இன்றைய புனிதர் :
(12-08-2020)
புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel)
பிறப்பு : 28 ஜனவரி 1572
டிஜோன்(Dijon), பிரான்ஸ்
இறப்பு : 13 டிசம்பர் 1641
பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 21 நவம்பர் 1751, 15 ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 16 ஜூலை 1767, 13 ஆம் கிளமென்ட்
இவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார். இதனால் இவர் இறைவனையே தாயாகக் கொண்டு வாழ்ந்தார். அரண்மனையில் இவர் வாழ்ந்தபோதும் கூட ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். பின்னர் இவர் தே ஷாந்தால் என்ற அரசரை திருமணம் செய்துகொண்டார். 6 பிள்ளைகளைப் பெற்றபின் திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து தன் கணவரை இழந்தார். பின்னர் தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தப்பின்னர், தான் ஓர் துறவற சபையை தொடங்க விரும்பினார். இதனால் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்தார்.
பின்னர் பிரான்சிஸ் சலேசியாரை தன் ஆன்மீக குருவாக தேர்ந்தெடுத்து, அவர் காட்டிய வழியில் பின்தொடர்ந்தார். அரண்மனையில் வாழ்ந்ததால் முழுமையாக ஆன்மீக காரியங்களில் ஈடுபட முடியவில்லை என்பதை உணர்ந்து, அரண்மனையைவிட்டு வெளியேறினார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். அப்போது தன் ம்கனையும் இழந்தார். அச்சமயத்தில் பிளேக் நோய் பிரான்ஸ் நாட்டில் பரவியது. ஏராளமான மக்கள் அந்நோயால் இறந்தனர். அவரின் மருமகளும் அந்நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இதனால் இன்னும் மனமுடைந்த ஜேன் பிரான்சிஸ், பிளேக் நோயால் தாக்கப்பட்ட மக்களிடையே பணிபுரிந்தார். தன் அரண்மனை சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்காக செலவு செய்தார். அப்போதுதான் பிளேக் நோயால் பாதித்தவர்களுக்கு பணிபுரிவதற்கென்றே ஓர் துறவற சபையை நிறுவினார். தன் பிள்ளைகளையும், உற்றார், உறவினர் அனைவரையும் துறந்து இறைப்பணியை செய்தவர். ஆழ்ந்த விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டு, இடைவிடாமல் இறைபணி ஆற்றினார். தமக்கிருந்த எல்லாவற்றையுமே இறைவனின் மகிமைக்காக இழந்தார்.
செபம்:
நலமளிப்பவரே இறைவா! எம் சமுதாயத்தில் நோயால் பாதிக்கப்பட்டு, உடல் வேதனைகளை அனுபவிக்கிற ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உடல் நோய்களை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும், மனபலத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (12-08-2020)
Saint Jeanne de Chantal
Born to the nobility, the daughter of the president of the Parliment of Burgundy who raised her alone after the death of her mother when Jeanne was 18 months old. Married in 1592 at age twenty to Baron de Chantal. Mother of four. Widowed at 28 when the Baron was killed in a hunting accident and died in her arms. Taking a personal vow of chastity, she was forced to live with her father-in-law, which was a period of misery for her. She spent her free time in prayer, and received a vision of the man who would become her spiritual director. In Lent, 1604, she met Saint Francis de Sales, and recognized him as the man in her vision. She became a spiritual student and close friend of Saint Francis, and the two carried on a lengthy correspondence for years. On Trinity Sunday, 6 June 1610 she founded the Order of the Visitation of Our Lady at Annecy, France. The Order was designed for widows and lay women who did not wish the full life of the orders, and Jeanne oversaw the founding of 69 convents. Jeanne spent the rest of her days overseeing the Order, and acting as spiritual advisor to any who desired her wisdom. Visitationist nuns today live a contemplative life, work for women with poor health and widows, and sometimes run schools.
