புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 September 2020

புனிதர் செக்கரியா ✠(St. Zechariah). செப்டம்பர் 23

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 23)

✠ புனிதர் செக்கரியா ✠
(St. Zechariah)
குரு, இறைவாக்கினர், மரியாளின் பாதுகாவலர், பக்தர்:
(Priest, Prophet, Guardian of Mary, Devotee)

பிறப்பு: கி.மு. முதலாம் நூற்றாண்டு
எபிரோன், (ஜோஷுவா 21:11)
(Hebron)

இறப்பு: கி.மு. முதலாம் நூற்றாண்டு
எருசலேம் (மாத்யூ 23:35)
(Jerusalem)

ஏற்கும் சபை/ சமயம்:
கிறிஸ்தவம்
(Christianity)
இஸ்லாம்
(Islam)

நினைவுத் திருவிழா: செப்டம்பர் 23

புனிதர் செக்கரியா “விவிலியம்” (Bible) மற்றும் “திருக்குரானில்” (Quran) குறிப்பிடப்படும் நபர் ஆவார். விவிலியம் இவரை “திருமுழுக்கு யோவானின்” (John the Baptist) தந்தை எனவும் “ஆரோன்” (Aaron) குலத்தவர் எனவும் இறைவாக்கினர் எனவும் குறிக்கின்றது. இவர் இயேசுவின் தாய் “கன்னி மரியாளின்” (Virgin Mary) உறவினராகிய “எலிசபெத்தின்” (Elizabeth) கணவராவார்.

விவிலியத்தில்:
லூக்கா நற்செய்தியின்படி “அரசர் முதலாம் ஏரோதின்” (king Herod) ஆட்சியின் போது இவர் வாழ்ந்தவர். இவர் “அபியா” (Abia) வகுப்பைச் சேர்ந்த குரு ஆவார். இவர் மனைவி எலிசபெத்து. இவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நன்னெறியாளர்களாய் விளங்கினார்கள் எனவும் ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள் எனவும் விவிலியம் குறிக்கின்றது. இவர்கள் பிள்ளைப்பேறு இல்லாதிருந்தனர். ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

தம்முடைய பிரிவின் முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் தேவதூதர் தோன்றி, அவருக்கு ஒரு மகன் பிறப்பார் என அறிவித்தார். இதனை நம்பாமல் செக்கரியா சந்தேகித்ததால், தாம் அறிவித்தவை நிறைவேறும்வரை செக்கரியாவை பேசும் சக்தியற்ற ஊமையாய் மாற்றினார். தாம் கூறியவை நிறைவேறும்வரை அவருக்கு பேசும் திறன் வராது என்றறிவித்துச் சென்றார். செக்கரியா, தம்முடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் வீடு திரும்பினார். அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்றார்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின் போது, எலிசபெத்து கருவுற்றிருப்பதை கபிரியேலின் மூலம் அறிந்த மரியாள், அவரைக் காண வந்தார். மரியாள் அவரோடு ஆறு மாதம் தங்கி உதவிபுரிந்தார் என விவிலியம் குறிப்பிடுகின்றது.

எலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுத்தார். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள். செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார். "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று செக்கரியாவை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறது, பேச்சுத் திறன் வந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இஸ்லாம் சமயத்தினரின் திருமறையான "திருக்குர்ஆனிலும்" செக்கரியா பற்றிய ஆதாரங்கள் உள்ளன. இஸ்லாம் சமயத்தினர் அவரை "இறைவாக்கினர்" என்றும் "மரியாளின் பாதுகாவலர்" என்றும் விசுவசிக்கின்றனர்.

† Saint of the Day †
(September 23)

✠ St. Zechariah ✠

Priest, Prophet, Guardian of Mary, Devotee:

Born: 1st century BC
Hebron (Joshua 21:11), the Levant

Died: 1st century BC (or early AD)
Jerusalem (Matthew 23:35), the Levant

Venerated in:
Christianity
Islam

Feast: September 23

Saint Zechariah is a figure in the New Testament Bible and the Quran, hence venerated in Christianity and Islam. In the Bible, he is the father of John the Baptist, a priest of the sons of Aaron in the Gospel of Luke (1:67-79), and the husband of Elizabeth who is a relative of the Virgin Mary (Luke, 1:36).

The Holy Prophet Zachariah and the Righteous Elizabeth were the parents of the Holy Prophet, Forerunner and Baptist of the Lord, John. They were descended from the lineage of Aaron: Saint Zachariah, son of Barach, was a priest in the Jerusalem Temple, and Saint Elizabeth was the sister of Saint Anna, the mother of the Most Holy Theotokos. The righteous spouses, “walking in all the commandments of the Lord (Luke 1:6), suffered barrenness, which in those times was considered a punishment from God.

Once, during his turn of priestly service in the Temple, Saint Zachariah was told by an angel that his aged wife would bear him a son, who “will be great in the sight of the Lord” (Luke 1:15) and “will go before Him in the spirit and power of Elias” (Luke 1:17).

Zachariah doubted that this prediction would come true, and for his weakness of faith, he was punished by becoming mute. When Elizabeth gave birth to a son, through the inspiration of the Holy Spirit she announced that his name was John, although no one in their family had this name.

They asked Zachariah and he also wrote the name John down on a tablet. Immediately the gift of speech returned to him, and inspired by the Holy Spirit, he began to prophesy about his son as the Forerunner of the Lord.

When King Herod heard from the Magi about the birth of the Messiah, he decided to kill all the infants up to two years old at Bethlehem and the surrounding area, hoping that the new-born Messiah would be among them.

Herod knew about John’s unusual birth and he wanted to kill him, fearing that he was the foretold King of the Jews. But Elizabeth hid herself and the infant in the hills. The murderers searched everywhere for John. Elizabeth, when she saw her pursuers, began to implore God for their safety, and immediately the hill opened up and concealed her and the infant from their pursuers.

In these tragic days, Saint Zachariah was taking his turn at the services in the Temple. Soldiers sent by Herod tried in vain to learn from him the whereabouts of his son. Then, by command of Herod, they murdered this holy prophet, having stabbed him between the temple and the altar (Mt 23: 35). Elizabeth died forty days after her husband, and Saint John, preserved by the Lord, dwelt in the wilderness until the day of his appearance to the nation of Israel.

No comments:

Post a Comment