புனித ஜெரோன் (-856)
ஆகஸ்ட் 17
இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவர். இவருடைய தந்தை ஒரு பெரிய நிலக்கிழார்.
சிறுவயதிலிருந்தே இறைவன்மீது மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்த இவர், தனது பெரும்பாலான நேரங்களைக் கோயிலிலேயே செலவழித்து வந்தார்.
இவரது தந்தை இவரைத் தனக்குப் பின் தன் சொத்துக்களுக்கு அதிபதியாக்கிவிடலாம் என்று நினைத்தார்; ஆனால், இவர் தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அருள்பணியாளராக மாறலாம் என்று முடிவு செய்தார்.
இதற்கு இவருடைய தந்தையிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இவர் அதைப் பொருட்படுத்தாமல் அருள்பணியாளராக உயர்ந்து, நெதர்லாந்து நாட்டில் இறைப்பணி செய்யத் தொடங்கினார்.
851 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள நூர்த்விஜ் என்ற இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிய இவர், அங்குள்ள மக்களுக்கு நல்ல முறையில் நற்செய்தியை அறிவித்து வந்தார்.
இந்நிலையில் 856 ஆம் ஆண்டு ஒரு சிலர் இவரைக் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டுத் தங்களுடைய தெய்வத்தை வணங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியபோது, இவர் அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் இவரைப் படுகொலை செய்து கொன்று போட்டார்கள்.
இவ்வாறு இவர் ஆண்டவர் இயேசுவுக்காகத் தன்னுடைய இன்னுயிரை துறந்து, சான்று பகர்ந்தார்
No comments:
Post a Comment