கொரினல்டோ, அன்கோனா பிராந்தியம், மர்ச்சே, இத்தாலி அரசு
(Corinaldo, Province of Ancona, Marche, Kingdom of Italy)

இறப்பு: ஜூலை 6, 1902 (வயது 11)
நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு
(Nettuno, Province of Rome, Lazio, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 27, 1947
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII) 

புனிதர் பட்டம் : ஜூன் 24, 1950
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

முக்கிய திருத்தலம்:
நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு
(Nettuno, Province of Rome, Lazio, Italy)

நினைவுத் திருவிழா: ஜூலை 6

பாதுகாவல்: 
பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் பெண்கள், நவீனகால இளைஞர்கள், மரியாளின் குழந்தைகள்

புனிதர் மரியா கொரெட்டி, இத்தாலிய கன்னியரும், கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே பதினான்கு முறை கத்தியால் குத்தப்பட்டு இவர் இறந்தார்.

வரலாறு:
“மரியா தெரெசா கொரெட்டி” (Maria Teresa Goretti) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையின் பெயர், “லுய்கி கொரெட்டி” (Luigi Goretti) ஆகும். தாயாரின் பெயர், “அசுன்ட்டா நீ கர்லினி” (Assunta née Carlini) ஆகும். தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆவார். மரியாவுக்கு ஐந்து வயதாகையில் வறுமை காரணமாக இவர்களது குடும்பம் கொஞ்ச நஞ்சமிருந்த நிலங்களை விற்றுவிட்டு ஊர் ஊராக சென்றனர். இறுதியில் கி.பி. 1899ம் ஆண்டு, “லீ ஃபெர்ரியர்” (Le Ferriere) என்ற ஊருக்கு சென்றனர். அங்கே அவர்கள், “லா கசினா அன்டிகா” (La Cascina Antica) என்ற பெயருள்ள வீட்டில் தங்கினர். அந்த வீட்டை “செரனெல்லி” (Serenelli) என்ற குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டனர். அந்த குடும்பத்தில், “ஜியோவன்னி செரனெல்லி” (Giovanni Serenelli) என்பவரும் அவரது மகனான “அலெஸ்ஸாண்ட்ரோ செரனெல்லி” (Alessandro Serenelli) என்ற 18 வயது இளைஞனும் வசித்தனர்.

விரைவில், மரியாவுக்கு ஒன்பது வயதாகையில் அவரது தந்தை மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரித்தார். பகல் நேரங்களில் மரியாவின் தாயாரும் சகோதரர்களும் விவசாய கூலி வேலை செய்வதற்காக செல்ல, மரியா வீட்டில் தனது சின்னத் தங்கையை கவனிப்பதுவும், வீட்டை சுத்தம் செய்வதுவும், சமையல் பணிகளை செய்வதுமாக இருப்பார். 11 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கப்பட்டது.

கி.பி. 1902ம் ஆண்டு, ஜூலை மாதம் 5ம் தேதி, மரியா தமது வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவர் தனித்திருந்ததை அறிந்து, சற்று நேரத்தில் அங்கு வந்த “அலெஸ்ஸாண்ட்ரோ” (Alessandro Serenelli), ஒரு கத்தியைக் காட்டி, தாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் குத்தி விடுவதாக பயமுறுத்தினான். அவனுடைய நோக்கம், பாலியல் வன்கொடுமையால் மரியாவை அடைவதாகும். "இது சாவான பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா பலவிதமாக கதறி அழுதும் பயனில்லை. மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். குற்றுயிராய் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட மரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், 24 மணி நேரம் மரணப்படுக்கையில் இருந்த மரியா கொரெட்டி “மன்னித்துவிட்டேன் அவரை” என்று கூறிவிட்டு மரித்தார்.

கொலை செய்ததற்காக அலெஸ்ஸாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெஸ்ஸாண்ட்ரோ, மரியா கொரெட்டி, விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு பெற்ற அலெஸ்ஸாண்ட்ரோ, தமது இறுதி நாட்களில் கப்புச்சின் 3ம் சபையின் பொதுநிலை துறவியாக (Lay Brother) வாழ்ந்து கி.பி. 1970ம் ஆண்டு காலமானார்.

மரியா கொரெட்டி இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், புனிதர் பட்டமளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெஸ்ஸாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் ரோம் நகருக்கு வருகை தந்தனர்.

No comments:

Post a Comment