புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 August 2020

புனித ஆமோர், மறைப்பணியாளர் (St.Amor, Amorbach) August 17

இன்றைய புனிதர்
2020-08-17
புனித ஆமோர், மறைப்பணியாளர் (St.Amor, Amorbach)
பிறப்பு
ஏழாம் நூற்றாண்டு
ஸ்காட்லாந்து/ பிரான்ஸ்
இறப்பு
777
ஆமோர்பாஹ் Amorbach, பவேரியா, Germany

இவர் ஸ்காட்லாந்திலிருந்து மறைபணியாற்ற வந்தவர் என்றும், அக்குயிடானியன் (Aquitanien) என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும் வரலாறு கூறுகின்றது. இவர் எட்டாம் நூற்றாண்டில் மறைப்பணியை ஆற்றியுள்ளார். பின்னர் இவர் வூர்ட்ஸ்பூர்க் (Würzburg) என்ற மறைமாவட்டத்தில் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 734 ஆம் ஆண்டில் ஆமோர்பாக் என்ற ஊரில் ஆமோர் என்ற பெயரில் ஒரு துறவற சபையை நிறுவியுள்ளார்.

அமோர்பாக் என்பது ஓடன்வால்டு என்ற ஊரிலுள்ள ஓர் சிறிய கிராமம். வூர்ட்ஸ்பூர்க் என்ற மறைமாநிலத்தின் வடதென் பகுதிகளில் இவர் மிஷினரியாக பணிபுரிந்தார். இவர் அப்பகுதிகளில் மிகவும் போற்ற பெற்றவராக திகழ்ந்தார். இறை விசுவாசம் மக்களிடையே வளர வேண்டுமென்பதை குறிகோளாகக் கொண்டு பணியாற்றினார். இவர் தொடங்கிய "ஆமோர்" என்ற சபையை ஏறக்குறைய 30 ஆண்டுகள் கழித்து, புனித ஆசீர்வாதப்பர் சபையை சார்ந்தவர்கள் வழிநடத்தியுள்ளார்கள். இத்துறவற சபையினர் மக்களிடையே இறைபக்தியை பரப்பி, இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் சிறப்பான முறையில் வளர்த்தெடுத்துள்ளார்கள். இவ்விறைபக்தி இன்று வரை அவ்வூர் மக்களிடையே வேரூன்றி உள்ளது. அன்று ஆமோர்பாக்கிலிருந்த இத்துறவற சபைக்கு சொந்தமான ஆலயம், இன்று புரோட்டஸ்டாண்டு மக்களின் ஆலயமாக உள்ளது. 1734 ஆம் ஆண்டு 1000 ஆம் வருட ஜூபிலியையும் இச்சபைக் கொண்டாடியது. இவர் எழுப்பிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, பழமையான பெயர்பெற்ற ஆலயங்களில் சிறந்த ஆலயமாக போற்றப்படுகின்றது.

வெர்ஸ்(Wersch) என்ற ஊரைச் சேர்ந்த மாக்சிமிலியன் என்பவரே இவ்வாலயத்தை கட்டினார். ஆமோர் கூறியதின்படி அவ்வாலயம் அமைக்கப்பட்டு, அக்காலத்திலேயே மிகவும் அழகுவாய்ந்த ஆலயமாக ஆமோர் அதைக் கட்டினார். இறைவனின் இல்லத்திற்கு வருபவர்கள், இறைவனை அழகுற ஏற்று, வழிபட வேண்டுமென்ற நோக்குடன் மிக அழகாக கட்டப்பட்டது. இவ்வாலயம் கட்டி முடித்தபிறகு ஏராளமான மக்கள் திருப்பலிக்கு குவிந்தனர். ஆலயத்தில் மக்கள் தொகை கணக்கிட இயலாமல் இருந்தது. மிகப் புகழ்பெற்ற ஆலயமாக இவ்வாலயம் திகழ்ந்தது.


செபம்:
வாழ்வை வழங்கும் தந்தையே! நீர் ஒருவர் மட்டுமே நிலைவாழ்வு தருபவர் என்பதை உணர்ந்து, உம் மந்தையின் ஆடுகளை உம் வழி செல்ல தூண்டினீர். உம் தூண்டுதலை உணர்ந்து செயல்பட்ட புனித ஆமோரைப்போல, நாங்களும் உம் குரலுக்கு செவிசாய்க்க உம் வரம் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

புனித கிளாரா Clara von Montelfalco OESA
துறவி, காட்சியாளர் Mystikerin
பிறப்பு: 1275, மோண்டேஃபால்கோ Montefalco, இத்தாலி
இறப்பு: 17 ஆகஸ்டு 1308, மோண்டேஃபால்கோ
புனிதர்பட்டம்: 8 டிசம்பர் 1881


புனித சிலுவை யோஹன்னா Johanna vom Kreuz
சபை நிறுவுனர்
பிறப்பு: 18 ஜூன் 1666, சவ்முர், பிரான்ஸ்
இறப்பு: 17 ஆகஸ்டு 1736, சவ்முர்
புனிதர்பட்டம்: 31 அக்டோபர் 1982


மம்மாஸ் Mammas
மறைசாட்சி
பிறப்பு: 255/260, காங்கிரா Gangra, துருக்கி
இறப்பு: 270/275, செசாரியா, கப்பதோக்கியா, துருக்கி
பாதுகாவல்: கால்நடைகள்

Saint of the Day : (17-08-2020)

St. Amor of Amorbach

Feastday: August 17
Death: 8th century

Amorbach Abbey (German: Kloster Amorbach) was a Benedictine monastery located at Amorbach in the district of Miltenberg in Lower Franconia in Bavaria, Germany.

It was one of four Carolingian foundations intended to establish Christianity in the region of the Odenwald (the others were the monasteries of Lorsch, Fulda and Mosbach).

According to legend, a Gaugraf named Ruthard called the Frankish bishop, Saint Pirmin, to the area to set up a monastic settlement with chapel west of today's town, at the entrance to the Otterbachtal. A disciple of Pirmin, an Aquitanian called "Amor" supposedly then moved the monastery to its current location in 734.[1]:82

By 800 it had become a Reichsabtei, the abbot being directly answerable to Charlemagne. Pepin united it to the Bishopric of Würzburg, although control of it was much disputed by the Bishops of Mainz.

The abbey played an important role in the clearing and settlement of the vast tracts of forest in which it was located, and in the evangelisation of other areas, notably Saxony: many of the abbots of the missionary centre of Verden an der Aller - later to become the Bishops of Verden - had previously been monks at Amorbach. It was severely damaged by the invasions of the Hungarians in the 10th century.

In 1446, the priest Johannes Keck brought reliquaries of a "Saint Amor" and a "Saint Landrada" from Münsterbilsen near Maastricht to the church Amorbrunn, which started to attract pilgrims. In particular after the end of the Thirty Years' War in 1648, people came in search of help for childlessness.[1]:82

In 1525 the abbey buildings were stormed and plundered during the German Peasants' War by forces under the command of Götz von Berlichingen. During the Thirty Years' War the abbey was attacked by the Swedes in 1632, was dissolved for a short time between 1632 and 1634 and the lands taken by a local landowner, and although it was afterwards restored and the lands regained, there followed a period of decline and poverty.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment