புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 September 2020

சலேத்_அன்னை(செப்டம்பர் 19)

சலேத்_அன்னை

(செப்டம்பர் 19)
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறிய மலைக் கிராமம்தான் சலேத் அல்லது லா சலேத் (La Salette) என்ற கிராமம். 800 க்கும் குறைவான மக்கள் தொகையைக்கொண்ட இந்தக் கிராமத்தில் இருந்த மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்.

இந்த மலைக் கிராமத்தில் மேக்ஸிமின், மெலானி என்ற மாடு மேய்க்கும் சிறுவர் இருவர் இருந்தனர். 1846 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 19 ஆம் நாள் மாலைவேளையில்,  இவர்கள் இருவரும் மலையடிவாரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது பெண்மணி ஒருவர் மிகவும் ஒளிமயமான தோற்றத்தில், கழுத்தில் சிலுவையை அணிந்தவராய், முகத்தைத் தன் மடியில் புதைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கக் கண்டனர். அவர் அன்னை மரியா தான் என்று அறிந்து கொள்வதற்கு சிறுவர் இருவருக்கும் வெகு நேரம் பிடிக்கவில்லை. 

அந்தச் சிறுவர் இருவரையும் தன் அருகே அழைத்த அன்னை மரியா, "உலக மக்கள் தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்ப மன்றாட வேண்டும்... ஆண்டவரின் திருப்பெயருக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தார். அன்னை மரியா இச்செய்திகளை அந்த இரண்டு சிறுவர்களிடம் சொன்ன போது அழுதுகொண்டேதான் சொன்னார். 

இதற்கு பின்பு அந்த இரண்டு சிறுவர்களும் ஊருக்குள் வந்து, அன்னை மரியா தங்களுக்குக் காட்சி தந்ததையும், அவர் தங்களிடம் இரண்டு முக்கியமான செய்திகளைச் சொன்னதையும் எடுத்துச் சொன்னார்கள். மக்கள் முதலில் இதனை நம்பவில்லை; பின்னர்தான் நம்பினர்.

இதைத் தொடர்ந்து 1851 ஆம் ஆண்டு கிரநோபள் நகரின் ஆயரான பிலிப்பெர்ட் தெ  ப்ரூளார்ட் என்பவரின் பரிந்துரையின் பேரில், திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் சலேத் அன்னையின் காட்சியை அங்கீகரித்தார். 
www.stjck.blogspot com

No comments:

Post a Comment