† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 29)
✠ அருளாளர் மைக்கேல் ருவா ✠
(Blessed Michele Rua)
டான் போஸ்கோவின் சலேசியன் சபை இணை நிறுவனர்:
(Co-founder of the Salesians of Don Bosco)
பிறப்பு: ஜூன் 9, 1837
டூரின், சார்டினியா அரசு
(Turin, Kingdom of Sardinia)
இறப்பு: ஏப்ரல் 6, 1910 (வயது 72)
டூரின், இத்தாலி
(Turin, Italy)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: அக்டோபர் 29, 1972
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 29
அருளாளர் மைக்கேல் ருவா, ஒரு இத்தாலிய கத்தோலிக்க குருவும், புனிதர் ஜான் பாஸ்கோவின் மாணவர்களுள் ஒருவரும் ஆவார். சலேசிய சபையின் முதல் தலைமை அதிபரும் (Rector Major of the Salesians) இவரேயாவார்.
கி.பி. 1837ம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள தூரின் (Turin) என்ற இடத்தில் ஜூன் 9ம் நாள் பிறந்த இவர், ஒன்பது சகோதாரர்களுள் இளையவராவார்.
ஆயுத தொழிற்சாலை ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றிய "ஜியோவன்னி பட்டிஸ்டா" (Giovanni Battista) இவரது தந்தை ஆவார். "ஜியோவன்னா மரிய ருவா" (Giovanna Maria Rua) இவரது தாயார் ஆவார்.
கி.பி. 1845ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2ம் தேதி, இவரது தந்தையார் இறந்ததும், இவரது தாய்க்கு அதே ஆயுத தொழிற்சாலையிலேயே பணி கிடைத்தது. விதவைத் தாயாருடன் வாழ்க்கையைத் தொடங்கிய மைக்கேல், 'கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களின் சகோதரர்கள்' (Brothers of the Christian Schools) நடத்திய பள்ளிக்கூடம் ஒன்றில் தமது ஆரம்பக் கல்வியை கற்றார்.
தமது 15ம் வயதில் தனது படிப்புகளை முடித்தபோது, கத்தோலிக்க குருவான புனிதர் டோன் ஜான் போஸ்கோ அவர்களால் தொடங்கப்பட்ட இளைஞரணியில் சேர்ந்தார். அப்போது மைக்கேல் ருவாவும், ஜான் போஸ்கோவும் நண்பர்கள் ஆனார்கள்.
கி.பி. 1861ம் ஆண்டு, தொன் ஜான் போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையில் இளைஞர்களுக்குப் பணியாற்றும் பணியில் ஈடுபட்டார். புனித சலேசிய சபை உருவாவதற்கு தொன் போஸ்கோவிற்கு பெருமளவில் உதவி செய்தார். அப்போது இளைஞர்களுக்கு எல்லாவிதங்களிலும் தாயாக இருந்து உதவிசெய்த ஜான் போஸ்கோவின் தாயார் நவம்பர் மாதம் கி.பி. 1856ல் இறந்ததால், இளைஞர்களுக்கு தாய் இல்லை என்ற எண்ணத்தைப் போக்க ரூவா தன் தாயை, இளைஞர்களுக்கு தாயாக இருந்து பணிபுரிய அர்ப்பணித்தார்.
இந்த இளைஞரணியானது திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை உணர்ந்து, டோன் போஸ்கோவிற்கு துணையாக, தனது 22ம் வயதில் கி.பி. 1860ம் ஆண்டு ஜூலை 29ம் நாளன்று குருத்துவ அருட்பொழிவு பெற்று இளைஞர்களுக்கு ஞான மேய்ப்பராக பணியாற்றினார்.
தமது இருபத்தாறாம் வயதில் டூரின் நகரின் வெளியே அமைந்துள்ள "மிரபெல்லோ" (Mirabello) என்ற இளைஞர்கள் சமூக அமைப்பிற்கு தலைவராக பொறுப்பேற்றார். "மரியாளின் புதல்விகள்" (Daughters of Mary) என்றும், "கிறிஸ்தவர்களின் சகாயம்" (Help of Christians) என்றும் அழைக்கப்படும் கி.பி. 1872ம் ஆண்டு நிறுவப்பட்ட "சலேசிய அருட்சகோதரிகள்" (Salesian Sisters) சபைக்கு இயக்குனராக பணியாற்றினார்.
ஜான் போஸ்கோவின் பயணங்களில் மைக்கேல் நிலையான உடனிருப்பவராக - தோழராக இருந்தார். கி.பி. 1865ல் சலேசிய சபையின் தலைவராக பொறுப்பேற்றார். ஜான் போஸ்கோவின் திட்டவட்ட கோரிக்கையின் பேரில், திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) ரூவாவை ஜான் போஸ்கோவின் வாரிசாக நியமித்தார்.
கி.பி. 1888ம் ஆண்டு, தொன்போஸ்கோ இறந்தவுடன் இச்சபையை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை (Rector Major) திருத்தந்தையின் ஒப்புதலுடன் மைக்கேல் ருவா ஏற்றுக்கொண்டார். பின்பு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் இச்சபை சலேசிய சபையாக அறிவிக்கப்பட்டது. பின்பு உலகம் முழுவதிலும் சென்று இச்சபை தொடங்கப்பட்டது.
பிறகு தனது 73ம் வயதில், கி.பி. 1910ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 6ம் நாள், இத்தாலியிலுள்ள டூரின் என்ற நகரில் மைக்கேல் ருவா இறந்தார். தொன் போஸ்கோ இறந்தபோது 57 ஆக இருந்த சபைக் குழுமங்கள் (Communities) 345 சபைக் குழுமங்களாக பெருகின. 773 ஆக இருந்த சலேசியர்கள் 4000 ஆக பெருகினர். 6 ஆக இருந்த சபை மாநிலங்கள் 34 மாநிலங்களாக (Provincialate) 33 உலக நாடுகளில் நிறுவப்பட்டு, பல்கிப் பெருகின.
