புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 September 2020

புனித யூஸ்டோசியஸ் (369-419)செப்டம்பர் 28

புனித யூஸ்டோசியஸ் (369-419)

செப்டம்பர் 28
இவர் உரோமையில் பிறந்தவர். இவரது தந்தை டோக்சோசியுஸ், தாய் புனித பவுலா என்பவர் ஆவர். இவருக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர்.

சிறுவயதிலேயே ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்து வாழத் தொடங்கிய இவர், ஒருமுறை புனித ஜெரோம் இத்தாலிக்கு வந்திருந்தபொழுது, அவரோடு பெத்லகேம் சென்று, திருவிவிலியத்தை மொழிபெயர்ப்பதில் அவருக்கு இவர் உறுதுணையாக இருந்து வந்தார்.

இவர்  கிரேக்கம், இலத்தின், ஹூப்ரு ஆகிய மொழிகளை நன்றாகக் கற்றறிந்திருந்ததால், புனித ஜெரோமோடு திருவிவிலியத்தை மொழிபெயர்ப்பதற்கு அது பேருதவியாக இருந்தது.

பின்னாளில் புதிய ஜெரோம் பெண்களுக்கென நான்கு துறவுமடங்களை நிறுவியபொழுது, அவற்றில் ஒரு துறவு மடத்திற்கு இவர் தலைவியாக நியமிக்கப்பட்டார். 

இவ்வாறு திருவிவிலியத்தை மொழிபெயர்ப்பதற்கு உதவியாய் இருந்து,  ஒரு துறவியாய் பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இவர், 419 ஆண்டு இறையடி சேர்ந்தார்.

The third daughter of St. Paula. She was born circa 370 and stayed with her mother, taking her veil in 382 from St. Jerome, who wrote Concerning the Keeping of virginity for her in 384. Eustochium and her mother went with St. Jerome to Bethlehem, Israel, and there she aided the sainted scholar in his translation of the Bible. St. Jeromefounded three convents in Bethlehemand Eustochium became abbess of all three in 404. A band of marauders destroyed the convent, and Eustochium never recovered from that experience. She died in Bethlehem.

No comments:

Post a Comment