Born :
28 January 1572 at Dijon, Burgundy, France
Died :
13 December 1641 at the Visitationist convent at Moulins, France of natural causes
• relics at Annecy, Savoy (in modern France
Canonized :
16 July 1767 by Pope Clement XIII
Patronage :
against in-law problems
• against the death of parents
• forgotten people
• parents separated from children
• widows
---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 12)
✠ புனிதர் ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல் ✠
(St. Jane Frances de Chantal)
நிறுவனர்:
(Foundress)
பிறப்பு: ஜனவரி 28, 1572
டிஜோன், பர்கண்டி, ஃபிரான்ஸ்
(Dijon, Burgundy, France)
இறப்பு: டிசம்பர் 13, 1641 (வயது 69)
மௌலின்ஸ், ஃபிரான்ஸ்
(Moulins, France)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: நவம்பர் 21, 1751
திருத்தந்தை 14ம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)
புனிதர்பட்டம்: ஜூலை 16, 1767
திருத்தந்தை 13ம் கிளமென்ட்
(Pope Clement XIII)
முக்கிய திருத்தலங்கள்:
அன்னேஸி, சவோய்
(Annecy, Savoy)
நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 12
பாதுகாவல்:
மறக்கப்பட்ட மக்கள்; மாமியார் பிரச்சினைகள்; காணாமல் போன பெற்றோர்;
பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பெற்றோர்; விதவைகள்.
மனைவி, தாய், துறவி என பன்முகம் கொண்ட புனிதர் ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல், “தூய மரியாளின் திருவருகையின் அருட்சகோதரியர்” (Congregation of the Visitation) எனும் பெண்களுக்கான துறவற சபையின் நிறுவனரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.
“பேரன் டி சான்ட்டல்” (Baronne de Chantal) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஃபிரான்ஸ் (France) நாட்டின் “டிஜோன்” (Dijon) நகரில் பிறந்த ஜேன், “பர்கண்டி” (Burgundy) மாநில பாராளுமன்ற அரசவை தலைவரின் மகள் ஆவார். பதினெட்டு மாத குழந்தையாய் இருக்கையிலேயே தமது தாயை இழந்த இவர், தமது தந்தையால் கல்வி கற்பிக்கப்பட்டு, அழகும், உற்சாக குணமும் கொண்ட, மகிழ்ச்சியான பெண்ணாக வளர்ந்தார்.
இருபத்தொரு வயதில், “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபத்தெட்டு வயதில், ஆறு குழந்தைகளுக்கு தாயானார். இதில் மூன்று குழந்தைகள், குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போயின. கி.பி. 1601ம் ஆண்டு நடத்த ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, விபத்து காரணமாக, “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) இறந்து போனார். ஜேன் அரண்மனையில் வாழ்ந்தபோதும், வரிசையாக தமது குடும்ப அங்கத்தினர்களின் மரணத்தால் மனமுடைந்து போனார். அவரது தாயார், வளர்ப்புத் தாயார், சகோதரி, தமது இரண்டு குழந்தைகள் - இப்போது தமது கணவர் என மரணங்கள் இவரை மனமுடைய வைத்தன.
இதனால் ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். கற்பு நிலைக்கான உறுதிப்பாடு எடுத்துக்கொண்டார். தாம் வசித்த வீட்டிலேயே தினமும் திருப்பலிகள் நிறைவேற்றும் வழக்கத்தினை ஏற்படுத்தினார். பல்வேறு தொண்டு பணிகளில் ஈடுபட்டார். 75 வயதான இவரது மாமனார், வீண் பிடிவாதமும், கொடூர, ஊதாரி குணமுள்ளவராய் இருந்தார். தமது வீட்டுக்கு திரும்பி வரவில்லையெனில் அவருடைய குழந்தைகளை பரித்துக்கொள்வதாக பயமுறுத்தினார். இத்தனைக்கும், ஜேன் இன்முகத்துடன் நடந்து கொண்டார்.
