இன்றைய புனிதர்:
(08-10-2020)
புனித பெலாகியா
St. Pelagia
நினைவுத் திருநாள் : அக்டோபர் 8
பிறப்பு :14 ஆம் நூற்றாண்டு(?)
இறப்பு : 14 ஆம் நூற்றாண்டு, அந்தியோக்கியா
இவர் மார்கரேட் என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். இவர் அந்தியோக்கியாவில் சிறந்த நடிகையாக இருந்தார். அப்போது பெலாகியா தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்தார். அச்சமயத்தில் ஒருநாள் அந்தியோக்கியாவில் நடித்து கொண்டிருக்கும் போது குருவாக இருந்த புனித நானூஸ் (St. Nannus) அவரைக் கடந்து சென்றார். அவரைப் பார்த்த பெலாகியாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது. உடனே நடிக்கும் பணியை விட்டு விட்டு , நானூஸ் போதித்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்று, அவரின் மறையுரையை கேட்டார்.
அம்மறையுரையானது இவரின் மனதை மிகவும் பாதித்தது. அவர் மனமுடைந்து, நானூஸ் அவர்களிடம் மனம் நொந்து அழுது, தனது வேதனைகளை பகிர்ந்தார். பின்னர் மனமாற்றம் பெற்று, திருமுழுக்குப் பெற்று, தனது நடிகைப் பணியை விட்டு விட்டு, கடவுளுக்காக வாழ முடிவெடுத்தார்.தன்னிடமிருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்கு கொடுத்தார். அந்தியோக்கியாவிலிருந்து வெளியேறி, ஆண்கள் உடுத்தும் துறவற உடையை அணிந்து வாழ்ந்தார்.
பின்னர் எருசலேமிலிருந்த ஒலிவியட் (Olivette) என்றழைக்கப்பட்ட மலையில் குகையில் வாழ்ந்த துறவிகளுடன் சேர்ந்து, தானும் ஓர் துறவியாக வாழ்ந்தார். மிகக் கடினமான ஏழ்மையை தன் வாழ்வின் மனமாற்றத்திற்குப்பின் வாழ்ந்தார். இவர் அங்கிருந்தவர்களால் " தாடியில்லா துறவி" (Beardless Monk)என்றழைக்கப்பட்டார். இவர் தன்னுடன், தன்னைப் போன்று வாழ்ந்த, சில இளம்பெண்களின் வாழ்வையும் மாற்றி, அவர்களையும் துறவற வாழ்வை வாழ அழைத்தார். இறுதியில் ஏறக்குறைய 15 இளம் பெண்களும் இவருடன் சேர்ந்து, துறவிகளாக வாழ்ந்து, தங்களின் வாழ்வின் இறுதிவரை, கடவுளுக்காக வாழ்ந்தார். தங்களின் பேச்சிலும், செயல்களிலும் இறைவனை மட்டுமே முன்வைத்து வாழ்ந்தனர்.
செபம்:
வாழ்வை மாற்றுபவரே எம் இறைவா! தன்னுடைய அழகு, பணம், பொருள் அனைத்தையும் குப்பையென கருதி உம்மை பற்றிக்கொண்டு, மனமாற்றம் பெற்று, வாழ்ந்த, புனித பெலாகியாவைப்போல, நாங்களும் எங்களின் தீயச் செயல்களிலிருந்து மனமாற்றம் பெற்று, எம்மால் இயன்றவரை, மற்றவர்களுக்காகநாங்கள் வாழ, எம்மை மாற்றியருளும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (08-10-2020)
Saint Pelagia the Penitent
26
Free email newsletter
St. Pelagia was head of a dance troupe in Palestinian Antioch, and lived a life of frivolity and prostitution. One day while she was still a dancer, Pelagia was passing by a church dressed with her very elegant and provocative clothing. Bishop Nonnus of Edessa was preaching at that moment. Even though the parishioners turned their faces away from the sinner, the Bishop noticed her great outer beauty and spiritual greatness. Later that day, he prayed in his cell for the sinner and learned that as she took care of the adornment of her body to appear beautiful, he and his fellow priests should put more work in adorning their wretched souls.
The following day Pelagia went to hear St. Nonnos preach. He was talking about the Last Judgement and its consequences. She was so moved and impressed with the sermon, that with tears of repentance in her eyes, she asked the Bishop to baptize her. Seeing the sincerity of her wishes and repentance, he agreed.
That same night the devil appeared to Pelagia urging her to return to her former life. She started praying and signed herself with the Sign of the Cross, after which the devil vanished.
She gave all her wealth and valuables to St. Nonnos so that he could distribute them and give them to aid the poor. The bishop then ordered their distribution and said: "Let this be wisely dispersed, so that these riches gained by sin may become a wealth of righteousness." She left Antioch dressed in man’s clothes.
After that, she journeyed to the Mount of Olives in Jerusalem, where she became a hermitess and lived in a cell disguised as the monk Pelagius. There she lived in great austerity, performing many penances in a ascetic seclusion which helped her attain many spiritual gifts. At her death she was buried in her cell. She was known as “the beardless monk” until her sex was discovered when she died.
Even though a young teenager existed and suffered martyrdom at Antioch back in the fourth century, the story described here is a pious fiction that eventually helped arise more similar stories but under different names.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment