அருளாளர் ஜெர்ட்ரூட் ப்ராஸ்பெரி (1799-1847)
செப்டம்பர் 13
இவர் இத்தாலியில உள்ள பெருகியாவில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்.
சிறுவயது முதலே கடவுள்மீது மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்து வந்த இவர், வளர்ந்து பெரியவரானதும், புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து, செவிலியர், கோயில் நிர்வாகி, நவகன்னியர்களுக்குப் பொறுப்பாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகிக்கத் தொடங்கி, பின்னாளில் துறவு மடத் தலைவியாகவும் உயர்ந்தார்.
நற்கருணை ஆண்டவரிடமும், இயேசுவின் தூய்மைமிகு இதயத்திடமும் மிகுந்த பற்றுக் கொண்ட இவர், ஆண்டவர் சிலுவை சுமப்பது போன்ற காட்சிகளை அடிக்கடி கண்டு வந்தார்.
இப்படி இறைவன்மீது நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், 1847 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 2012 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment