† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 8)
✠ புனிதர் தாய்ஸ் ✠
(St. Thaïs)
மனம்திருந்திய விலை மகள்:
(Repentant Courtesan)
பிறப்பு: கி.பி. நான்காம் நூற்றாண்டு
இறப்பு: கி.பி. நான்காம் நூற்றாண்டு
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 8
புனிதர் தாய்ஸ், நான்காம் நூற்றாண்டில் “ரோம அலெக்சாண்ட்ரியா” (Roman Alexandria) மற்றும் “எகிப்திய பாலைவனப்” பகுதியைச் (Egyptian desert) சேர்ந்தவரும், ஒரு மனம் திருந்திய தேவதாசியுமாவார்.
சுயசரிதை :
இவர் நான்காம் நூற்றாண்டில், ரோமப் பேரரசின் கீழிருந்த எகிப்தில் வாழ்ந்ததாக அறியப்படுகின்றார். அவரது சரித்திரம், கிரேக்க திருச்சபையின் புனிதர்களின் வாழ்க்கையுடனான (Hagiographic) இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய இரண்டு வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் இன்னும் உள்ளன. முதலாவது, கிரேக்க மொழியிலிருந்ததாகவும், பின்னர் ஐந்தாம் நூற்றாண்டில் லத்தீனில் மொழிமாற்றம் செய்யப்பட்டதாகும். இரண்டாவது, கி.பி. 1123ம் ஆண்டு, நமக்கு இடைக்கால இலத்தீனிலிருந்து (Medieval Latin) வந்ததாகும். தாய்ஸ், (Maurolycus) மற்றும் (Greven) மூலம் கிரேக்க மறைசாட்சியாகவும் அறியப்படுகிறார். தாய்ஸ் உள்ளிட்ட எகிப்தின் பாலைவனத்தைச் சேர்ந்த புனிதர்கள் மற்றும் துறவிகளின் வாழ்க்கை வரலாறு, "பாலைவன தந்தையர்களின் வாழ்க்கை" (Vitae Patrum [Lives of the Desert Fathers]) எனும் நூலிலிருந்து பெறப்பட்டது.
தாய்ஸ், ஆரம்ப காலத்தில் அலெக்சாண்ட்ரியா பெருநகரத்தில் வாழ்ந்த அழகான, வசதி படைத்த, தேவதாசி ஆவார். இதனால், இவர் திருச்சபையின் பார்வையில் ஒரு பொதுவான பாவியாகவே பார்க்கப்பட்டார். பின்னர், கிறிஸ்தவ சமயத்தைப் பற்றி விசாரித்து அறிந்துகொண்டு மனம் மாறிய தாய்ஸ், கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அவரது மன மாற்றத்திற்கு காரணம் ஒரு துறவி என்று சொல்லப்பட்டாலும், அந்த துறவி யார் என்பது தெளிவாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. எகிப்திய ஆயர் “புனித பாப்னுஷியஸ்” (St. Paphnutius), “புனித பாலைவனத்து அந்தோனியாரின்” (St. Anthony of desert) சீடர் “புனித பெஸ்ஸாரியன்” (St. Bessarion) மற்றும் “நைல் டெல்ட்டாவின்” (Bishop in the Nile Delta) ஆயர் “புனித செரபியன்” (St. Serapion) ஆகிய மூன்று துறவியரில் ஒருவரே தாய்ஸ் மனம் மாற காரணமானவர்கள் என்று அறியப்படுகிறது.
அவரது மனமாற்றத்தை ஏற்றுக்கொண்ட திருச்சபை, அவரை ஒரு அருட்சகோதரிகளின் பள்ளியில் அனுமதித்தது. அங்கே அவர் இருந்த மூன்று வருடங்களும் அவர் தனிமையிலே காலம் கழித்தார். தமது பாவத்திற்காக வருந்தி, கடுமையான தவமிருந்தார். அவர் இறப்பதற்கு முன்னர், பதினைந்து நாட்களே அங்கிருந்த அருட்சசோதரிகளுடன் சேர்ந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.
† Saint of the Day †
(October 8)
✠ St. Thais ✠
Repentant Courtesan:
Born: 4th Century AD
Died: 4th Century AD
Venerated in:
Roman Catholicism,
Eastern Orthodox Church
Feast: October 8
When a saint is canonized today, his or her historical background is first thoroughly investigated. Centuries ago, when it was local bishops who approved the cult of saintly people, the approach was not so scientific. Thus certain persons came to be popularly venerated as saints about whose holiness or even whose existence there have since been some doubts.
For instance, in the eastern Christian churches, there is a feast on October 8 of St. Thais, a reformed prostitute. The Roman Martyrology (the list of saints drawn up for the Latin or western church) does not commemorate her.
The traditional story of the conversion of Thais is nevertheless fascinating and deserves to be recounted. Thais, the legend tells us, lived in Egypt in the fourth century. She had been brought up a Christian, but had foregone all standards of Christian morality, shrewdly selling her physical charms, and becoming a woman of wealth and notoriety.
Now, this was also the century when Egypt was experiencing its monastic revolution. Thousands of Christian men and women were inspired to flee to the deserts and become monks or nuns. One of these leading Egyptian monks decided to see if Thais could be converted from her life of sin to a life of penance. The monk is usually identified as the aged St. Paphnutius; but some versions of the legend call him Serapion; others, Bessarion.
Paphnutius, runs the story, doffed his religious habit for the time being, and donning secular clothes, went to the city (probably Alexandria) and knocked at the prostitute’s door. When she let him in, he said he wanted to speak to her, but in a more private place.
“What is it you fear?” she said. “If men, no one can see us here; but if you mean God, no place can hide us from His eye.”
The disguised monk was amazed. “You know that there is a God?”
“Yes,” she answered, “and I moreover know that Heaven will be the portion of the good and everlasting; Hell, the punishment of the wicked.”
“Is it possible,” he continued, “that you should know these truths and yet dare to sin and draw so many after you, before Him who knows and will judge all things?” As he continued to speak with the aid of the Holy Spirit, Thais began to see the inconsistency of her situation. She could recite the basics of the Faith, yet her actions contradicted it.
Finally, she broke down in tears. Throwing herself on her knees, she begged him, “Father, tell me what to do.” He told her he would return. Meanwhile, she promised to rid herself of her possessions. She hastened to take out into the public square her furniture, jewels, and other items acquired by sin. After inviting all who had given her these presents to join her in penance, she set fire to the pile. Then she hastened to the place of the meeting designated by Paphnutius.
Paphnutius took her to a monastery of nuns. There he prescribed a stringent penance. She was to be locked into a sealed cell and be given only bread and water. For prayers, he directed that she simply face the east and repeat, again and again, the petition “Thou who hast created me, have pity on me.”
It was a painful assignment, but Thais accepted it in good grace and mourned her way to holiness. After three years, Paphnutius, having consulted with other monastic leaders, released her. “God,” he now assured her, “has blotted out your sins.” Thais then went to join the rest of the nuns who lived the community life, but God took her to Himself two weeks later.
Catholic scholars are inclined today to consider the story of Thais, whatever her actual history, more fiction than fact, and to be repelled by the mode of penance imposed on her, however obediently accepted.
However, whether parable or fact or a little of both, the tale of St. Thais simply restates, does it now, the doctrine of the infinite mercy that God is ready to show to His prodigal sons and daughters.
~ Father Robert F. McNamara
No comments:
Post a Comment