புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 September 2020

புனித ஜெரார்ட் சார்கிரேடோ St. Gerard Sargredoநினைவுத் திருநாள்: செப்டம்பர் 24

புனித ஜெரார்ட் சார்கிரேடோ 
St. Gerard Sargredo
நினைவுத் திருநாள்: செப்டம்பர் 24
பிறப்பு : 980
இறப்பு : 24 செப்டம்பர் 1046
புனிதர்பட்டம் : 1083, திருத்தந்தை 7 ஆம் கிரகோரி
பாதுகாவல் : ஹங்கேரி, புடாபெஸ்ட் நாடு

இவர் கசானாட் (Csanad) என்ற மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். வெனிஸ் நகர் ஆயர் ஹங்கேரி நாட்டு அரசருக்கு பலவிதங்களில் உதவினார். அதனால் புனித ஜெரார்ட் வெனிஸ் நகர ஆயருக்கு மறைமாவட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர் ஹங்கேரி நாட்டு அரசர் புனித ஸ்டீபனின் மகன் வெனிஸ் நகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, அவருக்கும், படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். ஹங்கேரி நாட்டில் கிறிஸ்தவம் வளர்வதற்கு அந்நாட்டு அரசர் புனித ஸ்டீபனிற்கும் பெரும் உதவியாளராக இருந்தார்.

இவர் ஹங்கேரியில் மலைப்பகுதியில் செல்லும்போது, அவர் சென்ற இரு சக்கர வண்டி கீழே சரிந்ததில், மலை உச்சியிலிருந்து விழுந்துள்ளார். அவர் கீழே பாதாளத்தில் விழுந்ததும் இறந்துவிட்டார் போல காணப்பட்டார். ஆனால் அவரின் உடலில் சிறிதும் அடிபடாமல் தன் கைகளை கூப்பி, தான் இறப்பதற்காக செபித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இவர் இறந்தப்பிறகு அம்மலையானது கில்லர்ட் ஹில் (Gillert Hill) என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இவர் இறக்கும் வரை வெனிஸ் மற்றும் ஹங்கேரி நாட்டு மக்களுக்காக பெரிதும் உழைத்து மறைப்பணியை ஆற்றியுள்ளார்.

செபம்:
அருள் பொழியும் அருள்நாதரே! உமது சிறந்த போதகராக மறைப்பணியாளராம் புனித ஜெரார்டை நீர் திருச்சபைக்கு தந்தீர். தனது நலன்களினாலும், போதனையாலும் இடைவிடா இறைவேண்டலினாலும், எங்கள் வாழ்வில் எங்களுக்கு அவர் துணையாய் இருக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (24-09-2020) 

Saint Gerard Sagredo

St Gerard was Abbot of the Benedictine monastery of San Giorgio Maggiore at Venice. On a pilgrimage to the Holy Land, when passfng through Hungary, he was detained by King St Stephen and persuaded to work for the conversion of the Magyars and to be the tutor of his son, Prince St Emeric. In 1035 Gerard, who was known in Hungary as “Collert”, became the first Bishop of Csanad, Hungary. He administered his See with great zeal and his flock owed their great devotion to the Blessed Virgin to his apostolic efforts. However, with the death of King St Stephen in 1037, a reaction to Christianity set in. In 1046, Gerard, the staunch Christian that he was, and many of his followers were either lanced or stoned to death at Buda. St Gerard, whose body was thrown into the Danube, is revered as the Apostle of Hungary.

Born: 
23 April 980 in Venice, Italy

Died : 
stabbed to death with a lance on 24 September 1046 at Buda, Hungary
• body thrown into the Danube River
• surviving relics enshrined in the Basilica of San Donato in Murano, Venice, Italy

Canonized : 
1083 by Pope Saint Gregory VII

Patronage : Hungary

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment