புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 August 2020

விண்ணக மண்ணக அரசியான மரியா (22-08-2020)

விண்ணக மண்ணக அரசியான மரியா (22-08-2020)
மரியாவை விண்ணக மண்ணைக அரசியாக ஏற்று, விழாக் கொண்டாடும் வழக்கம் 1954 ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது என்றாலும், மரியாவை அரசியாக அழைக்கின்ற வழக்கம் பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. தூய எப்ராகிம் மரியாவை அரசியாகப் பாவித்து அழைத்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. அது போன்று மக்களும் மரியாவை அரசியாக ஏற்றுக்கொண்டதற்கான சான்றுகள் இருக்கின்றான் ‘Hail holy Queen, Queen of Heaven’ என்ற சொல்லாடல்கள் எல்லாம் அதற்குச் சான்றாக அமைகின்றன.

கி. பி. 425 ஆம் ஆண்டு எபேசு நகரில் நடைபெற்ற சங்கம் மரியாவை ஆண்டவரின் தாய் எனப் பிரகடனம் செய்தது. இயேசு ஆண்டவர் என்றால் மரியா ஆண்டவள், அரசி என்பதுதான் அர்த்தமாக இருக்கின்றது. யூதர்கள் வழக்கமாக அரசரின் அன்னையை அரசியாக அழைப்பார்கள். இயேசு அரசருக்கெல்லாம் அரசர். அப்படியானால் ‘மரியாவை படைப்பிற்கெல்லாம் அரசி’ என்று அழைப்பது தகுதியும் நீதியும் ஆகும்.

மரியா விண்ணக மண்ணக அரசி என்றால், விண்ணகத்தில் அவர் இயேசுவின் அருகே இருந்து நமக்காகப் பரிந்து பேசுகின்றார் என்பத்தான் அர்த்தமாக இருக்கின்றது. ஆகவே, நாம் மிகுந்த நம்பிக்கையோடு அன்னை மரியிடம் நம்முடைய வேண்டுதல்களை, ஜெபங்களை எடுத்துரைக்கும் போது அவர் நமக்காக தன் மகன் இயேசுவிடம் பரிந்துரைந்து, நமக்கு வேண்டியதைப் பெற்றுத் தருவார் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Feast : (22-08-2020)

Queenship of Mary

This feast of Queenship of Mother Mary was established by Pope Pius-XII by his encyclical Ad Caeli Reginam dated October 11, 1954. Mother Mary was proclaimed as "Theotokos" meaning "one who gives birth to God" or "God bearer" in the Council of Ephesus in the fifth century A.D.. Jesus is always the king of humanity and naturally His mother must have a share in the Kingship of Jesus. She is the Heavenly Queen and is referred as the woman clothed with sun and having a crown with twelve bright stars, in the book of Revelation. God has given to Mother Mary a great role to play in the eternal salvation of humanity, when she became the mother of the God's only Son, Jesus. She was conceived without any original sin that became a religious dogma in the year 1854 (Immaculate Conception). Mother Mary is the gate to the Heaven, and through Her only mankind can enter the Heaven.
Holy Virgin Mother Mary, Queen of Heaven and Earth, have mercy on us.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment