புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 November 2020

✠ புனிதர் மலாச்சி ✠(St. Malachy)அர்மாக் பேராயர்:(Archbishop of Armagh)நவம்பர் 3

† இன்றைய புனிதர் †
(நவம்பர் 3)

✠ புனிதர் மலாச்சி ✠
(St. Malachy)

அர்மாக் பேராயர்:
(Archbishop of Armagh)
பிறப்பு: கி.பி. 1095
அர்மாக், அயர்கியல்லா, அயர்லாந்து
(Armagh, Airgíalla, Ireland)

இறப்பு: நவம்பர் 2, 1148
கிளேர்வாக்ஸ், சாம்பேன், ஃபிரான்ஸ்
(Clairvaux, Champagne, France)

புனிதர் பட்டம்: ஜூலை 6, 1190 
திருத்தந்தை 3ம் கிளமெண்ட்
(Pope Clement III)

பாதுகாவல்:
அர்மாக் உயர்மறைமாவட்டம் 
(Archdiocese of Armagh)
டான் மற்றும் கொன்னர் மறைமாவட்டம்
(Diocese of Down and Connor)

நினைவுத் திருநாள்: நவம்பர் 3

புனிதர் மலாச்சி, ஒரு ஐரிஷ் புனிதரும், “அர்மாக்” உயர்மறைமாவட்ட (Archbishop of Armagh) பேராயரும் ஆவார். இவரே புனிதராக அருட்பொழிவு பெற்ற முதல் அயர்லாந்தின் கத்தோலிக்க குடியாவார்.

அயர்லாந்து நாட்டில், கி.பி. 9ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'வைகிங்' சோதனைகள் தொடங்கின. நாட்டின் மீது படையெடுபுகளும் ஆக்கிரமிப்புகளும் செய்யப்பட்டன; பல துறவு மடங்கள் கொள்ளையடிக்கப்பட்டன; துறவிகள் வாள்முனையில் வைக்கப்பட்டனர்; தேவாலயங்கள் இடிக்கப்பட்டன; நூலகங்கள் எரிக்கப்பட்டன. மதச்சார்பற்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய தடைகள் படையெடுப்பாளர்களால் கொண்டுவரப்பட்டன. புனித பேட்ரிக்கும் பிற ஆதி கிறிஸ்தவ சபைகளும் கடைப்பிடித்த தார்மீக, மத பாரம்பரியங்கள் மற்றும் கிறிஸ்தவ நல்லொழுக்கங்கள் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தன. கி.பி. 11ம் நூற்றாண்டில், அயர்லாந்தின் சில பகுதிகள் பிற சமய சார்புடையவைகளாக மாறின.

கி.பி. 1095ல், பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை துறவற மடத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்ததால், மலாச்சியுசும் அங்கேயே படித்தார். 'இமர்' (Imhar O'Hagan) என்ற துறவு மடாதிபதி இவருக்கு ஞானஸ்நானம் கொடுத்து கல்வி கற்பித்தார். ஐரிஷ் திருச்சபையை சீரமைக்க முயற்சிப்பவர்கள் மீது அனுதாபமும் கருணையும் கொண்டிருந்தார். நீண்ட கற்பித்தலின் பிறகு, புனித செல்லாச் (St Cellach in 1119) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.

கி.பி. 1123ம் ஆண்டு கொனோர் (Conor) நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். மீண்டும் கி.பி. 1129ம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் பல இன்னல்களை சந்தித்தார். தனது பணியை சரியாக செய்ய இயலாததால் கி.பி. 1136ம் ஆண்டு மீண்டும் டவுன் (Down) என்ற நகருக்கு ஆயராக அனுப்பப்பட்டார். பல ஆண்டுகள் தன் ஆயர் பதவியில் சிறப்பாக பணியாற்றியப்பின் சிஸ்டர்சீயன் துறவற சபையை சார்ந்த பெர்னார்டு என்பவருடன் இணைந்து சில துறவற மடங்களைக் கட்டினார்.

பின்னர் மலாச்சி துறவற கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ரோம் நகர் சென்று திருத்தந்தையை சந்திக்க எண்ணினார். அப்போதுதான் கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.

நவம்பர் 2ம் நாள், அனைத்து ஆன்மாக்களின் திருநாளாகையால், நவம்பர் 2ம் தேதி மரித்த இவருடைய நினைவுத் திருநாள், நவம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகின்றது.
† Saint of the Day †
(November 3)

✠ St. Malachy ✠

Archbishop of Armagh:

Born: 1094 AD
Armagh, Airgíalla, Ireland

Died: November 2, 1148
Clairvaux, Champagne, France

Canonized: 1190 AD
Pope Clement III

Feast: November 3

Patronage:
Archdiocese of Armagh, Diocese of Down and Connor

Saint Malachy was an Irish saint and Archbishop of Armagh, to whom were attributed several miracles and an alleged vision of 112 Popes later attributed to the apocryphal (i.e. of doubtful authenticity) Prophecy of the Popes. It is now believed by scholars that this document was a forgery created by Cardinal Girolamo Simoncelli. Saint Malachy was the first native-born Irish saint to be canonised. His brother was Gilla Críst Ua Morgair who later became Bishop Christian of Clogher from 1126 to 1138.

