புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 August 2020

புனித அட்ராக்டா ( ஆறாம் நூற்றாண்டு)(ஆகஸ்ட் 11)

புனித அட்ராக்டா ( ஆறாம் நூற்றாண்டு)

(ஆகஸ்ட் 11)
இவர் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர். இவரது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம்.

சிறுவயதிலேயே கடவுள்மீது மிகுந்த பற்று கொண்ட இவர், வளர்ந்து பெரியவரான போது, துறவியாகப் போக முடிவு செய்தார். இதற்கு இவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும் இவர் தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித் துறவியானார். 

இவர் 'அயர்லாந்து நாட்டின் திருத்தூதர்' என அழைக்கப்படும் புனித பேட்ரிக், பெண்களுக்ககெ ஒரு துறவற சபையை‌ நிறுவிய போது, இவரைத் தான் தலைவியாக நியமித்தார். 

இவர் வழிப்போக்கர்கள் தஙகி ஓய்வெடுத்துச் செல்ல விடுதி ஒன்றைக் கட்டி, அதன் மூலம் வழிப்போக்கர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

தன்னை நாடி வந்தோருக்கு இவர் தாராளமாக உதவி செய்தார். இவ்வாறு அறச்செயல்கள் செய்வதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இவர் விளங்கினார்.

கடவுள் இவருக்கு அருமடையாளங்கள் செய்வதற்கான ஆற்றலைத் தந்திருந்தார்.  இதன் மூலம் இவர் பலரையும் நோய்நொடிகளிலிருந்து  விடுவிடுத்து நல்வாழ்வு தந்தார். இவர் பல கோயில்களையும் துறவுமடங்களையும் கட்டியெழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment