2020-10-29
மறைசாட்சி ஃபெருடியஸ் Ferrutius
பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு
இறப்பு
4 ஆம் நூற்றாண்டு,
மைன்ஸ் Mainz, ஜெர்மனி
இவர் உரோம் படைவீரராக பணியாற்றியவர். கிறிஸ்துவைப்பற்றி அறிவித்தவர். நற்செய்தியை பறைசாற்றிய காரணத்திற்காக அரசன் தியோக்ளேசியன் (Diokletian) ஃபெருடியசை பிடித்து சிறையிலடைத்தான். கிறிஸ்துவ மதத்தை விட்டு விலகும்படி கட்டாயப்படுத்தினான். அவனின் சொற்களுக்கு பணியாததால், ஃபெருடியசை கொலை செய்யக் கூறினான். கடவுளின் விசுவாசத்திலிருந்து இறுதி வரை விலகாததால் கொலை செய்யப்பட்டார். பின்னர் மைன்ஸ் நகர் பேராயர் லூலூஸ் (Lullus) ஃபெருடியஸின் உடலை கொண்டு வந்து 778 ஆம் ஆண்டு புனித பெனடிக்ட் துறவறச் சபையில் வைத்தார். ஜெர்மனியிலுள்ள வீஸ்பாடனில் (Wiesbaden) இவரின் பெயரில் ஆலயம் ஒன்றும் உள்ளது.
செபம்:
உயிரளிக்கும் ஊற்றே! உம்மை பின்பற்றியதற்காக தன் உயிரை ஈந்த மறைசாட்சி ஃபெருடியசைப்போல, இம்மண்ணில் உயிர்நீத்த மறைசாட்சியாளர்களை கண்ணோக்கியருளும். அவர்கள் அனைவரையும் உம் வான்வீட்டில் சேர்த்து, உம்மை முகமுகமாய் தரிசிக்கும் பேற்றைத் தந்தருளும். எமக்காக இவர்கள் பரிந்து பேசிடவும், அதன் வழியாக நாங்கள் உமக்கு சாட்சியம் பகரவும் எம்மை தயாரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment