புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

01 August 2020

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (St. Alphonsus Liguori)ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church) August 1

இன்றைய புனிதர் :
(01-08-2020)

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (St. Alphonsus Liguori)
ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church) 
பாதுகாவல்: ஒப்புரவு தரும் அருள்தந்தையர் (Confessor), நல்லொழுக்க நீதி சார் இறையியலர்(Moral theologians)

பிறப்பு 
27 செப்டம்பர் 1696
நேயாபல், இத்தாலி (Marinella bei Neapel, Italien)
    
இறப்பு 
01 ஆகஸ்டு 1787
நேயாபல்(Nocera dei Pagani bei Neapel)
முத்திபேறுபட்டம்: 1816, திருத்தந்தை 7ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 29 மே 1839, திருத்தந்தை 16 ஆம் கிரகோரி
ஆயர்பட்டம்: 1762, திருத்தந்தை 13 ஆம் கிளமெண்ட், வடக்கு நேயாபல் (Diocese S.Agatha dei Goti im Norden von Neapel)

இவர் உரோமன் சட்டத்திலும், திருச்சபை சட்டத்திலும் பட்டம் பெற்றார். மறைபரப்பு பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் குருத்துவ வாழ்விற்கு தன்னை ஈடுபடுத்தினார். இவரின் வாழ்வு மக்களிடையே பல தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக சிறப்பான இவரின் மறைபரப்புப் பணியால், நேப்பிள்ஸ் நகர் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் "புனித இரட்சகர்" என்ற பெயரில் ஒரு துறவற சபையை நிறுவினார். மக்களிடையே கிறிஸ்துவ வாழ்வை வளப்படுத்த, சிறப்பான மறையுரையை ஆற்றினார். ஒழுக்க நெறி சார்ந்த இறையியல் நூல்கள் பல எழுதினார். இவர் தலைசிறந்த இறையியல் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் ஆயர் பொறுப்பிலிருந்து விலகினார். தான் தொடங்கிய துறவற சபையில் வாழ்ந்தார். மரியன்னையின்மீது பக்தி, திவ்ய நற்கருணை சந்திப்பு, சிலுவைப்பாதை செய்தல் இவைகளில் தன் சபையிலுள்ளவர்களை ஈடுபடுத்தினார். எவற்றின் மீதும் பற்றுக்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தினார். 

இவர் பல பயணங்களை மேற்கொண்டு, நேப்பிள்ஸ் நாட்டில் சிறப்பான மறையுரையை ஆற்றி நன்மைகள் பல செய்தார், இவர் வயது முதிர்ந்தவராய் இருந்ததால் பார்வையிழந்து காணப்பட்டார். இதனால் சிலர் இவரை தவறான வழியில் நடத்தினர். எதிரிகளின் சூழ்ச்சியால், சில முக்கிய ஒப்பந்தங்களில் தெரியாமல், தவறாக கையொப்பமிட்டார். இதனால் இவரின் சபையில் பல பிளவுகள் உண்டானது. இதனால் அல்போன்ஸ் மனமுடைந்து, மிக வேதனை அடைந்தார். சில உறவுகளையும் இழந்தார். நோயினால் தாக்கப்பட்டு கொடுமையான வேதனையை அனுபவித்த அல்போன்ஸ் தனது 83 ஆம் வயதுவரை தன் சபையை சேர்ந்தவர்களாலேயே, ஒதுக்கி வைக்கப்பட்டார். இயேசுவின் பாடுகளை இடைவிடாமல் தனது இறுதி நாட்களில் அனுபவித்து இறைவனடி சேர்ந்தார். 

செபம்:
புனிதத்தின் ஊற்றே எம் இறைவா! உம்மீது தணியாத தாகம் கொண்டார். புனித அல்போன்ஸ் மரிய லிகோரி. புனித வாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார். மறைபணியின் வழியாக மக்களின் வாழ்வு நெறியை மாற்றினார். இவரின் போதனைகளை நாங்கள் கடைபிடித்து வாழ, எமக்கு உமதருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (01-08-2020)

St. Alphonsus Maria de Liguori

He was born in a village called Marianella in Italy on September 27, 1696. He was a practicing lawyer. After losing an important case in a court, he entered the religious life and was ordained a priest on December 21, 1726. He wanted to serve the poor people in the slums and founded a congregation of the Most Holy Redeemer on November 9, 1732 for this purpose. The members of the congregation are generally called a Redemptorists. He was appointed as the Bishop of St. Agatha in 1762 but retired from the office of the Bishop in 1775. He was a spiritual writer and was considered as a great theologian. He wrote 111 works on spirituality and theology. He spent every minute usefully and for good purposes only. He died on August 1, 1787.

He was beatified by Pope Pius- VII on September 15, 1816 and canonized by Pope Gregory-XVI on May 26, 1839. He was proclaimed as Doctor of the Church in 1871 by Pope Pius-IX. He is the patron of Confessors and Moralists.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment