இன்றைய புனிதர்
2020-09-12
புனித எல்பே St. Ailbe
பிறப்பு
5 ஆம் நூற்றாண்டு
இறப்பு
528
பாதுகாவல்: கேஷல் Cashel மற்றும் எமிலி Emly மறைமாவட்டங்களுக்கு பாதுகாவலர்
இவர் அயர்லாந்து நாட்டில் மறைபோதகராக பணியாற்றினார். பின்னர் ஆயராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் புனித பாட்ரிக்(Patrick) சபையை சார்ந்தவர். இவர் அல்பேயுஸ்(Albeus) என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக சில வரலாறுகள் கூறுகின்றது. ஜெர்மனியிலுள்ள முன்ஸ்டர் (Münster) என்ற மறைமாவட்டத்திலிருந்த அரசன் ஒருவரால் அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.
இவரிடம் பல கொடுமையான மிருகங்கள் அன்பை நாடி இவரிடம் வந்து செல்லும் என்று சொல்லப்படுகின்றது. அப்போது ஒரு நாள், ஒரு ஓநாய் வந்து இவரின் மார்பில் படுத்துகொண்டு பல மணிநேரம் கழித்தே, அவரைவிட்டு சென்றாக சொல்படுகின்றது. இவர் அயர்லாந்தில் பலரை திருமுழுக்கு கொடுத்து மனந்திருப்பி உள்ளார். இவர் அயர்லாந்து நாட்டு சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்டு, அந்நாட்டு அரசால் கண்டிக்கப்பட்டுள்ளார். அப்போதும் கூட இவர் தனது போதனைகளில் கிறிஸ்துவை முன் வைத்து மறைப்பணி ஆற்றியுள்ளார். இதனால் அந்நாட்டு அரசாங்கங்கள் இவரைக்கொண்டு சென்று, அடர்ந்த காட்டு பகுதியில், விலங்குகளிடையே விட்டுள்ளனர். அச்சமயத்தில் கூட பொறுமையைக் கடைபிடித்து, எளிமையான வாழ்ந்து, தன்னை நாடி வந்த மக்களுக்கு மறையுரையாற்றி அவர்களின்மேல் கரிசனை காட்டி வந்துள்ளார். இவர் அயர்லாந்து மக்களை தன் இதயத்தில் வழிநடத்தினார்.
செபம்:
அன்புத் தந்தையே! நீர் எல்லா உயிர்களையும் நேசிக்க மனிதர்களைப் படைத்தீர். உயிரினங்கள் மேல் அக்கறைகொண்டு அன்பு செய்து அவைகளின் வழியாக நாங்கள் உம்மை காண எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• துறவி டேகன்ஹார்டு Dogenhard
பிறப்பு: 1300, பவேரியா, ஜெர்மனி
இறப்பு: 1374, பிஷோஃபஸ்மைஸ் Bischofsmais, பவேரியா
• முன்ஸ்டர் நகர் ஆயர் கேர்பிரிட் Gerfried von Münster
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, நோட்டிக் Nottich, ஜெர்மனி
இறப்பு: 12 செப்டம்பர் 839 முன்ஸ்டர் Münster, ஜெர்மனி
• உபதேசியார் குயிதோ Guido, Küster
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, பார்பாண்ட் Brabant, பெல்ஜியம்
இறப்பு: 12 செப்டம்பர் 1012, அண்டர்லெக்ட் Anderlecht, பெல்ஜியம்
பாதுகாப்பு: அண்டர்லெக்ட் மறைமாவட்டம், விவசாயிகள், உபதேசியார்
• டிரியர் ஆயர் மாக்சிமினஸ் Maximinus von Trier
பிறப்பு: 280, சிலி Silly, பிரான்ஸ்
இறப்பு: 12 செப்டம்பர் 346(?), பாய்டியர்ஸ் Poitiers, பிரான்ஸ்
பாதுகாவல்: கடல்வழி பயணம் செய்வோர்
No comments:
Post a Comment