இன்றைய புனிதர் :
(17-09-2020)
ஆயர் இராபர்ட் பெல்லார்மின், மறைவல்லுநர் St.Robert Bellarmine
பிறப்பு : 1542,
தஸ்கனி(Tuscany), மோந்தே புல்சியானோ(Monte Pulciano)
இறப்பு : 17 செப்டம்பர் 1621,
உரோம்
முத்திபேறுபட்டம்:
1923
புனிதர்பட்டம்: 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவர் தமது 18 ஆம் வயதில் உரோம் நகரிலிருந்த இயேசு சபையில் சேர்ந்தார். 1559 ஆம் ஆண்டு பெல்ஜிய நாட்டிற்கு கல்லூரி படிப்பிற்காக அனுப்பப்பட்டார். சிறந்த முறையில் கல்வி கற்றபின் மீண்டும் உரோம் திரும்பினார். அங்கிருந்த இயேசு சபையில் பணியாற்றி குருப்பட்டம் பெற்று, சிறந்த மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க திருச்சபையை
பாதுகாக்கும் பொருட்டு, புகழ் பெற்ற விவாதங்களை நடத்தினார். பிறகு உரோமன் கல்லூரிகளில் இறையியல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பல நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் இன்று ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பின்னர் இவர் இயேசு சபையில் பல உயர்பதவிகளைப் பெற்று, அனைத்தையும்
சிறப்பாக ஆற்றினார். திருத்தந்தை 8 ஆம் கிளமெண்ட் அவர்கள், இராபர்ட் பெல்லார்மினை கர்தினாலாக உயர்த்தினார். இவர் காப்புவா என்ற மறைமாவட்டத்தில் ஆயர் பொறுப்பையும் ஏற்றார். பிறகு 11 ஆம் சிங்கராயர் அவர்களால் உரோம் நகருக்கு சிறந்த ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றது. நாம் அதை
முழுமையாக கடவுளின் மேன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்பதை இவர் அடிக்கடி கூறுவார். நீதியோடும், நேர்மையோடும் தன்னிடம் ஒப்படைத்த பணியை செய்தார். அக்காலத்தில் எழுந்த பல ஐயப்பாடுகளையும்,
தெளிவுப்படுத்தி, திருச்சபையின் வளர்ச்சிக்கு துணை நின்றார். திருச்சபையில் இருந்த மறைநூல் வல்லுநர்களில், இவரும் ஓர் சிறந்த மறைவல்லுநர் என்ற பெயரையும் பெற்றார்.
செபம்:
வரங்களை வாரி வழங்குபவரே எம் கடவுளே! திருச்சபையின் நம்பிக்கையை பாதுகாக்க புனித இராபர்ட் பெல்லார்மினை ஏற்படுத்தினீர். உமது வியத்தகு அறிவாற்றலையும், நீதியையும், நேர்மையையும் அவருக்குத் தந்தீர். அவருக்கு நீர் அளித்த கொடைகளை எமக்கும் அளித்து, எம் வழியாக உமது திருச்சபையை வளரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (17-09-2020)
St. Robert Bellarmine
St. Robert Bellarmine was born in Italy on October 4, 1542. His father was Vincenz Bellarmine and mother Cinzia Cervini. His mother is a niece of Pope Marcellus-II. St. Robert Bellarmin joined the Society of Jesus in the year 1560 and was ordained a priest in the year 1570. He became an Examiner of Bishops in the year 1598 and a Cardinal in the year 1599. He was one of the judges at the trial and condemnation of Giordano Bruno to be burned at the stake, for the offense of heresy. He only summoned Galileo Galilei in 1616, as directed by Pope Paul-V and ordered Galileo to abandon the Copernican doctrine of mobility of the Earth and immobility of the sun. He died on September 17, 1621.
He was beatified on May 13, 1923 by pope Pius-XI and canonized by Pope Pius-XI on June 29, 1930 and declared as Doctor of the Church in the following year. He is the patron saint of Canonists, Canon Lawyers, Catechists and Catechumens.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment