புனித_மெக்டில்டா (1241-1298)
நவம்பர் 19
இவர் (#StMechtildeOfHelfta) ஜெர்மனியில் உள்ள ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் பிறந்ததும், "இவர் வலுக்குறைந்தவராக இருக்கிறார். அதனால் இவர் நீண்ட நாள்களுக்கு உயிர் வாழமாட்டார்" என்று எல்லாரும் சொன்னார்கள். அப்பொழுது இவருடைய பெற்றோர்தான் இவரை ஓர் அருள்பணியாளரிடம் கொண்டு சென்று, இவருக்குத் திருமுழுக்குக் கொடுக்கச் சொல்லி இவரது உயிரைக் காப்பாற்றினர்.
இவருக்கு ஏழு வயது நடக்கும்போது இவருடைய பெற்றோர் இவரை ரோடர்ஸ்டோர்ஃப் (Rodersdorf) என்ற இடத்தில் இருந்த புனித பெனடிக்ட் துறவற மடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தனர். அங்கு இவர் கல்வியிலும் தாழ்ச்சியிலும் இறைப்பற்றிலும் சிறந்து விளங்கி வந்தார்.
1258 ஆம் ஆண்டு இவர் ஹில்ப்டா என்ற இடத்தில் இருந்த துறவுமடத்திற்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிவந்தது. அங்கு மனமுவந்து ஏற்று சென்ற இவர், ஆசிரியராகவும் பாடற்குழு தலைவராகவும் பணியாற்றினார். அந்த இடத்தில் இவருடைய மூத்த சகோதரிதான் தலைமை அருள் சகோதரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பிறகு இவர் நவ கன்னியர்களுக்குப் பயிற்சியாளராக உயர்ந்தார். அப்பொழுது இவரிடம் பயிற்சி பெற வந்தவர்தான் புனித கெர்த்ரூத். அவருடைய உதவியுடன் The Book of Special Grace என்ற தன் வரலாற்று நூலை இவர் எழுதினார்.
இவருக்குப் பலரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன; அவற்றையெல்லாம் துணிவோடு எதிர் கொண்ட இவர், மிகச் சிறந்த ஆன்மிக வழிகாட்டியாக விளங்கினார். இவரிடம் ஆலோசனை கேட்பதற்குப் பல தரப்பிலிருருந்தும் மக்கள் வந்தார்கள்.
இவ்வாறு ஆண்டவருக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து, நல்லதோர் ஆலோசகராக விளங்கிய இவர் 1298 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
இவரிடத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் வேண்டிக்கொண்டால் நலம் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது.
Saint Mechtilde of Helfta
Also known as
• Mechtilde of Hackeborn-Wippra
• Mechtilde of Hackenborn
• Mechtilde of Magdaburg
• Mathilda, Mathildis, Matilda, Maud, Mechthild, Mechtild, Mechtildis
Additional Memorial
26 February in some Benedictine and Cistercian monasteries
Profile
Born to a pious, powerful Thuringian noble family; her older sister was a nun. Convent-educated from age seven, Mechtilde became a nun at Rodersdorf, Switzerland. She moved to the Helfta monastery in 1258 where her sister served as abbess. Teacher and choir director at the convent school at Helfta. Visionary and mystic. Novice mistress for Saint Gertrude the Great who wrote The Book of Special Grace about Mechtilde's teachings; she was initially terrified that the book might cause trouble, but Christ appeared to her in prayer and told her not to worry. She became a much sought spiritual advisor to her sister nuns, laity and learned Dominicans. May have been the inspiration for the character Matelda in Dante's Purgatorio.
Born
c.1241 at her family's castle of Helfta near Eisleben, Saxony, Germany
Died
19 November 1298 at Helfta monastery of natural causes
Patronage
against blindess (one well-known miracle was healing the blindness of a nun)
Representation
• dove on a book
• healing a blind nun
• receiving a vision of Mary
• with Saint Gertrude the Great
No comments:
Post a Comment