Life:
Máel Máedóc, whose surname was Ua Morgair, was born in Armagh in 1094. St. Bernard describes him as having noble birth. He was baptised Máel Máedóc, which was rendered Malchus in Latin (and subsequently as Malachy in English) and was trained under Imhar O'Hagan, subsequently Abbot of Armagh. Imhar was in sympathy with the aims of those who sought to reform the Irish church, and it was probably through his influence that Malachy became imbued with their principles. After a long course of studies, Malachy was ordained priest by St Cellach (Celsus) in 1119.

Shortly afterwards Cellach made the young priest his vicar. For the next year or two, it was Malachy's duty to administer the diocese of Armagh. He established in all the churches the apostolic sanctions and the decrees of the holy fathers, and the customs and practices the Roman Church. He introduced the Roman method of chanting the services of the canonical hours and instituted a new Confession, Confirmation, the Marriage contract, which those over whom he was placed were either ignorant or negligent. With the consent of Cellach and Imar, he went to study under St. Malchus, who had by this time retired from the archbishopric of Cashel and was settled at Lismore. He spent three years there.

In 1123 the coarb of Bangor Abbey died. Bangor was the principal religious site in the north-east of Ireland. Since he ended his days at Lismore, it may be assumed that he was a friend of Malchus, and of the movement with which he was identified. His successor, who was Malachy's uncle, expressed his willingness to surrender his office and the site of the monastery to his nephew. Malachy became Abbot of Bangor Abbey.

This became an opportunity to implement one of the canons of the Synod of Rathbreasail, which by establishing the diocese of Connor. Cellach, as coarb of Patrick, and consecrated bishop, had been able to organize the diocese of Armagh in accordance with the Rathbreasail plan. With the prestige which belonged to the coarb of Comgall, Malachy, if a consecrated bishop, could probably succeed in organizing the diocese of Connor. In 1124 Malachy journeyed to Bangor, was installed as abbot, and was made bishop by Cellach.

In 1132, he was promoted to the primacy of Armagh.

St Bernard provides many interesting anecdotes regarding St Malachy and highly praises Malachy's zeal for religion both in Connor and Armagh. In 1127, Malachy paid a second visit to Lismore and acted for a time as confessor to Cormac MacCarthy, Prince of Desmond. While Bishop of Down and Connor, Malachy continued to reside at Bangor, and when some of the native princes sacked the two dioceses of Down and Connor, Malachy brought the Bangor monks to Iveragh, County Kerry, where they were welcomed by now King Cormac. On the death of St Celsus (who was buried at Lismore in 1129), St Malachy was appointed Archbishop of Armagh, 1132, which dignity he accepted with great reluctance. Owing to intrigues, he was unable to take possession of his See for two years; even then he had to purchase the Bachal Isu (Staff of Jesus) from Niall, the usurping lay-primate.

St Malachy's influence in Irish ecclesiastical affairs has been compared with that of Boniface in Germany. During three years at Armagh, as Bernard of Clairvaux writes, St Malachy restored the discipline of the Church, grown lax during the intruded rule of a series of lay-abbots, and had the Roman Liturgy adopted. St Malachy worked zealously to restore ecclesiastical discipline, restored marriage, renewed the practices of confession and confirmation, and introduced Roman chants in the liturgy. He was also known for his care to the needy as a miracle worker and healer. In his lifetime, he planted apple trees throughout Ireland during the time of famine.

St Bernard continues: Having extirpated barbarism and re-established Christian morals and seeing all things tranquil, St Malachy began to think of his own peace. He, therefore, resigned the Sees of Armagh and Connor, in 1136 or 1137, but retained as Bishop of Down. He founded a priory of Austin Canons at Downpatrick and was unceasing in his episcopal labours. Early in 1139, he journeyed to Rome, via Scotland, England, and France, visiting St Bernard at Clairvaux, Champagne. He petitioned Pope Innocent II for pallia for the Sees of Armagh and Cashel and was appointed legate for Ireland. On his return visit to Clairvaux he obtained five monks for a foundation in Ireland, under Christian, an Irishman, as superior: thus arose the great Abbey of Mellifont in 1142. St Malachy set out on a second journey to Rome in 1148, but on arriving at Clairvaux, he fell sick and died in the arms of St Bernard, on 2 November 1148.

No comments:

Post a Comment