புனித சோபியா (- 137)
(ஆகஸ்ட் 01)
மிலன் நகரைச் சார்ந்த இவர் ஒரு கைம்பெண். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள்.
பிழைப்பு தேடி இவர் மிலன் நகரைவிட்டு, தனது மூன்று குழந்தைகளோடு உரோமை நகருக்குச் சென்றார்.
அக்காலக்கட்டத்தில் உரோமையில் ஹட்ரியன் என்ற மன்னனின் தலைமையில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை மிகுதியாக நடைபெற்றது.
இந்த வன்முறையில் இவருடைய மூன்று பெண் குழந்தைகளும் கிறிஸ்துவின்மீது கொண்ட உறுதியான நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டார்கள்.
தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளும் கிறிஸ்துவுக்காகக் கொல்லப்பட்டதை நினைத்து இவர் ஒருபக்கம் பெருமைப்பட்டாலும், இன்னொரு பக்கம் அவர்களுடைய பிரிவு இவரை மிகுதியாக வாட்ட, இவர் அவர்களுடைய கல்லறையிலேயே அவர்கள் கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் இறந்து போனார்.
இவர் கைம்பெண்களின் பாதுகாவலராக இருக்கிறார்.
No comments:
Post a Comment