புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 September 2020

புனித லொரென்சோ September 28

இன்றைய புனிதர்: 
(28-09-2020)

புனித லொரென்சோ 
இவர் முதல் பிலிப்பினோ மறைசாட்சி மற்றும் புனிதர் ஆவார் . ஒரு மகளும் ,இரு மகன்களும் கொண்ட பொதுநிலை கத்தோலிக்கராக இருந்தார் .மணிலாவில் 1600 களின் துவக்கத்தில் பிறந்த இவர் ,அங்கிருந்த ஒரு தொமினிக்கன் பள்ளியில் பயின்றார் . பிநோண்டோ தேவாலயத்தில் பீடச் சிறுவனாகவும் , பின்னர் உபதேசியாராகவும் பணி புரிந்தார் . செபமாலை மாதா சபையின் உறுப்பினராகவும் இருந்தார் . அலுவலக மற்றும் சொந்த பயன்பாட்டுக்கென உருவாக்கப்படும் ஆவணங்களில் அழகிய கையெழுத்து எழுதும் எழுத்தராக பணிபுரிந்தார் . அவர் வாழ்ந்த காலகட்டங்களில் மெத்தப் படித்த ,அதிகத் திறமையுள்ளவர்களே இப்பணியைச் செய்தனர்.1636 ம் ஆண்டில் இவர் ஒரு குற்றப்பழியைச் சுமக்க நேரிட்டது . இவர் குற்றமுள்ளவரா , இல்லையா என்பது தெளிவாக்க முடியாததால் ஜப்பானுக்கு புலம் பெயர்ந்தார் .அங்கு கத்தோலிக்கர்கள் பெருமளவில் வதைபட்டனர். இவரும் இவரது நண்பர்களும் பலவேறு இன்னல்களுக்கு ஆளாயினர் . கத்தோலிக்க மதத்தை விட்டு வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இவர்களோ மறுத்து விட்டனர் .தனக்கு ஆயிரம் உயிர்கள் இருந்தாலும் அத்தனையையும் கடவுளுக்கு அர்பணிக்க தான் தயாராக இருப்பதாக இவர் கூறினார் . இறுதியாக  தூக்கிலே தொங்க விடப்பட்டு இரு நாட்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் வதைபட்டு மரித்தார் . இவரது உடல் எரிக்கப்பட்டு அஸ்தி கடலிலே கரைக்கப்பட்டது . இவருக்கும் இவரோடு மரித்த 15 பேருக்கும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1981 இல் முத்திப்பேறு பட்டம் அளித்தார் . மீண்டும் 1987ல் புனிதர் பட்டம் அளித்தார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day: (28-09-2020)

Saint Lorenzo Ruiz of Manila

Born to a Chinese father and Filipino mother, both Christians, Lorenzo learned Chinese and Tagalog at home, Spanish from the Dominicans whom he served as altar boy and sacristan. Professional calligrapher and document transcriptionist. Member of the Confraternity of the Holy Rosary. Married layman, and the father of two sons and a daughter.

For unclear reasons, Lorenzo was accused of murder. He sought asylum on board ship with three Dominican priests, Saint Antonio Gonzalez, Saint Guillermo Courtet, and Saint Miguel de Aozaraza, a Japanese priest, Saint Vicente Shiwozuka de la Cruz, and a layman named Saint Lazaro of Kyoto, a leper. Only when they were at sea did he learn that they were going to Japan during a time of intense Christian persecution.

Lorenzo could have gone to Formosa (modern Taiwan), but feared the Spaniards there would hang him, and so stayed with the missionaries as they landed at Okinawa. The group was soon exposed as Christian, arrested, and taken to Nagasaki, Japan. They were tortured in several ways for days. Lawrence and the Japanese priest broke at one point, and were ready to renounce their faith in exchange for release, but after heir moment of crisis, they reclaimed their faith and defied their tormentors. First canonized Filipino martyr.

Born : 
c.1600 at Binondo, Manila, Philippines

Died : 
 29-30 September 1637 at Nagasaki, Japan by being crushed over a period of three days while hanging upside down
• body burned, ashes thrown into the Pacific Ocean

Canonized : 
18 October 1987 by Pope John Paul II
• the canonization miracle involved the healing Cecily Alegriae Policarpio from cerebral paralysis

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment