ஜூலை 06
புனித நோயலா (ஆறாம் நூற்றாண்டு)
இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். இவருடைய தந்தை இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆண்டுவந்த கேம்பிரியன் என்ற மன்னன்.
நோயலா சிறுவயது முதலே இறைவன்மீது மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் இறைவனுக்கே தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கவும் துணிந்தார்.
ஆனால் இவருடைய தந்தை இவரது விருப்பத்திற்கு மாறாக, இவரை ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைத்தார். இதை அறிந்த நோயலா தன்னுடைய பணிப்பெண்ணோடு பிரான்ஸ் நாட்டிற்குத் தப்பிச்சென்றார்.
போகும்வழியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓர் அரச அதிகாரி இவர்மீது காதல் கொண்டு இவரை மணந்து கொள்ள விரும்பினார். இவரோ அதற்கு மறுப்புத் தெரிவிக்க, அவர் தன்னுடைய படை வீரர்களோடு சேர்ந்து இவரைத் தலை வெட்டிக் கொன்று போட்டார்.
இவ்வாறு இவர் ஆண்டவர்மீதுகொண்டிருந்த பற்றில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
No comments:
Post a Comment