புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 June 2020

புனித மரியம் திரேசியா சிரமெல் (1876-1926) June 8

ஜூன் 08

புனித மரியம் திரேசியா சிரமெல் (1876-1926)
இவர் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புத்தன்சிராவில் 1876 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26 ஆம் நாள் பிறந்தார். 

இவருடைய குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது; ஆனால், இவருடைய தாத்தாவுக்கு 7 பெண் குழந்தைகள் இருந்ததால், அவர்களுக்குத் திருமணம்  செய்துவைக்கும்போது வரதட்சனை கொடுக்குக் கொடுத்தே ஏழையானது.

இவர் சிறு முதலே ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் இவர் தன்னுடைய வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழலாம் என்று முடிவு செய்தார். இதற்கு இவருடைய தாயார் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், அதாவது 1888 ஆம் ஆண்டு இவருடைய தாயார் இறந்துவிடவே, இவர் கார்மேல் சபையில் சேர்ந்தார். அங்கு இவரால் ஒருசில ஆண்டுகள் மட்டுமே இருக்க முடிந்தது. அதன்பிறகு இவர் அச்சபையிலிருந்து வெளியே வந்தார்.

1914 ஆம் ஆண்டு இவர் "திருக்குடும்பம்" என்ற சபையைத் தோற்றுவித்தார். அச்சபையின் தலைவியாக இருந்து இவர் நோயாளர்களைக் கவனித்துக் கொள்வதும், தனித்துவிடப்பட்டவர்களோடு நேரம் செலவழிப்பதும், ஏழைகளுக்கு உதவி செய்வதுமாக இருந்து வந்தார். 

இவருடைய சபையில் ஏராளமான பெண்கள் சேர்ந்தார்கள். அவர்களுடைய உதவியுடன் இவர் மேற்கண்ட பணிகளைச் செய்து வந்தார். இவர் அடிக்கடி காட்சிகள் கண்டார். அக்காட்சிகள் மூலமாக இவருக்குப் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. இவர் ஐந்து காய வரங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1926 ஆம் ஆண்டில் ஒருநாள் இவருடைய காலில் ஒரு பெரிய மரக்கட்டை விழுந்துவிட்டது. அது இவருக்கு மிகுந்த வேதனையைத் தரவே, சகோதரிகள் இவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை இவருக்குப் பலன் கொடுக்கவில்லை. அதனால் இவர் அதே ஆண்டு ஜூன் 8 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

இவர் இறக்கும்போது, "இயேசு, மரி யோசேப்பே! உங்களுடைய கைகளில் என்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் ஒப்படைக்கிறேன்" என்ற வார்த்தைகளைச சொல்லிக் கொண்டே இறந்தார்.

இவருக்கு 2000 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் அருளாளர் பட்டமும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸால் புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment