பெர்கமோ நகர்ப் புனித அலெக்சாண்டர்
(-303)
(ஆகஸ்ட் 26)
இவர் உரோமையை ஆண்டு வந்த தியோகிளசியன் என்பவனுடைய படையில் போர்வீரராக, நூற்றுவர் தலைவராகப் பணிபுரிந்து வந்தார்.
அக்காலத்தில் உரோமை ஆண்டு வந்த மன்னர்களால் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் கிறிஸ்தவர்கள் பலவாறாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில் உரோமையை ஆண்டு வந்த தியோகிளசியன் என்ற மன்னன் தனக்கு கீழ் பணிபுரிந்து வந்த அலெக்சாண்டரிடம் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைக் கூண்டோடு அளிக்குமாறு கட்டளை பிறப்பித்தான். இதற்கு இவர் மறுப்புத் தெரிவித்தார். அவன் ஏன் என்று கேட்டபொழுது, "நான் நம்பிக்கை கொண்டிருக்கும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் யாரையும் நான் துன்புறுத்துவதில்லை" என்று உறுதியாகச் சொன்னார்.
இதனால் வெகுண்டெழுந்த மன்னன் கி.பி.303 ஆண்டு இவரைக் கொலை செய்தான்.
இவர் பெர்கமோ நகரின் பாதுகாவலராக இருக்கிறார்.
No comments:
Post a Comment