புனித_எமிலினா (1115 - 1178)
அக்டோபர் 27
இவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர்.
சிறுவயதிலிருந்தே கடவுள்மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த இவர், துறவியாகப் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதன்படி இவர் போலன்கோர்ட் (Boulancourt) என்ற இடத்தில் இருந்த சிஸ்டர்சியன் துறவற சபையில் சேர்ந்து துறவியானார்.
துறவற வாழ்வில் இவர் இறைவேண்டலுக்கும் நோன்பிற்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, எல்லாருக்கும் எடுத்துக்காட்டான துறவியாக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில் இவரைப் பற்றிய செய்தி அக்கம் பக்கத்திலிருந்த மக்களுக்குத் தெரிய வந்தது. அதனால் மக்கள் இவரிடம் ஆலோசனை கேட்பதற்கும், தங்களுக்காக இறைவனிடம் வேண்டக் கேட்டும் வந்தார்கள். இவர் தன்னிடம் வந்த மக்களுக்கு நல்லதோர் ஆலோசகராக விளங்கினார்.
இறைவன் இவருக்கு பின்னர் நடப்பதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றலைத் தந்திருந்தார். அந்த ஆற்றலைக் கொண்டும் இவர் மக்களுக்கு நல்லதொரு பணிசெய்தார்.
இவ்வாறு ஓர் இறையடியாராக வாழ்ந்த இவர் 1178 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment