புனித_மேக்னுஸ் (ஐந்தாம் நூற்றாண்டு)
நவம்பர் 05
இவர் (#St_Magnus) இத்தாலியைச் சார்ந்தவர்.
மிலன் நகரின் பேராயரான இவர் கி.பி 518 முதல் 530 வரையிலான காலக்கட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்தார். குறிப்பாக இவர் சிறைக் கைதிகளுக்குத் தாராளமாக உதவி செய்தார்.
இவருடைய காலத்தில் இத்தாலியைத் தியோடரிக் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தொடக்கத்தில் இவருக்கு ஆதரவு தந்தாலும், பின்னாளில் அவன் இவரை எதிர்க்கவும், இறுதியில் கொலை செய்யவும் துணிந்தான்.
இவர் 530 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment