† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 27)
✠ அருளாளர் பர்தொலொமியு ✠
(Blessed Bartholomew of Vicenza)
ஆயர்:
(Bishop)
பிறப்பு: கி.பி. 1200
விசென்ஸா
(Vicenza)
இறப்பு: கி.பி. 1271
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: கி.பி. 1793
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 27
“பர்தொலோமியு டி பிரகன்ஸா” (Bartholomew di Braganca) என்றும், “விசென்ஸா
வின் பர்தொலோமியு” (Bartholomew of Vicenza) என்றும் அழைக்கப்படும் இவ்வருளாளர், ஒரு “டொமினிக்கன்” துறவியும் (Dominican Friar) ஆயருமாவார்.
வடகிழக்கு இத்தாலியின் “விசென்ஸா” (Vicenza) எனும் நகரின் “பிரகான்சா” உயர்குடியில் (Noble family of di Braganca) பிறந்த இவர், “பதுவை” (Padua) நகரில் கல்வி கற்றார். ஏறத்தாழ தமது இருபது வயதில், புதிதாய் தொடங்கப்பட்ட துறவற சபையான “டொமினிக்கன்” (Dominican Order) சபையின் சீருடைகளை புனிதர் “டொமினிக்கின்” (St. Dominic) கைகளாலேயே பெற்றுக்கொண்டார்.
குருத்துவ அருட்பொழிவு பெற்றதும், விரைவிலேயே தமது சபையின் பல்வேறு தலைமைப் பதவிகளில் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். தொடக்கத்தில் இவரது வரலாற்றை எழுதிய துறவி “லியாண்டரின்” (Friar Leander) கூற்றின்படி, கி.பி. 1235ம் ஆண்டு, திருத்தந்தை “ஒன்பதாம் கிரகோரியின்” (Pope Gregory IX) ஆட்சிக் காலத்தில், “திருத்தந்தையர் இல்ல அலுவலக இறையியலாளர்” (Theologian of the Pontifical Household) எனும் நிர்வாக அலுவலக தலைமைப் பொறுப்பிலிருந்தார். ஆனால், அதற்கான சான்றுகள் தற்போது கிடையாது.
ஒரு இளம் குருவாக, அவர் இத்தாலியின் அனைத்து நகரங்களிலும் அமைதியும், சமாதானமும் உருவாகும் நோக்கத்தில், ஒரு இராணுவ சபையை நிறுவினார்.
கி.பி. 1248ம் ஆண்டு, “சைப்ரஸ் குடியரசு” (Republic of Cyprus) எனும் தீவிலுள்ள “நெமொநிக்கம்” (Nemonicum) எனும் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். (“நெமொநிக்கம்” எந்த நகர் என்று தற்போது தெரியவில்லை).
பெரும்பாலானோர்க்கு, அத்தகைய ஒரு ஆயர் நியமனம், அவர்களின் பரிசுத்தன்மை, மற்றும் அவர்களின் தலைமை திறன்களுக்கான கௌரவம் அல்லது பாராட்டு, மரியாதை மற்றும் அஞ்சலி ஆகும். ஆனால் இவரைப்பொருத்தவரை, அது திருத்தந்தையரின் எதிரிகளின் குழுக்களால் வற்புறுத்தப்பட்ட ஒரு நாடுகடத்தலேயாகும்.
ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் “ஒன்பதாம் லூயிஸ்” (King Louis IX of France), “புனித பூமியை” (Holy Land) ஆண்டுவந்த இஸ்லாமியர்களை முற்றுகையிட பயணித்துக்கொண்டிருந்தார்.
(யோர்தான் நதியின் கிழக்கு கரைப்பகுதிகள் (Eastern Bank of the Jordan River) உள்ளிட்ட, யோர்தான் நதி மற்றும் மத்தியதரைக் கடலுக்கு (Mediterranean Sea) இடையிலான ஒரு பகுதி ஆகும். இது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரால் புனித பூமியாகக் கருதப்படுகிறது.)
அப்போது, இஸ்ரேல் நாட்டின் பழமையான துறைமுக நகரான “ஜோப்பா” (Joppa), லெபனானின் பெரிய நகரங்களில் ஒன்றான “சிடோன்” (Sidon) மற்றும் இஸ்ரேலின் தொழில் துறைமுக நகரான “ஏக்கர்” (Acre) ஆகிய இடங்களில், பர்தொலோமியு “திருத்தந்தையின் தூதராக” (Apostolic legate) அரசன் ஒன்பதாம் லூயிசுடனும், அரசியுடனும் சென்று இணைந்துகொண்டார்.
பல ஆண்டுகளுக்குப்பின் அல்லாது, எப்படியோ, பர்தொலோமியு மீண்டும் விசென்ஸா’வுக்கு மாற்றல் செய்யப்பட்டார். திருத்தந்தையரின் எதிரிகளின் குழுக்களின் எதிர்மறையான உணர்வுகள் இன்னும் வெளிப்படையாக இருந்தபோதிலும், அவர் விடாமுயற்சியுடன், குறிப்பாக அவருடைய பிரசங்கத்தின் மூலம், தனது மறைமாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், ரோமிற்கு மக்கள் விசுவாசத்தை பலப்படுத்தவும் அயராது உழைத்தார்.
இவர் “சைப்ரஸ்” தீவின் ஆயராக பணியாற்றிய காலத்தில், ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் “ஒன்பதாம் லூயிஸின்” (King Louis IX of France) நட்பு கிட்டியது. அரசன், தூய ஆயருக்கு கிறிஸ்துவின் முள்முடியின் மிச்சமொன்றினை (Relic of Christ’s Crown of Thorns) கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
† Saint of the Day †
(October 27)
✠ Blessed Bartholomew of Vicenza ✠
Dominican Friar and Bishop of Cyprus:
Born: 1201 AD
Vicenza, Italy
Died: July 1, 1270
Venerated in: Roman Catholic Church
Beatified: 1793 AD
Pope Pius VI
Feast: October 27
Blessed Bartholomew di Braganca or Bartholomew of Vicenza was an Italian Dominican friar and bishop.
On October 27 we commemorate the feast of Blessed Bartholomew of Vicenza. He was a Dominican priest who used his skills as a preacher to combat the heresies of his day.
Blessed Bartholomew was born at Vicenza, Italy Vicenza in Northern Italy, and belonged to the noble family of Braganza. He became a Dominican priest at the age of twenty and received the habit from St. Dominic’s own hands.
He was a very virtuous man and within a short time, he became prior of the monastery, effectively overseeing several monasteries with great wisdom and fruitfulness. Seven years later, he became Master of the Sacred Palace, an office which had been first held by Saint Dominic himself. It was during this period that Blessed Bartholomew composed his scholarly commentary on the work of Saint Denis, entitled “From the Heavenly Hierarchy.”
In 1246, Pope Innocent IV appointed Blessed Bartholomew as Bishop of Cyprus, where he served for two years. He was then sent as Papal Legate to King Louis IX of France, who was then carrying on the Crusade against the infidels. The two saints became good friends and St. Louis chose Blessed Bartholomew as his confessor. When the King returned to France in 1252, Blessed Bartholomew returned to his diocese, where he remained for four more years, when Pope Alexander IV assigned him to be Bishop of Vicenza.
The Bishop’s primary task was to purge his new diocese of the heresies which had crept into it. Through his preaching, he managed to successfully convert the leader of the heretical party and many of his followers. This so infuriated the infamous Ezzelino (an Italian feudal lord), who at that time tyrannized Northern Italy in the name of the German Emperor, that he managed to have Blessed Bartholomew exiled. The pope then sent Blessed Bartholomew, as his representative, to discuss some essential issues with the King of England. On his way back to Italy, Blessed Bartholomew visited St. Louis, who presented him with a relic of the True Cross and one of the thorns from Christ’s crown, which had been given to him by the Emperor of Constantinople.
In 1259, Ezzelino died and Blessed Bartholomew returned to his diocese, bringing with him the priceless relics King St. Louis had presented to him. As the holy bishop’s ship came nearer to the shore, his flock shouted out: “Blessed is he that comes in the name of the Lord!” Blessed Bartholomew built a large church to house the precious relics and attached to it a new monastery for his Dominican order. A noble Venetian widow also offered him a beautiful reliquary which contained a portion of the True Cross, two thorns of our Lord’s crown, and relics of the Apostles and other Saints, which he promptly put in his newly-erected Church of the Holy Crown.
Blessed Bartholomew devoted himself with zeal to the duties of his office, rooting out heresy, providing for the needs of the poor, and renovating his Cathedral, which had been ruined by Ezzelino. He various prominently promoted the peace and prosperity both of Church and State. He was constantly chosen as a mediator in the struggles and disputes which affected Northern Italy; his brilliant ability to reconcile between the various factions did much to alleviate the dismal feuds of that period. In 1261, Blessed Bartholomew established the Order of the Knights of the Mother of God (commonly known as the Knights of St. Mary), who was responsible for keeping peace in towns throughout Italy. This order spread widely throughout Italy and received the approval of the Holy See.
Blessed Bartholomew was well-known for his speaking skills and preached at the second translation of the relics of Saint Dominic in 1267. He died at the age of 69 in 1270 and was laid to rest in the Church of the Holy Crown. He was beatified by Pope Pius VI in 1793.
Let us pray for the intercession of Blessed Bartholomew for peace in times of rest and discord. He was a strong promoter of the truth and rooted out heresy. He provided for the needs of the poor. Let us ask him to intercede for us when we are in need.
Prayer:
O God, who made Blessed Bartholomew, Your Confessor and Bishop, wonderful in leading the enemies of the faith from the darkness of error to the light of truth, and in bringing back multitudes to peace and concord, grant, through his intercession, that Your peace, which surpasses all understanding, may keep our hearts and minds in Christ Jesus our Lord, who lives and reigns with You, forever and ever. Amen!
No comments:
Post a Comment