புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 November 2020

இன்றைய புனிதர்2020-11-19தூரிங்கன் நகர் துறவி எலிசபெத் Elisabeth von Thüringen

இன்றைய புனிதர்
2020-11-19
தூரிங்கன் நகர் துறவி எலிசபெத் Elisabeth von Thüringen
பிறப்பு 
1207, 
பிரேஸ்பூர்க்Preßburg, ஹங்கேரி(?)
இறப்பு 
17 நவம்பர் 1231, 
மார்பூர்க் Marburg, ஜெர்மனி
புனிதர்பட்டம்: 27 மே 1235, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
பாதுகாவல்: ஹெஸ்ஸன் Hessen, தூரிங்கன் நகர், காரிதாஸ் நிறுவனங்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள், தேவையிலிருப்போர்

இவர் ஹங்கேரி நாட்டு அரசர் 2 ஆம் அந்திரேயாஸ் என்பவரின் மகளாக பிறந்தார். அரசர் 4 ஆம் லூட்விக்(Ludwig IV) என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். இவருக்கு 3 குழந்தைகள் பிறந்தது. பிறகு தன் கணவர் 1227 ல் இறந்துவிட்டார். அச்சமயத்தில் அரசர் 2 ஆம் பிரடரிக் Friedrich II சிலுவைப்போரை தொடர்ந்தான். அப்போது ஏழைகள் பலர் கைவிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். எலிசபெத் ஏழைகளின் மேல் இரக்கம் காட்டி உணவு மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறைக் காட்டினார். இதனால் தன் கணவருடன் பிறந்த சகோதரர் ஹென்றி என்பவரால் காயப்படுத்தப்பட்டார். அச்சகோதரர் எப்போதும் எலிசபெத்தை வஞ்சித்து கொண்டே இருந்தார். 

இருப்பினும் எலிசபெத் ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருந்தார். விண்ணக காரியங்களைப் பற்றி சிந்திப்பதில் வேரூன்றிருந்தார். ஏழ்மையான வாழ்வை தேர்ந்துக்கொண்டார். ஹென்றியின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. இதனால் மனமுடைந்த எலிசபெத் தன் ஆன்மீக வழிகாட்டியாக இருந்த கான்ராட் Konrad குருவிடம் ஆலோசனை பெற்று, வீட்டைவிட்டு வெளியேறினார். 20 வயதான எலிசபெத் ஹெஸ்ஸனில் உள்ள மார்பூர்கில் மருத்துவமனை ஒன்றை கட்டினார். 

அவர் அம்மருத்துவமனையிலே நோயாளிகளை கவனித்து வந்தார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை தன் வாழ்வாக வாழ்ந்தார். பின்னர் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து 1228 ஆம் ஆண்டு துறவற வார்த்தைப்பாடுகளை பெற்றார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். தான் இறக்கும் வேளையில் கூட ஏழை ஒருவருக்கு உதவி செய்தார். இவரின் உடல் மார்பூக்கிலுள்ள பிரான்சிஸ் மருத்துவமனையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் கல்லறைமேல் இன்று பேராலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 


செபம்:
என்றென்றும் பேரன்பை நிலையாக கொண்டுள்ள தந்தையே! ஏழைகளில் கிறிஸ்துவை கண்டு பணிவிடை செய்ய ஹங்கேரி நாட்டை சேர்ந்த புனித எலிசபெத்துக்கு கற்றுக் கொடுத்தீர். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்கள் ஏழைகளுக்கும் துன்புறுவோர்க்கும் எந்நாளும் அன்பு தொண்டாற்ற அருள்புரியும்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

• திருக்காட்சியாளர் டேவிட் David von Augsburg
பிறப்பு: 1200 ஆக்ஸ்பூர்க், ஜெர்மனி
இறப்பு: 19 நவம்பர் 1272, ஜெர்மனி


• ஹாக்கேபோர்ன் நகர் துறவி மெஷ்டில்ட் Mechthild von Hackeborn
பிறப்பு: 1241, ஹாக்கேபோர்ன் Hackeborn, சாக்சன் அன்ஹால்ட்
இறப்பு: 19 நவம்பர் 1299, ஹெல்ஃப்டா Helfta, சாக்சன் அன்ஹால்ட் Sachsen

No comments:

Post a Comment