புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 August 2020

புனித எட்மண்ட் ஆரோஸ்மித் (1585-1628)(ஆகஸ்ட் 28)

புனித எட்மண்ட் ஆரோஸ்மித் (1585-1628)

(ஆகஸ்ட் 28)
இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். இவருடைய பெற்றோர் கத்தோலிக்க நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தவர்கள். இதற்காகவே இவர்கள்  ஆட்சியாளர்களால் பலவாறாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

தனது பெற்றோரின் இத்தகைய எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டப்பட்ட இவர், அருள்பணியாளராக மாறி இறைப்பணியைச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டார். அதன்படி இவர் 1605 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை விட்டு டவாய் (Douai) என்ற இடத்திற்குச் சென்று குருத்துவப் படிப்பைப் படித்து, 1612 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

இதற்குப் பிறகு இவர் லங்காஷிர் என்ற இடத்தில் 1622 ஆம் ஆண்டு வரை பணி செய்தார். இப்படி இருக்கையில் இவர் கத்தோலிக்க நம்பிக்கையை மக்கள் நடுவில் பரப்பி வருகிறார் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு சில நாள்களிலேயே இங்கிலாந்தை ஆண்ட வந்த ஜேம்ஸ் என்ற மன்னனின் உத்தரவின் பேரில் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான இவர் 1624 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்து பணி செய்யத் தொடங்கினார். கடவுளின் வார்த்தையை மிகத் துணிவோடு அறிவித்து வந்த இவர் 1628 ஆம் ஆண்டு, 'ஒரு கத்தோலிக்கக் குருவானவர் இவர்' என்று காட்டிக் கொடுக்கப்பட்டு,  தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment