இன்றைய புனிதர் :
(16-08-2020)
அரசர் முதலாம் ஸ்டீபன் Stephen I von Ungarn
ஹங்கேரியின் தேசிய புனிதர்
பிறப்பு : 969
கிரான் Gran, ஹங்கேரி
இறப்பு : 15 ஆகஸ்டு 1038,
ஹங்கேரி
பாதுகாவல்: ஹங்கேரி
இவர் ஏறக்குறைய 1000 ஆம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று, ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். தனது 20 ஆம் வயதில் பவேரியா நாட்டு அரசர் புனித 2 ஆம் ஹென்றியின் சகோதரி கிசேலா(Giesela) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சிபுரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார்.
இவர் அனுமதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்துவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார்.
ஸ்டீபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்கலையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்துவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். இவர் செய்த இறைப்பணியால் இவர் இறந்தபிறகும் இவரின் வலது கையானது. அழியாமல் இருந்தது. தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிக சிறந்தவராக திகழ்ந்தார்.
செபம்:
முதலும் முடிவுமான இறைவா! உம்மையே முழுமுதலாக கொண்டு, உம்மை மட்டுமே தன் நாட்டு மக்களில் மையமாக வைத்து, வாழ்ந்த புனித ஸ்டீபனின் அருஞ்செயல்களை நினைத்து, உமக்கு நன்றி நவில்கின்றோம், அவர் காட்டிய இறைவழியில் அம்மக்களை நீர் எந்நாளும் உடனிருந்து வழிநடத்தியருள் வேண்டுமாய் இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (16-08-2020)
St. Stephen of Hungary
St. Stephen was from a very noble family and was born in the year 997 to father Prince Geza and mother Sarolt of Hungary. He married Giselle, the daughter of Duke Henry-Ii of Bavaria. He took very sincere efforts to spread Christianity and extended patronage to Church leaders. St. Stephen was anointed as king of Hungary by Pope Sylvester-II on the Christmas day in the year 1001, with the consent of the Holy Roman Emperor Otto-III. St. Stephen dedicated his crown to Holy Mary, during the coronation. His only son Emeric died after being wounded in a hunting expedition in the year 1031. Therefore St. Stephen was having no son left to rule his Kingdom. So in his death bed he raised the Holy Crown by his right hand and prayed to the Holy Mary to take the Hungarians as Her subjects and to become the Queen of Hungarians. He died on August 15, 1038, on the commemoration day of the Assumption of Mary.
St. Stephen’s right hand is kept as a relic and is called as the Holy Right by Hungarians. His right hand remains uncorrupted due to the reason that with this hand he raised the Holy Crown towards heaven and prayed to the Virgin Mary. The right hand is now in the Basilica of King Saint Stephen in Budapest.
He is venerated as the patron saint of masons, stone cutters and brick layers. He was canonized by Pope Gregory-VII on August 20, 1083.
---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 16)
✠ ஹங்கேரியின் புனிதர் முதலாம் ஸ்டீஃபன் ✠
(St. Stephen I of Hungary)
ஹங்கேரியின் அரசர்:
(King of Hungary)
பிறப்பு: கி.பி. 975
எஸ்டர்காம், ஹங்கேரி
(Esztergom, Principality of Hungary)
இறப்பு : ஆகஸ்டு 15, 1038,
எஸ்டர்காம், ஹங்கேரி அரசு
(Esztergom or Székesfehérvár, Kingdom of Hungary)
புனிதர் பட்டம் : 1083
திருத்தந்தை ஏழாம் கிரகோரி
(Pope Gregory VII)
பாதுகாவல்: ஹங்கேரி
நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 16
புனிதர் முதலாம் ஸ்டீஃபன், கி.பி. 997ம் ஆண்டு முதல் கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு வரையான காலத்தில் பதவியிலிருந்த ஹங்கேரியர்களின் கடைசி மகா இளவரசரும் (Grand Prince of the Hungarians), கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு முதல், 1038ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ஆட்சியிலிருந்த ஹங்கேரியின் முதல் அரசனும் (First King of Hungary) ஆவார். இவர் பிறந்தபோது, இவருக்கு பேகனிய பெயரான (Pagan name) “வஜ்க்” (Vajk) என்ற பெயர் இடப்பட்டது. இவரது திருமுழுக்கு பற்றின விவரங்கள் தெரியவில்லை. ஹங்கேரி நாட்டின் மகா இளவரசர் “கேஸா” மற்றும் “சரோல்ட்” (Grand Prince Géza and Sarolt) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரது பெற்றோர் இருவருமே திருமுழுக்கு பெற்றிருப்பினும், இவர்களது குடும்ப உறுப்பினர்களில், பக்தியுள்ள கிறிஸ்தவரான முதல் உறுப்பினர் ஸ்டீஃபன் ஆவார். தூய ரோம பேரரசன் “இரண்டாம் ஹென்றியின்” (Henry II, Holy Roman Emperor) சகோதரியான “கிசேலாவை” (Gisela of Bavaria) திருமணம் செய்துகொண்டார்.
கி.பி. 997ம் ஆண்டு, தமது தந்தை இறந்ததன் பிறகு, ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக (Pagan warriors) என்ற படை வீரர்களின் துணை கொண்டிருந்த 'கொப்பாணி' (Koppány) என்ற தமது உறவினர்களுக்கெதிராக போராட வேண்டியிருந்தது. தமது உறவினர்களான கொப்பாணியை வென்ற ஸ்டீஃபன், திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்ட்டர் (Pope Sylvester II) அவர்கள் அனுப்பிய கிரீடத்தை அணிந்து ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஹங்கேரி நாட்டின் கடைசி இளவரசரும் முதலாம் அரசரும் இவரேயாவார்.
தன் தந்தையின் மரணத்தின்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சி புரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார்.
இவர் அமைதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களையும், மூன்று பெனடிக்டின் மடாலயங்களையும் உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்தவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார்.
ஸ்டீஃபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்களையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்தவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார்.
கி.பி. 1038ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று மரித்த ஸ்டீஃபன், “ஸ்செக்ஸ்ஃபெர்வர்” (Székesfehérvár) எனுமிடத்தில் கட்டப்பட்டு, அன்னை மரியாளுக்கு அர்ப்பணித்திருந்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய இறப்பு, பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர்களை ஏற்படுத்தியது. கி.பி. 1083ம் ஆண்டில், முதலாம் ஸ்டீஃபனும், அவரது மகனான “எமெரிக்கும்” (Emeric), “க்ஸனாட்” (Csanád) மறைமாவட்டத்தின் ஆயர் “கெரார்ட்” (Gerard) ஆகிய மூவரும் திருத்தந்தை “ஏழாம் கிரகோரியால்” (Pope Gregory VII) புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். ஸ்டீஃபன், ஹங்கேரி மற்றும் அண்டை பிரதேசங்களில் பிரபலமான புனிதர் ஆவார். ஹங்கேரியில், அவருடைய நினைவுத் திருவிழா (ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்படுகிறது) மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் ஒரு பொது விடுமுறை நாளுமாகும்.
No comments:
Post a Comment