புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 September 2020

✠ அலெக்ஸாந்திரியா நாட்டு புனிதர் யூப்ரோசைன் ✠(St. Euphrosyne of Alexandria). செப்டம்பர் 25

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 25)

✠ அலெக்ஸாந்திரியா நாட்டு புனிதர் யூப்ரோசைன் ✠
(St. Euphrosyne of Alexandria)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ----
அலெக்ஸாண்ட்ரியா, எகிப்து
(Alexandria, Egypt)

இறப்பு: கி.பி. 5ம் நூற்றாண்டு

ஏற்கும் சபை:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 25

அலெக்ஸாந்திரியா நாட்டு புனிதர் யூப்ரோசைன், ஆண் உடையை அணிந்துகொண்டு உள்ளூர் துறவு மடத்தில் சந்நியாசியாக வாழ்ந்த ஒரு பெண் துறவி ஆவார். அவரது நினைவுத் திருநாள், கத்தோலிக்கம், மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் செப்டம்பர் மாதம், 25ம் நாளன்று, கொண்டாடப்படுகிறது.

யூப்ரோசைன், அலெக்ஸாந்திரியா நாட்டின் செல்வந்தர்களும் ஒருவரான "பாப்னூஷியஸ்" (Paphnutius) என்பவரது மகள் ஆவார். பெற்றோரின் முதுமை காலத்தில், துறவி ஒருவரது செபத்தின் மூலம் அற்புதமான முறையில் பிறந்தவர் ஆவார். இவரது அன்பான தந்தை  பாப்னூஷியஸ், இவரை ஒரு பணக்கார இளைஞனுடன் திருமணம் செய்துவைக்க விரும்பினார்.

ஆனால் ஏற்கனவே தனது வாழ்க்கையை கடவுளிடம் அர்ப்பணிப்பதாக சபதம் ஏற்றிருந்த இவர், தனது சபதத்தை மீறுவதற்கான அழுத்தத்திலும், அவள் ஒரு ஆணின் உடையணிந்து "ஸ்மராக்டஸ்" (Smaragdus) ("மரகதம்") ("Emerald") என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் அருகிலுள்ள ஆண்கள் மடாலயத்திற்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் ஒரு முழுமையான சந்நியாச வாழ்க்கையை நோக்கி வேகமாக முன்னேறினார். அவருடைய பிறப்புக்காக ஜெபித்த அதே துறவியே அங்கே மடாதிபதியாக இருந்தார். அந்த மடாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் இருந்தார்.

சில வருடங்கள் கழித்து, பாப்னூஷியஸ் தனது மரணத்தில் ஆறுதலுக்காக மடாதிபதியிடம் முறையிட்டபோது, மடாதிபதி அவரை ஸ்மராக்டஸ் என்ற போர்வையில் யூப்ரோசைனின் பராமரிப்பில் அவரை ஈடுபடுத்தினார். பயனுள்ள ஆலோசனைகள் பலவற்றையும், ஆறுதலான அறிவுரைகளையும் தனது சொந்த மகளிடமிருந்தே பெற்ற அவர், தமது மகளை அடையாளம் காணத் தவறிவிட்டார். தாம் இறக்கும்வரை தாம்தான் அவரது காணாமல் போன அவரது சொந்த மக்கள் என்று, யூப்ரோசின் தன்னை அவருக்கு வெளிப்படுத்தவேயில்லை.

யூப்ரோசைனை அடக்கம் செய்தபின், பாப்னூஷியஸ் தனது உலகப் பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, அதே மடத்தில் ஒரு துறவியாக ஆனார். அங்கு, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறக்கும் வரை தனது மகள் தங்கியிருந்த அதே பழைய அறையை பயன்படுத்தினார்.

† Saint of the Day †
(September 25)

✠ St. Euphrosyne of Alexandria ✠

Virgin:

Born: ----
Alexandria, Egypt

Died: 5th Century AD

Venerated in:
Catholic Church
Eastern Orthodox Church

Feast: September 25

Saint Euphrosyne of Alexandria was a female saint who adopted male attire and lived at a local monastery as an ascetic. Her feast day is celebrated both in the Catholic and Eastern Orthodox Churches on 25 September.

St. Euphrosyne was, according to legend, a Christian virgin and sole daughter of a wealthy trader, the Holy Pafnutio from Alexandria. He and his wife had lived in a childless marriage for many years and began to grow old.

Pafnutios was a deeply faithful and devout Christian and he used to go in a monastery where the abbot was his spiritual guide. At this old monk’s intercession, Pafnutios’s wife finally became pregnant, and Euphrosyne was born. The mother died when her daughter was twelve years old, so she was raised by her pious father.

When she turned eighteen, her father wanted her to marry and he made sure she got engaged to a rich young man. But she wanted to preserve her chastity and wanted to go to the monastery, so she started selling her jewellery and giving away her possessions to the poor. She also stopped washing her face, “even with cold water”.

While her father was away, she secretly received the veil of a wandering monk. But she feared her father’s reaction and knew he would look for her in nuns, so she cut her hair and dressed in men’s clothes and stepped in as a monk in the monastery near Alexandria where her father used to go and where the old monk had Asked for her to be born was abbot.

She called herself the Ebony Smaragdos and the monks didn’t recognize her again in men’s clothing, so they accepted her as a monk. But the beauty of her facial distracted the monks from their piety exercises and they thought it was the devil who had sent her to tempt them, so the abbot ordered her to stay in her cell and not come to church. In her recluse cell, Eufrosyne spent the next 38 years in labour, fasting, and prayer, and she became famous for her holiness and spiritual wisdom.

When her father visited the abbot to get comfort in his grief over the missing daughter, he referred him to the young monk Smaragdus. The father did not recognize her again because her beautiful face was puzzled by long watches and strict fasting in recent times. He continued to come to her for religious counselling for 38 years.

Only when she was dying did she reveal her true identity to her father. Three days before her death around 470 she confessed that she was his missing daughter Euphrosyne. At the same time, she prayed that no one other than he should prepare her corpse for burial.

She died on January 1, around 470. After Pafnutius had buried the dead daughter, he shared his fortune between the poor and the monastery, and then he became a monk. He took over the daughter’s cell in the monastery and lived and worked there as a monk for ten years.

No comments:

Post a Comment