இன்றைய புனிதர்
2020-08-22
புனித பிலிப்பு பெனிடியுஸ், Philippus Benitius OSM
சபை நிறுவுனர்
பிறப்பு
15 ஆகஸ்டு 1233,
புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு
22 ஆகஸ்டு 1285,
டோடி Todi, இத்தாலி
புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை 10 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: சர்வைட் சபைக்கு
இவர் பெண்களுக்கான "சர்வைட்" Servites என்ற சபையை நிறுவினார். இவர் பாரிஸ் மற்றும் பதுவையில் Padua தனது மருத்துவ படிப்பையும், தத்துவயியல் படிப்பையும் படித்தார். தனது 19 ஆம் வயதில் சர்வைட் சபையில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து 1259 ல் குருப்பட்டம் பெற்றார். 1267 ல் சர்வைட் சபையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். தனது சபையை வலிமை பெற்ற சபையாக மாற்றினார். பின்னர் இத்தாலி ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று மிஷினரியாக பணியாற்றினார். அந்நாடுகளில் தன் சபையை பரப்பி, சில சர்வைட் துறவற இல்லங்களையும் கட்டினார்.
இவர் சிறப்பாக ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிபுரிந்தார். வாழ்வில் எதுவுமே இல்லையென்றுணர்ந்த மக்களை, தன் இதயத்தில் சுமந்து, வாழ்விற்கு வழிகாட்டினார். எண்ணிலடங்கா ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றினார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! புனித பிலிப்பு பெனிடியுஸ் வழியாக பெண்களுக்கான சர்வைட் சபையை உருவாக்கினார். அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு. இவ்வுலகில் உமது பணியை தொடர்ந்து ஆற்ற இச்சபைக்கு தேவையான தேவ அழைத்தலைத் தாரும். இச்சபை கன்னியர்களோடு, உடனிருந்து வழிநடத்தியருளும். இச்சபையை வழிநடத்தும் சபை பொறுப்பாளர்களுக்கு தேவையான ஆவியின் அருள்கொடைகல் அனைத்தையும் தந்து, ஆசீர்வதித்திட வேண்டுமென்று இப்புனிதரின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
சிம்போரியானுஸ் Symphorianus von Autun Märtyrer
மறைசாட்சி
பிறப்பு: 165, ஆவ்டுன் Autun, பிரான்சு
இறப்பு: 180, ஆவ்டுன்
பாதுகாவல்: குழந்தைகள், பள்ளிச்சிறார்
No comments:
Post a Comment