புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 July 2020

புனித.கிறிஸ்டோபர் (St.Christopher. July 24

இன்றைய புனிதர்
2020-07-24
புனித.கிறிஸ்டோபர் (St.Christopher)
மறைசாட்சி, வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாவலர்
பிறப்பு
2 ஆம் நுற்றாண்டு,கானான்(kanan)
இறப்பு
கி.பி.251.

இவருக்கு ரெப்ரோபூஸ் (Reprobus) என்ற பெயரும் உண்டு. பல மக்களை மனமாற்றியதால், இவரை டேசியூஸ் அரசன் (Decius) கொல்ல ஆணையிட்டான். இவர் வழித்துணை பாதுகாவலராக போற்றப்படுகின்றார். அதற்கு ஒரு வரலாறு உண்டு.

ஒருநாள் இவர் ஆற்றைக் கடக்கும்போது, ஒரு சிறு பிள்ளை வந்து என்னையும் தூக்கி, கரையை கடக்க உதவுங்கள் என்றது. இவரும் அக்குழந்தையே தோளில் சுமந்துகொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் குழந்தை கனக்க ஆரம்பித்தது. அவரால் வலியை பொறுக்கமுடியவில்லை. இருந்தும் கீழே விட்டுவிடாமல் கரையை கடந்தார். இறக்கியவுடன் அக்குழந்தை "நான் தான் கிறிஸ்து" என்று சொல்லி மறைந்தது.

நீண்ட பயணம் செய்பவர், இவரிடம் ஜெபித்த போது பல நன்மைகளை பெற்றுள்ளனர். வயலில் வேலை செய்பவர்களூம் தண்ணீர் வேண்டி ஜெபித்த போது மழையை பெற்றுள்ளனர். ஐரோப்பாவில் இவரின் பக்தி அதிகமாக பரவியுள்ளது.


செபம்:
என்றும் வாழ்பவரே எம் இறைவா! இவ்வுலகில் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றது. புனித கிறிஸ்டோபரின் வழியாக நீரே பாதுகாப்பான பயணத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பெல்ஜிய நாட்டு திருக்காட்சியாளர் கிறிஸ்டினா Christina von Belgien
பிறப்பு: 1150, புரூஸ்தெம் Brusthem, பெல்ஜியம்
இறப்பு: 24 ஜூலை 1224, பெல்ஜியம்
பாதுகாவல்: பயத்திலிருந்து, நன்மரணம், பூச்சிக்கடி மற்றும் தொற்று நோயிலிருந்து


பொல்சேனா நகர் மறைசாட்சி கிறிஸ்டினா Christina von Bolsena
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, பொல்சேனா, இத்தாலி
இறப்பு: 304, இத்தாலி
பாதுகாவல்: பொல்சேனா நகர், பலேர்மோ நகர், வெனிஸ், கடல்வாழ் மக்கள்


சவோயன் நகர் துறவி லூயிசே Louise von Savoyen
பிறப்பு: 28 டிசம்பர் 1462 சவோயன்
இறப்பு: 24 ஜூலை 1503, ஓர்பே Orbe, சுவிஸ்
பாதுகாவல்: குழந்தைகள்


துறவி சிக்லிண்டே Siglinde OSB
பிறப்பு: 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டு, அக்குடானியன் Aquitanien, பிரான்சு
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ட்ரோட்லார் Troclar, பிரான்சு
பாதுகாவல்: விதவைகள்

No comments:

Post a Comment