இவருக்கு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1972ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 29ம் நாள், முக்திபேறு பட்டம் (Blessed) கொடுக்கப்பட்டது. இன்று வரை "Don" என்ற பெயரிலேயேதான் சலேசிய குழுமங்கள் அழைக்கப்படுகின்றன.
† Saint of the Day †
(October 29)
✠ Blessed Michele Rua ✠
Priest, Salesian of Don Bosco:
Born: June 9, 1837
Turin, Kingdom of Sardinia
Died: April 6, 1910 (Aged 72)
Turin, Kingdom of Italy
Venerated in: Roman Catholic Church
Beatified: October 29, 1972
Pope Paul VI
Major shrine: Basilica di Maria Aiuto dei Cristiani, Turin
Feast: October 29
Blessed Michele Rua was an Italian Roman Catholic priest and professed member of the Salesians of Don Bosco. Rua was a student under Saint John Bosco and was also the latter's first collaborator in the order's founding as well as one of his closest friends. He served as the first Rector Major of the Salesians following Bosco's death in 1888. He was responsible for the expansion of the Salesians and the order had grown to a significant degree around the world at the time he died. Rua served as a noted spiritual director and leader for the Salesians known for his austerities and rigid adherence to the rule. It was for this reason that he was nicknamed, 'the living rule'.
Life:
Michael Rua was born in Turin on 9th June 1837, the last of nine children. His father, who worked in a munitions factory, died when he was only eight. Michael would have gone to work in the arms factory in Turin, but in 1852 he met with Don Bosco, who suggested Michael join his school at the Oratory and he did.
“We two will go halves in everything”:
One day Don Bosco was giving out little medals and Michael, who was late and at the end of the line, though he heard him say, “Take, Michelino”. The priest stood there but he didn’t give him anything. Then he said to him, “We two will go halves in everything”. And that was how it turned out. Michael went on to become the founder’s close friend and associate. He was among the first few with whom Don Bosco shared the idea of forming a Salesian Society. The order was called after Saint Francis de Sales (1567-1622), who had a genius for converting souls through kindness and persuasion.
Inspired by Don Bosco:
Michael Rua joined the other first Salesians at seventeen, and, inspired by Don Bosco’s example, he spent his days at the youth club, morning and evening classes, supervising theatre or music rehearsals, gymnastics, lively outdoor games, solitary study, along with frequent reception of the sacraments. “I got much more from observing Don Bosco, even in the humblest of actions,” Rua later said, “than from reading and meditating on a treatise on asceticism.”
Close collaborator:
Rua was Don Bosco’s closest collaborator in the development of the new Salesian congregation over the next thirty-six years. He made his first profession in 1855, was the first spiritual director of the Society at the age of 22 years (1859), was ordained a priest in 1860. At 26 became the rector of the college at Mirabello in Emilia-Romagna, the first Salesian foundation outside Turin.
Illness:
In 1865, Michael returned to Turin to rejoin Don Bosco, who was ill and over-burdened with work. He re-organized the house at Valdocco, a youth club with a boarding school of seven hundred students whose spirit had declined. With remarkable tact, he restored good discipline. But in July 1868, Don Rua’s constant activity got the better of his strength and he was confined to bed with a sudden attack of peritonitis. The doctors gave him only a few hours to live. But Don Bosco asserted, “Listen, Don Rua, even if you were thrown out the window just as you are, I assure you that you won’t die.” A few days later, despite the doctor’s prognosis, the patient recovered.
Differences in character:
Although the two men were close, each kept his own personality and sometimes were in opposition. Where Don Bosco would focus on the work of the day and be audacious in his projects, Don Rua was prudent, calculating, and foresaw and forestalled the problems he saw coming down the track.
The successor to Don Bosco:
When Don Bosco died, Pope Leo XIII, honouring his request, designated Michael as his successor.
“The Living Rule”:
Nicknamed “The Living Rule” because of his austere fidelity, Don Michael Rua was also known for his fatherliness and goodness. As the numbers of members and communities increased, he sent Salesians all over the world, showing special care for the missionary expeditions. In the long and difficult journeys which he undertook to visit the Salesian works in Europe and in the Middle East, he was a constant source of comfort and encouragement, always taking inspiration from the Founder with words like: “Don Bosco used to say… Don Bosco used to do it this way… Don Bosco wanted…”
Years of suffering:
These were years of great suffering. In 1895, a Salesian priest was murdered by a half-crazy student. Five months later, Bishop Lasagna, one of the great hopes of the Salesian Society, his secretary, and four sisters of Mary Help of Christians, were victims of a train accident. Then, a flood in Argentina destroyed the material results of ten years of missionary work. In France, the so-called Law of Associations (June 2, 1901) required the closing and sale of the Salesian establishments. In 1907, a scandal in a high school stirred up a violent storm of protest against the Salesians all across Italy. He vowed to make a pilgrimage to the Holy Land if the honour of his religious family was fully restored. It was, and he fulfilled his vow in 1908.
Growth of the society, death, and influence:
When Michael Rua died on 6th April 1910 at the age of 73, the Society had grown from 773 to 4000 Salesians, from 57 to 345 communities, from 6 to 34 Provinces in 33 countries. His body is venerated in the crypt of the Basilica of Mary Help of Christians at Valdocco in Turin. Don Rua was beatified by Pope Paul VI on October 29, 1972. Today the Salesians are one of the third largest missionary societies in the world, with about 18,000 members and some are involved in the work of the Curia in Rome.
No comments:
Post a Comment