புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 August 2020

புனித ஒஸ்வால்டு (St. Oswald of North Umbria) August 5

இன்றைய புனிதர் :
(05-08-2020)

புனித ஒஸ்வால்டு 
(St. Oswald of North Umbria)
பிறப்பு : 604
வட உம்பிரியா

இறப்பு : 5 ஆகஸ்டு 642
வட உம்பிரியா

பாதுகாவல் : ஆங்கிலேய அரசர்கள், காண்டோன் நகர்

​நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 5

புனித ஒஸ்வால்டு, 634 முதல் தமது மரணம் வரை வட உம்பிரியா நாட்டின் அரசராக இருந்தவர். இவரது தந்தை ஈத்தல்ஃபிரித் ((Ethelfrith)) ஆவார்.
ஓஸ்வால்டு ஸ்காட்லாந்தில் உள்ள கொலும்பான் என்ற ஊரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். 634ல் அவர் பிறந்த நாடான இங்கிலாந்தில் போர் மூண்டதால் ஸ்காட்லாந்திலிருந்து நாடு திரும்பினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களை பராமரிக்க இன்னல்கள் பல அடைந்தார். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்வதற்கென்று, ஆயர் எய்டன் Aidan என்பவரின் உதவியுடன் 635ல், ஹோலி ஐலாந்து தீவில் (Holy Island) இருந்த புனித ஆசீர்வாதப்பர் துறவற இல்லம் ஒன்றை கட்டினார்.
ஏராளமான கிறிஸ்தவ மக்களை உருவாக்கினார். அம்மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்து அவர்களுக்கு சிறந்ததோர் ஞானத்தந்தையாக திகழ்ந்தார். மிகச் சிறப்பாக கிறிஸ்தவர்களை காத்து, வழிநடத்திய இவரை ஹைட்னிஸ் அரசர் (Heidnisch King) தாக்கியபோது இறந்தார். ஓஸ்வால்டு இறந்த பின்னர், இவரின் பக்தி அதிவேகத்தில் பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி மற்றும் இன்னும் பல நாடுகளில் பரவியது.
பிரிட்டனில் சக்திமிகு ஆட்சியாளராக திகழ்ந்த ஒஸ்வால்டு "மேசர்ஃபீல்டு" போரில் (Battle of Maserfield) உயிர் துறந்தார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (05-08-2020)

Saint Oswald of Northumbria

Son of the pagan King Aethelfrith the Ravager of Bernicia and Princess Aacha of Deira, the second of seven children. Brother of Saint Ebbe the Elder. Nephew of Saint Ethelreda. When his father was killed in battle when Oswald was eleven years old, his mother fled with the family for the court of King Eochaid Buide at Dunadd in modern Scotland. There he converted to Christianity. Educated at the Iona Abbey with his brother Oswiu. Soldier; known to have fought at the Battle of Fid Eoin in 628. Contemporary writings describe him as having "arms of great length and power, eyes bright blue, hair yellow, face long and beard thin, and his small lips wearing a kindly smile". Reported to have had a pet raven for years.

In 634, Oswald formed his own army, returned to Northumbria, defeated King Cadwallon of Gwynedd, and took the throne of Northumbria. Prior to the battle, he had received a vision of Saint Colman of Lindisfarne; he had also erected a large cross on the field on the night before, attributed his win to his faith and the intervention of the saint, and the victory is known as the Battle of Heavenfield. Brought Saint Aidan of Lindisfarne to Northumbria as bishop to evangelize the kingdom. Built churches and monasteries in his realm, and brought in monks from Scotland to help establish monastic life. Married the daughter of King Cynegils of Wessex, and convinced Cynegils to allow Saint Birinus to evangelize in that kingdom.

Due to victories in combat, and family alliances, Saint Bede claims that Oswald was recognised as Bretwalda by all of Saxon England. His royal standard of purplish-red and gold forms the basis of the coat of arms of modern Northumberland. Because he was killed in battle with invading pagan forces, he is sometimes listed as a martyr. Noted for his personal spirituality, piety, faith, his devotion to the kingdom, his charity to the poor, and his willingness to take arms to defend his throne.

Oswald was a king and a saint, and made a large mark in his short time; inevitably, large tales are told of him.

• One Easter he was about to dine with Saint Aidan of Lindisfarne. A crowd of poor came begging alms. Oswald gave them all the food and the wealth he carried on him, then had his silver table settings broken up and distributed.

• Saint Aidan was so moved by the king's generosity that he grasped Oswald's right hand and exclaimed, "May this hand never perish!" For years after, the king was considered invincible. The hand has, indeed, survived, as it is enshrined as a relic in the Bamburgh church.

• Oswald's body was hacked to pieces on the battle field where he fell, and his head and arms stuck on poles in triumph. One arm taken to an ash tree by Oswald's pet raven. Where the arm fell to the ground, a holy well sprang up.

• Once a horseman was riding near Heavenfield. The horse developed a medical problem, fell to the ground, rolling around in pain. At one point it happened to roll over the spot where Oswald had died, and was immediately cured.

• The horseman told his story at a nearby inn. The people there took a paralysed girl to the same spot, and she was cured, too.

• People began to take earth from the spot to put into water for the sick to drink. So much earth was removed that it left a pit large enough for a man to stand in.

• Oswald's niece wanted to have the king buried at Bardney Abbey, Lincolnshire. The monks were reluctant as they were not on good terms with Northumbrian overlords, and when the burial train arrived at their door after dark, they refused to open to let the party in. However, the coffin emitted a bright light that shone into the heavens. The monks considered it a sign, vowed never to turn away anyone for any reason, and allowed the burial.

• When the monks washed the bones prior to enshrinement, they poured the water onto the ground nearby. Local people soon learned that the ground had power to heal.

• A sick man who had led a dissolute life drank water which contained a chip of the stake on which Oswald's head had been spiked. The man was healed, and reformed his life.

• A little boy was cured of a fever by sitting by Oswald's tomb at Bardney.

• Pieces from the Heavenfield cross were claimed to have healing powers.

• Healing powers were claimed for moss that grew on the cross.

• A plague in Sussex, England was stopped by Oswald's intercession.

• Archbishop Willibrord recounted to Saint Wilfrid a series of tales of miracles worked in Germany by Oswald's relics.

Born :
c.605 in Northumbria, England

Died :
 killed in battle with invading pagan Welsh and Mercian forces on 5 August 642 at Maserfield, Shropshire, England, and thus often listed as a martyr
• reported to have died praying for the souls of his dying bodyguards
• body hacked to pieces with his head and arms stuck on poles
• the dismembered limbs eventually entered relic collections in monasteries around England
• remaining body buried first at Bardney Abbey, Lincolnshire, England
• later translated to Saint Oswald's church, Gloucester, England

Patronage :
Zug, Switzerland

---JDH---Jesus the Divine Healer---


† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 5)

✠ புனிதர் ஒஸ்வால்ட் ✠
(St. Oswald of Northumbria)

நார்தும்ப்ரியா அரசன்:
(King of Northumbria)

பிறப்பு: கி.பி. 604
டேய்ரா, நார்தும்ப்ரியா
(Deira, Northumbria)

இறப்பு: ஆகஸ்ட் 5, 642

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodoxy)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)

முக்கிய திருத்தலங்கள்:
பார்ட்னி மடாலயம், லிங்கன்ஷையர், இங்கிலாந்து
(Bardney Abbey, Lincolnshire, England)

பாதுகாவல்: ஆங்கிலேய அரசர்கள், காண்டோன் நகர்

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 5

புனிதர் ஒஸ்வால்ட், கி.பி. 634ம் ஆண்டு முதல், தமது மரணம் வரை “நார்தும்ப்ரியா” (King of Northumbria) நாட்டின் அரசராக இருந்தவரும், புனிதராக வணக்கத்திற்குரியவருமாவார். மத்திய காலங்களில் இவருக்கான ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறை இருந்தது.

