புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 October 2020

அருளாளர்_அர்னால்டு_ரெச்சி (1838-1890)அக்டோபர் 23

#அருளாளர்_அர்னால்டு_ரெச்சி (1838-1890)

அக்டோபர் 23

இவர் (#Arnold_Reche) பிரான்ஸ் நாட்டில் உள்ள லாண்ட்ரோஃப் என்ற இடத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் மிகவும் சாதாரண குடும்பம். இவரது தந்தை செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வந்தார்.
குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக இவரால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. இதனால் இவர் தனக்குக் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து, குடும்பத்திற்கு உதவியாய் இருந்து வந்தார். 

ஒருபக்கம் இவரது குடும்பத்தில் வறுமை நிலவினாலும், இன்னொரு பக்கம் இவர் தனது பெற்றோரின் எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டப்பட்டு இறைப் பற்றில் சிறந்து விளங்கினார். ஆகவே இவர் தனக்கு 28 வயது நடக்கும்போது தெ லசால் சபையில் சேர்ந்து, 1871 ஆம் ஆண்டு தன் இறுதி வார்த்தைப்பாட்டை எடுத்துக் கொண்டார்.

இதன் பிறகு இவர் கல்விப்பணியில் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டார். மேலும் பிரான்சிற்கும் ப்ரூசியாவிற்கும் இடையே நடந்த போரில் பாதிக்கப்பட்டவர்கள் நடுவில் மிகச் சிறப்பானதொரு பணியைச் செய்தார். பின்னர் கோர்லான்சி என்ற இடத்தில் இருந்த இல்லத்தின் தலைவராக உயர்ந்து, தன் இறப்பு வரை இவர் அங்கேயே இருந்தார்.

இப்படி இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த இவர் 1890
ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்குத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் 1987 ஆம் ஆண்டு அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.

Arnold was born to Claude and Anne Flausset Reche. His father was extremely religious albiet poor shoemaker. Arnold's parents raised him into a strong religious household. Arnold taught catechism to the younger children. When Arnold became a young adult, he began to drift towards a more secular life.

After many odd jobs, Arnold began classes conducted by the Brothers of the Christian Schools. Arnold joined the LaSalle Brothers in 1862 at age 28, taking the name Brother Arnold, and making his final vows in 1871.

Arnold treated the wounded in the trenches during the Franco-Prussion War, and was awarded the bronze cross for his work. Taught at the Brothers boarding school at Rheims, France. Director general of the house at Courlancy from March 1890 till his death a few months later.

No comments:

Post a Comment