கி.பி. 1604ம் ஆண்டு, “டிஜொன் சிற்றாலயத்தில் (Sainte Chapelle in Dijon) பிரசங்கிக்க வந்திருந்த “ஜெனீவாவின்” ஆயரான (Bishop of Geneva) புனிதர் “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” (Francis de Sales) அவர்களை ஜேன் சந்தித்தார். ஆயரை ஜேன் தமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். தாம் துறவறம் ஏற்க வேண்டுமென்ற தமது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், அந்த முடிவினை தாமதப்படுத்துமாறு “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” அறிவுறுத்தினார். ஜேன், மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும், தமது ஆன்மீக வழிகாட்டிக்கு கீழ்படிவதாகவும் உறுதி ஏற்றார்.
மூன்று வருடங்களின் பின்னர், “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” ஜேனிடம் தமது திட்டத்தை கூறினார். வயது, உடல்நிலை, மற்றும் பிற காரணங்களுக்காக ஏற்கனவேயுள்ள ஆன்மீக – துறவற சபைகளில் சேர இயலாத பெண்களுக்கான ஒரு ஆன்மீக துறவற சபையை தோற்றுவிப்பதே அத்திட்டமாகும். அங்கே கன்னியர்க்கான மடம் இருக்காது. ஆனால், ஆன்மிகம் மற்றும் இரக்கத்தின் இயல்பான பணிகள் செய்வதற்கான பூரண சுதந்திரம் இருக்கும் என்றார். எலிசபெத் அம்மாளைக் காண வந்த தூய மரியாளின் நற்குணங்களையும் நல்லொழுக்கங்களையும் முன்மாதிரியாக கொண்டிருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் தாழ்ச்சியும் சாந்த குணமும் நிறைந்த “திருவருகையின் அருட்சகோதரியர்” (Visitation Nuns) என்றழைக்கப்படுவர் என்றார்.
“திருவருகையின் அருட்சகோதரியர்” சபையை தொடங்குவதற்காக, தென் ஃபிரான்ஸில், ஜெனீவாவுக்கு (Geneva) 35 கிலோமீட்டர் தெற்கேயுள்ள “அன்னேசி” (Annecy) எனுமிடத்திற்கு ஜேன் பயணமானார். கி.பி. 1610ம் ஆண்டு, ஜூன் மாதம், 6ம் தேதி, திரித்துவ ஞாயிறு அன்று, “திருவருகையின் அருட்சகோதரியர் சபை” (Congregation of the Visitation) நிறுவப்பட்டது.
ஊழியங்களில் பெண்களுக்கெதிரான வழக்கமான எதிர்ப்பு இதிலும் இருந்தது. ஆகவே, புனித அகுஸ்தினாரின் (Rule of Saint Augustine) துறவற சட்ட திட்டங்களை இச்சமூகத்தினரிடையே “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” செயல் படுத்தினார். உடல் நலம் குறைந்த மற்றும் வயோதிக வயது பெண்களை சபையில் ஏற்றுக்கொள்வதற்காக மக்கள் அவரை விமர்சித்தபோது, "நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் நோய்வாய்ப்பட்ட மக்களையே விரும்புகிறேன். நான் அவர்கள் பக்கத்திலேயே இருப்பேன் என்றார்.
புனிதர் ஃபிரான்சிஸ் டே சலேஸ் (Saint Francis de Sales) அவர்கள் மரித்தபோது, சபை பதின்மூன்று இல்லங்களைக் கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் டே சலேஸ் மரணத்தின் பின்னர், “புனிதர் வின்சென்ட் டே பவுல்” (St. Vincent de Paul) இவரது ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். “மௌலின்ஸ்” (Moulins) நகரிலுள்ள இவர்களது சபையின் இல்லத்தில், தமது 69 வயதில் ஜேன் மரணத்தின் முன்னர், இவர்களது சபைக்கு 86 இல்லங்கள் இருந்தன. கி.பி. 1767ம் ஆண்டு, சபைக்கு 164 இல்லங்கள் இருந்தன. ஜேன், இயேசுவின் தூய இருதய பக்தியிலும் மரியாளின் (Sacred Heart of Jesus and the Heart of Mary) தூய இருதய பக்தியிலும் மிகவும் ஆர்வமுள்ளவராய் விளங்கினார்.
No comments:
Post a Comment