இவர் “பெர்நீசியா” (Bernicia) நாட்டின் அரசன் “எத்தல்ஃபிரித் (Æthelfrith) என்பவரது மகன் ஆவார். சிறிது காலம் நாடு கடத்தப்பட்டிருந்த இவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர் “கேட்வல்லோன் அப் கெட்ஃபன்” (Cadwallon ap Cadfan) என்பவரை தோற்கடித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவராவார். “பெர்நீசியா” (Bernicia) மற்றும் “டேய்ரா” (Deira) ஆகிய இரண்டு நார்தும்ப்ரியன் அரசுகளை (Northumbrian kingdoms) மீண்டும் ஒரே குடையின்கீழே கொண்டுவந்தவர் ஆவார். நார்தும்ப்ரியா (Northumbria) நாட்டில் கிறிஸ்தவம் பரவ முழு காரணமாக இருந்தவர் இவரே ஆவார்.

தமது எட்டு ஆண்டு கால ஆட்சியில், பிரிட்டனின் மிகச் சக்திவாய்ந்த ஆட்சியாளராக மாறிய ஓஸ்வால்ட் “மேசர்ஃபீல்ட்” போரில் (Battle of Maserfield) கொல்லப்பட்டார். இவரது மரணத்தின் சுமார் நூறு ஆண்டுகளின் பின்னர், ஆங்கிலேயத் துறவியும், அறிஞரும், எழுத்தாளரும் ஆங்கிலேய சரித்திரத்தின் தந்தையுமான (The Father of English History) “வணக்கத்திற்குரிய புனிதர் பீட்” (St. Venerable Bede) என்பவர் எழுதிய “ஆங்கிலேயத் திருச்சபையின் வரலாறு” (Ecclesiastical History of the English People) எனும் புத்தகத்தில் மன்னர் ஒஸ்வால்ட் அவர்களை “புனிதரான அரசன்” (Saintly king) என்று வர்ணிக்கிறார். மேலும், இவர் பற்றின நேர்மறையான பல மதிப்பீடுகளை எழுதியிருந்தார். ஒஸ்வால்ட் பற்றின சிறிதளவேயான தகவல்களும் இப்புத்தகத்திலேயே உள்ளதாம்.

ஒஸ்வால்டின் தந்தை “எத்தல்ஃபிரித்” (Ethelfrith), “பெர்நீசியா” மற்றும் “டேய்ரா” (Bernicia and Deira) ஆகிய நாடுகளின் வெற்றிகரமான ஆட்சியாளராக இருந்தவர் ஆவார். இவரது தாயார் “அச்சா” (Acha of Deira) “டேய்ரா” அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாவார். “டேய்ராவை” (Deira) முற்றுகையிட்டு வெற்றிகொண்டபோது “எத்தல்ஃபிரித்” இவரை மணந்ததாக சரித்திர ஆசிரியர் “பீட்” கூறுகிறார்.

ஆதி பிரிட்டிஷ் குடிகளுக்கெதிரான போர்களில் வெற்றியாளரான “எத்தல்ஃபிரித்”, இறுதியில் கி.பி. 616ம் ஆண்டு “ஐடில்” (River Idle) ஆற்றங்கரையில் நடந்த போரில், “ரேட்வால்ட்” (Raedwald of East Anglia) எனும் “ஆங்கிலோ-சாக்ஸன்” (Anglo-Saxon) அரசனால் கொல்லப்பட்டார். இந்த தோல்வியால், “டேய்ரா” (Deiran royal line) அரச குடும்பத்தைச் சேர்ந்த “எட்வின்” (Edwin) (அச்சாவின் சகோதரர்) நார்தும்ப்ரியா அரசனானார். ஒஸ்வால்டும் அவரது சகோதரர்களும் வடக்கு பிரிட்டன் பிராந்தியங்களுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஒஸ்வால்ட் தமது இளமை காலத்தை வடக்கு பிரிட்டனின் “ஸ்காட்டிஷ்” அரசான “டல் ரியாடா” (Scottish kingdom of Dál Riata) எனுமிடத்தில் கழித்தார். இங்கேதான் கி.பி. 627ம் ஆண்டு இவர் கிறிஸ்தவராக மனம் மாறினார். இங்கேயிருந்த காலத்தில் இவர் அயர்லாந்தின் (Ireland) யுத்தங்களில் பங்குபெற்றார்.

கி.பி. 634ம் ஆண்டு, சிறு இராணுவ படை ஒன்றின் தலைவராக இருந்த ஒஸ்வால்ட், “ஹெக்ஸாம்” (Hexham) அருகேயுள்ள “ஹெவன்ஃபீல்ட்” (Heavenfield) எனுமிடத்தில் நடந்த யுத்தத்தில் எதிரியான “கேட்வெல்லோன்” (Cadwallon) என்பவனுடன் போரிட்டார். போர் ஆரம்பிக்கு முன்னர், மரத்தினாலான சிறு சிலுவை ஒன்றினை செய்து, அதன்முன் முழங்கால்படியிட்டு ஜெபித்தார். போரில் வெற்றி கண்டார்.

“ஹெவன்ஃபீல்ட்” (Heavenfield) போர் வெற்றியின் பிறகு, சிதறியிருந்த நார்தும்ப்ரியாவை ஒஸ்வால்ட் ஒருங்கிணைத்தார். ஏற்கனவே கி.பி. 627ம் ஆண்டு கிறிஸ்தவராக மனமாற்றம் பெற்றிருந்த இவர், வெற்றிகரமான, புனிதமான அரசை நிறுவினார். நார்தும்ப்ரியா முழுதும் கிறிஸ்தவம் பரவுவதற்கு மிகவும் அதிகமாக பாடுபட்டு உழைத்தார். மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு அயர்லாந்து பகுதிகளை உள்ளடக்கிய “ஐரிஷ்” (Irish of Dál Riata) ஆட்சியாளர்களிடம், தமது மக்களின் மன மாற்றத்திற்காக ஆயர் ஒருவரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் அவர்கள் ஒரு கண்டிப்பான ஆயரை அனுப்பியிருந்தனர். ஆனால் அவரால் வெற்றிகரமாக பணியாற்ற இயலவில்லை. பின்னர் அவர்கள், ஆயர் “ஐடான்” (Saint Aidan of Lindisfarne) என்பவரை அனுப்பினர். இவர் வெற்றிகரமாக பணியாற்றினார். இவருடைய ஆன்மீக பணிகளுக்காக, ஒஸ்வால்ட் இவருக்கு “லிண்டிஸ்ஃபார்ன்” (Lindisfarne) எனும் தீவை அளித்தார். ஏழை மக்களின்பால் அன்பு கொண்டிருந்த இவர், ஜெபமும் தவமுமாக ஒரு தூய ஆட்சியை நடத்தியதாக அறிஞரும், எழுத்தாளருமான “வணக்கத்திற்குரிய புனிதர் பீட்” (St. Venerable Bede) கூறுகிறார்.

இங்கிலாந்தின் “ஒஸ்வெட்ரி” (Oswestry) எனுமிடத்தில் நடந்த “மேசர்ஃபீல்ட்” (Battle of Maserfield) போரில் “மெர்சியன்ஸ்” (Mercians) என்பவர்களால் கொல்லப்பட்ட ஒஸ்வால்ட், தமது போர்ப்படை வீரர்களுக்காக ஜெபிக்கும் வழக்கமுள்ளவர் ஆவார்.

No comments:

Post a Comment