புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 September 2020

✠ புனிதர் எலிசபெத் ✠(St. Elizabeth). செப்டம்பர் 23

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 23)

✠ புனிதர் எலிசபெத் ✠
(St. Elizabeth)

நன்னெறியாளர்:
(Righteous)

பிறப்பு: கி.மு. முதலாம் நூற்றாண்டு
எபிரோன் (ஜோஷுவா 21:11)
(Hebron)
இறப்பு: கி.மு. முதலாம் நூற்றாண்டு
அநேகமாக எபிரோன்
(Probably Hebron)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கீழ் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை
(Oriental Orthodox Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
அனைத்து இஸ்லாம்
(All Islam)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 23

பாதுகாவல்: கர்ப்பிணிப் பெண்கள்

புனிதர் எலிசபெத், லூக்கா நற்செய்திகளின்படி “செக்கரியாவின்” (Zechariah) மனைவியும், “திருமுழுக்கு யோவானின்” (John the Baptist) தாயாரும் ஆவார்.

திருவிவிலிய சரிதம்:
லூக்கா நற்செய்திகளின்படி, எலிசபெத் "ஆரோனின்" (Aaron) மகளாவார். இவரும் இவரது கணவரான செக்கரியாவும் இறைவனின் பார்வையில் நன்னெறியாளர்களாய் வாழ்ந்தனர். ஆனால், குழந்தைகளில்லாதவர்களாய் வாழ்ந்தனர். செக்கரியா ஆலய பணிகளில் இருந்தபோது “இறைதூதர் காபிரியல்” (Angel Gabriel) அவர்முன்னே தோன்றி கூறியதாவது:
"செக்கரியாவே பயப்படாதே; உமது இறைவேண்டல்கள் கேட்கப்பட்டன; உமது மனைவி கருத்தாங்கி, ஒரு ஆண் மகவை ஈன்றெடுப்பாள்; நீர் அதற்கு யோவான் என்று பெயரிடுவீர்; அவன் உங்களுக்கு ஒரு சந்தோஷமும், மகிழ்ச்சியுமாய் இருப்பான்; அவர் இறைவனின் பார்வையில் பெரியவனாய் இருப்பதால் அநேகர் அவரது பிறப்பால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்; அவர் திராட்சை இரசமும் வேறு பானங்களையும் அருந்தார். அவர் பிறப்பின் முன்பே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்.
~ லூக்கா 1:13–15

தாமும், தமது மனைவி எலிசபெத்தும் முதிர் வயதினர் என்ற காரணத்தால் செக்கரியா, இறைதூதர் காபிரியேலின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கவில்லை. இதையறிந்த காபிரியேல் தூதர், செக்கரியாவை நோக்கி, "உமது விசுவாசமின்மையால் நீர் வாய் பேச இயலாத ஊமையாவீர்; எமது வாக்கு நிறைவேறும்வரை நீர் ஊமையாக இருப்பீர்" என்று இயம்பி மறைந்தார்.
~ லூக்கா 1:16-23

மற்றும், லூக்கா நற்செய்திகள் (1:24–25), (1:26-40), (1:41–45), (1:46-55), (1:56–64), (1:65-80) ஆகியவற்றில் எலிசபெத் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

அதிகாரபூர்வமற்ற திருமறை ஏடுகள் (Apocrypha) :
எலிசபெத் மேலும் பல அதிகாரப்பூர்வமற்ற திருமறை ஏடுகளிலும் குறிப்பிடப்படுகிறார்.

இஸ்லாம் மத திருமறை நூலாகிய "திருக்குர்ஆனிலும்" இவர் கௌரவிக்கப்படுகிறார்.

† Saint of the Day †
(September 23)

✠ St. Elizabeth ✠

Righteous/ The Mother of St. John the Baptist:

Born: 1st century BC
Hebron

Died: 1st century BC (or early AD)
(probably Hebron)

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Oriental Orthodox Church
Anglican Church
Lutheran Church
Islam

Feast: September 23

Patronage: Pregnant women

Saint Elizabeth was the mother of John the Baptist and the wife of Zechariah, according to the Gospel of Luke.

When Elizabeth heard Mary’s greeting, the infant leapt in her womb, and Elizabeth, filled with the Holy Spirit, cried out in a loud voice and said, “Most blessed are you among women, and blessed is the fruit of your womb.”
~ Luke 1:41–42

The heartwarming narratives of Elizabeth can be found in the first chapter of Luke’s Gospel. Elizabeth was a good and devout woman who had suffered many years of sad barrenness. One day, the archangel Gabriel appeared to her husband, Zechariah, and declared that Elizabeth would soon conceive and bear a son of tremendous virtue. Not long after this proclamation, Elizabeth did indeed conceive and quietly kept homebound for five months, praising God for the beautiful gift of new life.         

At Elizabeth’s sixth month of expectancy, the archangel Gabriel appeared again, this time to Elizabeth’s relative Mary. Gabriel announced to Mary the forthcoming birth of Jesus and let her know of Elizabeth’s upcoming joy as well. Mary, full of amazement, journeyed to the hill country of Judea to visit her elderly kinswoman. As Elizabeth heard Mary’s greeting, she felt a profound quickening within her womb. She immediately knew from this reaction of her unborn son that she was in the presence of greatness―that Mary’s babe was to be a man of vast love and divine influence. Filled with the Holy Spirit, Elizabeth spoke words that would one day become known as the second line of the beautiful prayer, Hail Mary: “Blessed are you among women, and blessed is the fruit of your womb.”

After a three-month-long visit from Mary, Elizabeth gave birth to her son. All neighbours and relatives were delighted over her wondrous blessing. However, they were confused over the chosen name of John, wondering why Elizabeth would not name her son after her husband, Zechariah. Zechariah, who had been struck dumb over his disbelief at Gabriel’s earlier announcement, confirmed the name of John by writing on a tablet. At that moment of agreement, he regained his voice. The neighbours were astonished at such extraordinary events surrounding Elizabeth’s child.

Elizabeth shares the Sept. 23 feast day with her husband, Zechariah (older books might have their feast as Nov. 5). In addition, Elizabeth shares a feast day with Mary on May 31 to honour the three-month visit from Mary.

A Five-Day Retreat with St. Elizabeth:
Though not mentioned a great deal in the Bible and only in one Gospel, the few passages listed below can give us much insight into the role of St. Elizabeth in salvation history.  Ready, study, and ponder these passages—see how St. Elizabeth’s example might bring you closer to the Lord.

Day 1) Luke 1:5–20
Day 2) Luke 1:21–25
Day 3) Luke 1:39–45
Day 4) Luke 1:56–66
Day 5) Luke 1:80

No comments:

Post a Comment