புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 September 2020

புனித ஃபெர்மினுஸ் (272-303)செப்டம்பர் 25

புனித ஃபெர்மினுஸ் (272-303)

செப்டம்பர் 25
இவர் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவர். இவரது தந்தை உரோமை அரசாங்கத்தில் ஓர் உயரதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர். அவர் ஆயர் ஹானஸ்டஸ் என்பவரின் போதனையால் தொடப்பட்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் தன் மகனாக ஃபெர்மினுஸையும் கிறிஸ்துவ நெறியின் படி வளர்த்து வந்தார்.

ஃபெர்மினுசுக்கு முப்பத்து ஒன்றாம் வயது நடக்கும்பொழுது, பிரான்ஸ் நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இவர் அமியன்ஸ் என்ற நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு இவர், கடவுளின் வார்த்தையை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார். இந்நிலையில்தான் உரோமை மன்னன் தியோகிளசியனின் ஆள்கள் இவரை கி.பி 303 ஆம் ஆண்டு தலைவெட்டிக் கொன்று போட்டார்கள்.

No comments:

Post a Comment