புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 September 2020

செப்டம்பர் 24#இரக்கத்தின்_அன்னை

செப்டம்பர் 24

#இரக்கத்தின்_அன்னை 
பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர் புனித பீட்டர் நோலாஸ்கா. 

மிகப்பெரிய செல்வந்தரான இவர், மூர் இனத்தவரால் ஆப்பிரிக்கச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை எப்படியாவது மீட்கவேண்டும் என்று முடிவுசெய்தார். அதற்காகத் தன் சொத்துக்களையெல்லாம் விற்றார்.

இவருடைய இந்த முயற்சிக்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள அரகோனை ஆண்டுவந்த முதலாம் ஜேம்ஸ் என்ற மன்னரும், பெனபோர்ட் நகர்ப் புனித ரெய்மெண்டும் பெரிதும் உதவினர்.

இவர்களுடைய உதவியினால் புனித பீட்டர் நோலாஸ்கா, மூர் இனத்தவரிடம் அடிமைகளாக இருந்த கிறிஸ்தவர்களை மீட்க முயற்சி செய்துகொண்டிருக்கும்போதுதான், அன்னை மரியா இவருக்கு இரண்டு பைகள் நிறைய தங்கக் காசுகளோடு தோன்றினார். 

தங்கக் காசுகள் இருந்த அந்த இரண்டு பைகளையும் புனித பீட்டர் நோலாஸ்காவிடம் கொடுத்த அன்னை மரியா, இவற்றைக் கொண்டு மூர் இனத்தவரிடம் அடிமைகளாக  இருக்கும் கிறிஸ்தவர்களை மீட்டு வா என்றார். கூடவே அவரோடு சேர்ந்து பணிபுரியக்கூடியவர்கள் அணியவேண்டிய வெந்நிற ஆடையையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

இவ்வாறு அன்னை மரியா, புனித பீட்டர் நோலாஸ்காவிற்குத் தோன்றிய நாள் 1281 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 1.

No comments:

Post a Comment