† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 23)
✠ கப்பிஸ்ட்றனோ நகர் புனிதர் ஜான் ✠
(St. John of Capistrano)
ஒப்புரவாளர்:
(Confessor)
பிறப்பு: ஜூன் 24, 1386
கப்பிஸ்ட்றனோ, அப்ருஸ்ஸி, நேப்பிள்ஸ் அரசு
(Capestrano, Abruzzi, Kingdom of Naples)
இறப்பு: அக்டோபர் 23, 1456 (வயது 70)
இலோக், சிம்ரியா, ஹங்கேரியின் தனிப்பட்ட ஐக்கிய குரோஷியா அரசு
(Ilok, Syrmia, Kingdom of Croatia in personal union with Hungary)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
புனிதர் பட்டம்: கி.பி. 1690 அல்லது 1724
திருத்தந்தை எட்டாம் அலெக்சாண்டர் (Pope Alexander VIII)
அல்லது (OR)
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 23
பாதுகாவல்:
நீதிபதிகள், பெல்கிரேட் (Belgrade) மற்றும் ஹங்கேரி (Hungary)
கப்பெஸ்ட்றனோ'வின் புனிதர் ஜான், இத்தாலி நாட்டின் தென் பிராந்தியமான “அப்ருஸ்ஸோ”வைச் (Abruzzo) சேர்ந்த “கப்பெஸ்ட்றனோ” (Capestrano) எனும் சிறிய நகரைச் சார்ந்த ஃபிரான்சிஸ்கன் துறவியும், கத்தோலிக்க குருவும் ஆவார். இவர் ஒரு போதகர், இறையியலாளர், மற்றும் புலன் விசாரணையாளராக புகழ் பெற்றவர்.
கி.பி. 1456ம் ஆண்டில், தமது எழுபது வயதின்போது, ஒட்டோமான் பேரரசுக்கு (Ottoman Empire) எதிராக, ஹங்கேரியின் இராணுவ தளபதி “ஜான் ஹுன்யாடி”யுடன் (John Hunyadi) இணைந்து “பெல்கிரேட்” நாட்டை முற்றுகையிட, (siege of Belgrade) சிலுவைப்போர் புரிய சென்ற படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்றதால், இவருக்கு "சிப்பாய் புனிதர்" (The Soldier Saint) என்ற சிறப்புப் பட்டப் பெயர் வழங்கலாயிற்று.
“அக்குயிலா" (Aquila) என்பவரின் மகனான இவர், “பெருஜியா பல்கலையில்” (University of Perugia) கல்வி பயின்றார். கி.பி. 1412ம் ஆண்டு, இவரது 26ம் வயதிலேயே, “நேப்பிள்ஸ்” மன்னரான (King of Naples) “லாடிஸ்லாஸ்” (Ladislaus) பெருஜியா (Perugia) நகரின் கவர்னராக இவரை நியமனம் செய்தார். 1416ல், 'பெருஜியா' மற்றும் 'மலாடேஸ்டாஸ்' (Perugia & Malatestas) ஆகிய நாடுகளுக்கிடைய போர் வெடித்தது. ஜான் சமாதான தூதுவராக அனுப்பப்பட்டார். ஆனால், 'மலாடேஸ்டாஸ்' அவரைப் பிடித்து சிறையில் எறிந்தது. சிறை வாழ்வின்போது விரக்தியடைந்த ஜான், விடுதலையின் பிறகு, புதிதாய் மணமான தமது மனைவியை ஒதுக்கி வைத்தார். திருமணம் செய்தும் முழுமையான தாம்பத்திய வாழ்க்கை வாழாத இவர், திருமணத்தை ரத்து செய்ய மனைவியின் அனுமதி பெற்று, இல்லற வாழ்வை துறந்தார்.
“சியேன்னாவின் பெர்னார்டினோ” (Bernardino of Siena) என்பவருடன் நண்பரான இவர், அவருடனே இணைந்து இறையியல் கற்றார். கி.பி. 1416ம் ஆண்டு, அக்டோபர் மாதம், நான்காம் தேதி, “ஜேம்ஸ்” (James of the Marches) என்பவருடன் இணைந்து, “பெருஜியா” நகரிலுள்ள “ஃபிரான்சிஸ்கன்” (Order of Friars Minor) இளம் துறவியர் சபையில் சேர்ந்தார். இவர் தமது குருத்துவ அருட்பொழிவு பெற்றபின் தாமாகவே முன்வந்து பல்வேறு மறையுரைகளை ஆற்றினார்.
பெர்னார்டினுடன் இணைந்து ஐரோப்பா முழுவதும் சென்று மறைபரப்புப் பணியை ஆற்றினார். சென்ற இடமெல்லாம் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, மக்களை கவரும் விதத்தில் மறையுரையாற்றி, விசுவாசத்தைப் பரப்பினார்.
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற இத்தாலிய மறை போதகர்களைப் போலன்றி, ஜான் மறையுரையாற்றுவதில் சிறப்பு பெற்றவராக திகழ்ந்தார். இவரது மறையுரை காரணமாக, “வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பா” (Northern and central Europe), “தூய ரோமப் பேரரசின் ஜெர்மன் மாநிலங்கள்” (German states of Holy Roman Empire), “போஹெமியா” (Bohemia, “மொராவியா” (Moravia), “ஆஸ்திரியா” (Austria), “ஹங்கேரி” (Hungary), “குரோஷியா” (Croatia) மற்றும் “போலந்து அரசுகளில்” (Kingdom of Poland) இவரது புகழ் பரவியது. இவரது மறையுரையைக் கேட்கக் கூடிய மக்கள் கூட்டம் பேராலயங்களில் கூட அடங்கவில்லை. திறந்தவெளிகளில் மறையுரைகள் ஆற்றினார். இவரது மறையுரையைக் கேட்க சுமார் 126,000 வரை மக்கள் கூட்டம் கூடினர்.
இவர், “கிரேக்க: (Greek) மற்றும் “ஆர்மேனிய” (Armenian ) திருச்சபைகள் மீண்டும் ஒன்று சேர உதவினார்.
கி.பி. 1453ம் ஆண்டு, “துருக்கியர்கள்” (Turks) “கான்ஸ்டண்டினோபில்” (Constantinople) நாட்டை கைப்பற்றியபோது, ஐரோப்பாவை பாதுகாப்பதற்கான ஒரு சிலுவைப்போர் பிரசங்கத்திற்கு ஜான் நியமிக்கப்பட்டார். “பவேரியாவிலும்” (Bavaria) “ஆஸ்திரியாவிலும்” (Austria) சிறிது விடையிறுப்பைப் பெற்ற அவர், “ஹங்கேரியில்” (Hungary) தனது முயற்சிகளை கவனத்தில் கொள்ள முடிவு செய்தார். அவர் “பெல்கிரேடிற்கு” (Belgrade) இராணுவத்தை வழிநடத்தினார். “ஜெனரல் ஜான் ஹுனைடியின்” (General John Hunyadi) தலைமையின் கீழ், அவர்கள் பெரும் வெற்றி பெற்றனர். அத்துடன், “பெல்கிரேடின்” (Belgrade) முற்றுகை அகற்றப்பட்டது. அதீத முயற்சிகளால் களைத்துப்போன “கபிஸ்ட்ரனோ” (Capistrano), போருக்குப் பிறகு ஒரு நோய்த் தொற்றுக்கு எளிதான இரையாக இருந்தது.
தன்னுடைய 40 வயதிற்குள்ளே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து மறைபரப்பு பணியாற்றி கிறிஸ்தவ மறையை வளர்த்த ஜான், தமது எழுபது வயதில் மரித்தார்.
Saint of the Day: (23-10-2020)
St. John of Capistrano
He was born on June 24, 1386 in the kingdom of Naples. He was appointed as a Governor of Perugia by king Ladislaus of Naples. He married a wealthy lady before the war but the marriage was not consummated. So, dejected in family life, he obtained a dispensation in the marriage and entered the religious life. He became a Franciscan priest. After that he was frequently deployed at embassies by popes Eugene-IV and Nicholas-V. He was taught by St. Bernardine of Siena. He led a crusade against the invading Ottaman Empire, at the siege of Belgrade, with the Hungary military commander John Hunyadi. There is also a story that once he led a small division of Christian army against the large army of Turks. When the Christian soldiers were about to retreat from the battle field, he took a crucifix in his hand and led the Christian army and won the battle. He also worked for the reform of the Order of Friars Minor. Pope Callixtus-II sent him for a crusade. He survived the battle but fell victim to Bubonic Plague and died on October 23, 1456. In his name two Spanish Missions were founded by Franciscan Friars namely Mission San Juan Capistrano, in the present day South California and Mission San Juan Capistrano in San Antonio in Texas.
St. John of Capistrano was canonized by Pope Benedict-XIII in the year 1724. He is the patron saint of Jurists and Military Captains.
Born : 1386 at Capistrano, Italy
Died:
23 October 1456 at Villach, Hungary of natural causes
Canonized:
16 October 1690 by Pope Alexander VIII
Patronage:
judges, jurists
• lawyers
• military chaplains
• military ordinariate of the Philippines
• Belgrade, Serbia
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment